Document Actions


பெண்களும் எரிசக்தியும்

கிராமப் பகுதிகளுக்கான எரிசக்தித் தேவைகளுடன் பெண்கள் பிரிக்க இயலாதபடி சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் வீடுகளுக்குத் தேவையான அடிப்படை சுகாதாரத் தேவைகளான சுத்தமான தண்ணீர் எடுத்து வருதல், கால்நடைகளுக்கான தீவனம் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள் ஆகியவற்றையும் அவர்கள்தாம் கவனித்துக் கொள்கிறார்கள். பெண்களுக்கும் எரிசக்திக்கும் வலுவான பிணைப்பு உள்ளது. ஏனென்றால் பெண்கள்தான் இந்த சக்தியைப் பெற அதிகமாக உழைக்கவும், இதைஉபயோகிக்கவும் செய்கின்றனர்.

அடிப்படையானஎரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக்கூட அதிகமாகக் கஷ்டப்பட்டு உழைக்கவேண்டியிருக்கிறது. பெண்களும் குழந்தைகளும், விறகுகளைச் சேகரிக்கப் பெரும் பிரயத்தனம் செய்யவேண்டியிருக்கிறது. எரிப்பதற்கு விறகு கட்டைகள் குறைவாகக் கிடைக்கும் காலகட்டங்களில், குடும்பத்தின் உணவுப் பழக்கமே மாற்றத்திற்கு உள்ளாகிறது. இதனால் குடும்பத்திற்குத் தேவையான சத்துணவும் கிடைக்காமல் பாதிப்புஏற்படுகிறது. பெண்கள் தினமும் ஆறு மணிநேரம்செலவிடுகிறார்கள். குழந்தைகளும் அவர்களுடன்இருக்கிறார்கள். மரபு சார்ந்த அடுப்புகளில் தாவரக் கழிவுகள் சரியான விதத்தில் உபயோகிக்காதது, போதுமான அளவுக்கு காற்று வசதி இல்லாதது ஆகியவற்றால் மிகக் கடுமையான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளையே பாதிக்கின்றன.

இதிலிருந்து மீள வழி உண்டா?

எரிசக்தியைக்குறைவாக எடுத்துக்கொண்டு, புகையை வெளிவிடாத அடுப்புகளைப் பயன்படுத்துவது, சூரியசக்தி மற்றும் இயற்கைஎரிவாயு போன்ற சுத்தமான எரிபொருள்களை உபயோகிப்பது இதற்கான தீர்வுகளாக இருக்கமுடியும். சமீபகாலங்களில் மக்கள் இவற்றை ஏற்றுக்கொள்வது அதிகரித்துவருகிறது.

அரசாங்க உதவி

பெண்கள் அடையக்கூடிய சிறப்பான லாபங்கள்:

இந்திய புதுப்பிக்ககூடிய எரிசக்தி வளர்ச்சி நிறுவனம் (ஐ.ஆர்.இ.டி.ஏ.), புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வள ஆதாரங்களை (என்.ஆர்.எஸ்.இ.) உபயோகப்படுத்தும் பெண்களை ஊக்கமளிக்கும் விதத்தில் பல உதவிகளைச் செய்ய முன்வருகிறது.

மேலும் விவரங்களுக்கு :    http://www.iredaltd.com/homepage

 

செய்திகள்

உயிர் குடிக்கும் சமையலறைகள்

வீடுகளுக்குள், குறிப்பாக, கிராமப்புறங்களில் நிகழும் காற்று மாசுபாடுகளினால் ஏற்படும் பிரச்சினைகளை கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

வளரும் நாடுகளில் கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீடுகளுக்குள் காற்று மாசுபடுதலால் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். இந்தியா இதில் முன்னணியில் உள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகிலேயே இந்தியாவில் தான் வீடுகளுக்குள் காற்று மாசுபடுதலால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் அதிகம் காணப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 5 லட்சம் பெண்களும் குழந்தைகளும் இவ்வகை நோய்களால் இறந்து போகிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் வீடுகளுக்குள் காற்று மாசுபடுதலால் நிகழும் மரணங்களில் கால்பங்கு.

வீடுகளுக்குள் காற்று மாசுபடுதலால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் எந்த அளவுக்குப் பெரியது என்றால், கிராமப்புறங்களில் தண்ணீர் சுத்தமாக இல்லாத நிலையால் ஏற்படும் மரணங்களுக்கு அடுத்தபடியாக இதுதான் மிகப்பெரும் பிரச்சினை. உலகளாவிய நிலவரமும் இதே அளவுக்கு அபாயகரமானதுதான். வளரும் நாடுகளில் வீடுகளுக்குள் காற்று மாசுபடுதலால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, வருடத்திற்கு 1.6 மில்லியன். அதாவது ஒவ்வொரு 20 வினாடிக்கும் ஒரு உயிர் பலியாகிக் கொண்டிருக்கிறது.

வீடுகளுக்குள் காற்று மாசுபடுதலால் மிக அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளும்தான். ஏனென்றால், பெண்கள் சமையலறையில் ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து ஏழு மணிநேரம் வரை செலவிடுகின்றனர். தாய்மார்கள் குழந்தைகளைத் தங்கள் அருகாமையிலேயே வைத்திருப்பதால் பாதுகாப்பான அளவைவிட 100 மடங்கு அதிகப் புகையைக் குழந்தைகள் சுவாசிக்கிறார்கள்.

விம்மி சின்ஹா, அக்டோபர் 24, 2004,  ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ்-ணையபதிப்பு

 

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: