இந்தியாவில் முதியோரின் சமுதாயம், பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம்
இந்தியநாட்டு முதிய ஆண்களில் மூன்றில் இரண்டு பங்கும், 90 முதல் 95
சதவிகிதம் வரை முதிய பெண்களும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
மேலும் பெரும்பான்மையான பெண்கள் தனித்து வாழ்கின்றனர். இதனால்
அப்பெண்களின் பொருளாதாரச் சார்பு மிக அதிகமாக உள்ளது. 18 மில்லியன் முதிய
ஆண்களுக்கும் 3.5 மில்லியன் முதிய பெண்களுக்கும் 2001-இல் வேலை
தேவைப்படும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. தற்போது பணியில்
உள்ளவரைக்கொண்டே இக்கணக்கு போடப்பட்டுள்ளது. பெருமளவில் வளங்கள்
பெருகினால்தான் இம்முதியோர்களுக்கு எதிர்காலத்தில் தேவையான வேலை
வாய்ப்பினை உருவாக்கித்தரமுடியும். அதுமட்டுமின்றி (வேலை செய்யாத 55
மில்லியன் முதியவர்களை) போதுமான சேமிப்பின்றி, வேலைவாய்ப்பில்லாத 55
மில்லியன் முதியோர்களைக் காக்க, பணமும் தேவைப்படுகிறது.
2001-ஆம் ஆண்டில், 27 மில்லியன் முதியோர்கள் நோய்வாய்ப்படுவர் என்றும்
அவர்களுக்கு சிறப்பு மருத்துவ வசதிகள் தேவைப்படும் என்றும் ஆய்வறிக்கை
தெரிவிக்கிறது. இத்தகைய மருத்துவ வசதிகள் தரப்படாதபோது, முதியவர்களின்
மருத்துவத் தேவைகளைப் பூர்த்திசெய்யப்படாவிடில் அவர்களின் அடிப்படை
வசதிகளைச் சரிசெய்ய அதிக அளவு நிதி ஒதுக்க வேண்டியிருக்கும். உடல்
உபாதைகள் அதிகரிப்பதும் இயலாமையும் முதுமையின் அறிகுறிகளாகும். 2001-இல்
இந்திய நாட்டில் இருக்கப்போகும் 17 மில்லியன் முதியோரில் பாதிப்பேர்
பார்வை பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். பெரும்பான்மை முதியோர்கள்
பார்வையற்றவர்களாக, வேலை செய்ய இயலாதவர்களாக இருப்பதால், பொருளாதார
ரீதியாக அவர்கள் மற்றவர்களைச் சார்ந்திருப்பார்கள். குடும்பத்தினரின்
ஆதரவு இல்லாதபோது, அரசாங்கத்தின் உதவியை அவர்கள் எதிர்நோக்கி
இருக்கவேண்டிய சூழல் உருவாகிறது. மாநில அரசும், யூனியன் பிரதேசங்களும்,
ஊனமுற்றோருக்கும், ஆதரவற்றோருக்கும் பொருளாதார ரீதியாக உதவுவதற்காக
ஏற்படுத்திய போதும், மாதம் ஒன்றிற்கு ஓய்வூதியத்தொகை (அ) உதவித்தொகையாக
ரூ.30 முதல் ரூ.60 வரை மட்டுமே பெறுகிறார்கள். மேலும் போதுமான
நிதியின்மையால் தகுதியானவர்களில் சிறுபான்மையினரே இத்தகைய உதவியினைப்
பெறுகிறார்கள்.
இந்தியாவில் முதியோர்களை, பலமான குடும்பப் பாசம் மிகவும் வலிமையாகக் கட்டி
வைத்திருக்கிறது. குடும்பத்திலுள்ள முதிய உறுப்பினர்களைப் பேணிப்
பாதுகாக்காதவர்களைச் சமுதாயம் மதிப்பதில்லை. ஆதலினால் குடும்பத்தின் மூத்த
உறுப்பினர்களைப் பாதுகாத்து அவர்களது துன்பங்களைத் தீர்க்கும் வகையில்
குடும்பத்தின் தன்மையை அமைத்துக் கொள்ளுதல் இன்றியமையாதது. முதியோர்களை
மனிதவளம் என்று கொள்ளல் வேண்டும். அவர்களது உயர்ந்த அனுபவ அறிவினையும்,
மிச்சமுள்ள ஆற்றலையும் நாட்டின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக உபயோகித்துக்
கொள்ளவேண்டும். முதியோர்களின் ஆரோக்கியமான பயனுள்ள வாழ்வினுக்கு அரசாங்கம்
ஆவன செய்தல் வேண்டும்.
|
மூலம் : Aging in India: Its Socioeconomic
and Health: By H.B. Chanana and P.P. Talwar, ImplicationsAsia-Pacific
Population Journal, Vol. 2, No. 3 37



