புங்கை
பல வகையான உண்ணதகாத எண்ணெயை உற்பத்தி செய்யும் மரங்கள், தாவர எரிபொருளுக்காக வளர்க்கப்படுகிறது. இதில், கரஞ்சா (புங்கை) ஒரு முக்கியமான மரமாகும். இது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. புங்கேமியா பின்னேட்டா என்பது அதிகமாக சாகுபடி செய்யப்படும் இரகமாகும்.
|
புங்கையின் சிறப்பம்சங்கள்
|
புங்கை எண்ணெயின் குணாதிசயங்கள்
- பொதுவாக, புங்கை கொட்டையிலிருந்து, உண்ணத்தகாத எண்ணெய் எடுக்கப்படுகிறது.
- இக்கொட்டையில், 95% பருப்பு அடங்கியிருக்கும்.
- எண்ணெய் அளவு, 27- 40% காணப்படும்
- எண்ணெய் பிழிவதற்கு, இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் போது, கொட்டையின் பருப்பிலிருந்து, 24 - 26.5 % வரை எண்ணெய் அளவு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு
- சுத்திகரிக்கப்படாத எண்ணெய், பழுப்பு மஞ்சலிலிருந்து காப்பி நிறத்தை கொண்டிருக்கும். இது கசப்பு சுவை, நுகரமுடியாத வாசனை மற்றும் உண்ண இயலாததாக இருக்கும்.
- தாவர எரி பொருள் தவிர்த்து, இந்த எண்ணெயை, விளக்கு எரிய வைப்பதற்கு, உயவு எண்ணெய், வர்ணத்தை நீருடன் ஒட்டச் செய்வதற்கும் மற்றும் பூச்சி கொல்லி, சோப்பு உற்பத்தி, தோல் பதனீட்டு தொழிற்சாலைகளிலும் பயன் படுத்தப்படுகிறது..
- இந்த எண்ணெயை, முடக்குவாதம் மற்றும் தோல் சம்மந்தமான நோய்களை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது
- இதன் புண்ணாக்கில், அதிக தழைச்சத்து இருப்பதால், மண்வளத்தை உயர்த்த, இதை பயன்படுத்தலாம். இந்த புண்ணாக்கை நிலத்தில் பயன் படுத்துவதன்மூலம், நுர்புழுவிலிருந்து செடிகளை காப்பாற்றலாம்.
புங்கை எண்ணெய் மற்றும் சாதாரண
பெட்ரோலியம், டீசல்
புங்கை எண்ணெய்யானது, வழக்கமான டீசலை போன்ற இயற்பியல் பண்புகளைக்
கொண்டது. இருப்பினும், வழக்கமான டீசல் மற்றும் பெட்ரோல் போல
சுற்றுப்புறத்தை பாதிக்காத எரிபொருளாகும்.


