தேசிய சாண எரிவாயுக்கலன் மற்றும் உர மேலாண்மை திட்டம்

1981-82 ல் தேசிய சாண எரிவாயுக்கலன் மேம்பாட்டுத்திட்டமாக இத்திட்டம் துவக்கப்பட்டது.

நோக்கங்கள்
  • ஊரக மக்களுக்கு, சமையல் செய்யத் தேவையான எரிபொருள் வழங்குதல் மற்றும் இயற்கை உரத்திற்கு, சாண எரிவாயுக்கலன் அமைத்து ஏற்பாடு செய்தல்.
  • ஊரக மகளிரின் பணிகளை கஷ்டமில்லாமல் செய்ய உதவுதல், வனங்களை பாதுகாத்தல், சமூகப்பணிகளை பிரபலப்படுத்துதல்
  • கிராமப்புற சுகாதாரத்தை, சாண எரிவாயுக்கலனுடன் மனிதக் கழிவை சேர்ப்பதன் மூலம் மேம்படுத்தல்


உறுப்புகள்
  • உள்ளுரில் உருவாக்கப்பட்ட சாண எரிவாயுக் கலன்களை பயன்படுத்த ஊக்கப்படுத்துதல்
  • இவற்றை செயல்படுத்த மாநிலங்கள் சார்புத்துறைகள் மற்றும் நிறுவனங்களை அமைத்துள்ளன. மும்பை கதர் கிராமத் தொழில் நிறுவனத்துடன், குஜராத் ஆனந்திலுள்ள தேசிய பால்பொருள் மேம்பாட்டு வாரியம், தேசியளவில் மற்றும் பகுதி வாரியாக செயல்படும் தொண்டு நிறுவனங்களையும் இத்திட்ட செயலாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன
  • இத்திட்டம் பல்வேறு வகையான நிதி உதவிகளை செய்து வருகிறது. பயன்படுத்துவோருக்கு மத்திய அரசின் மான்ய உதவி, தொழில் முனைவோருக்கு வேலைவாய்ப்பை அளித்தல், சார்புத்துறை மற்றும் நிறுவனங்களுக்கு சேவைக் கட்டணம் வழங்குதல், பயிற்சி மற்றும் விளம்பரத்திற்கு உதவி செய்தல் ஆகியவை செய்யப்படுகின்றன.
  • பல்வேறு விதமான பயிற்சி அளித்தலுக்கு உதவி செய்யப்படுகிறது. சாண எரிவாயுக்கலன் மேம்பாடு மற்றும் பயிற்சி மையங்கள் 9 பெரிய முக்கிய மாநிலங்களில் செய்யப்படுகின்றன. இவை சார்புத்துறைகளுக்கும் நிறுவனங்களுக்கும் தேவையான தொழில்நுட்பம் மற்றும் பயிற்சியை அளிக்கின்றன.
  • தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் சாண எரிவாயுக்கலன்களை வேளாண் பணிகள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் அமைக்க, நிதி உதவி செய்கின்றன. இவ்வங்கிகளுக்கு தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்ட்) மறு நிதி உதவியை செய்கிறது.


அங்கீகரிக்கப்பட்ட வீட்டு உபயோக உயிர்எரிவாயு உர உற்பத்தி கலன் மாதிரிகள்

1. முன்பே வடிவமைக்கப்பட்ட உயிர்எரிவாயு கலன்கள்

  • முன்பே வடிவமைக்கப்பட்ட கான்கிரீட்டினால் ஆன பொருத்தப்பட்ட மேற்பாகம் கொண்ட உயிர்எரிவாயு உற்பத்தி கலன் மாதிரிகள்
  • முன்பே வடிவமைக்கப்பட்ட கான்கிரீட்டினாலான குடும்பத்தேவைக்கேற்ற உயிர் எரிவாயு உற்பத்தி கலன் கே.வி.ஐ.சி மாதிரி
  • முன்பே வடிவமைக்கப்பட்ட அதிக அடர்த்தியுடைய பாலித்தீனிலானால் ஆன தீனபந்து உயிர்எரிவாயு உற்பத்திக்கலன் மாதிரி
  • முன்பே வடிவமைக்கபட்ட உயிர்த்தொழில்நுட்ப பைபர் கண்ணாடி இழையினாலான உயிர்எரிவாயு கலன் மாதிரி
  • முன்பே வடிவமைக்கப்பட்ட அதிக அடர்த்தியுடைய பாலித்தீனாலான கே.வி.ஐ.சி மிதக்கும் உயிர்எரிவாயு உற்பத்தி மாதிரி
  • சக்தி – சுரபி எஃப்.ஆர்.பி. ஆலான மிதக்கும் உருளை. இது கே.வி.ஐ.சி. வடிவ அடிப்படையிலான முன் வடிவமைக்கப்பட்ட மாதிரி. இதை கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தா கேந்திரா நிறுவனம் வடிவமைத்துள்ளது
  • ‘சின்டெக்ஸ்’ உருவாக்கிய பிளாஸ்டிக்-னலான மிதக்கும் உருளை. இது கே.வி.ஐ.சி. வடிவ அடிப்படையிலான மாதிரி. இதனை குஜராத் மாநில கலோல் பகுதியிலுள்ள சின்டெக்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

2.மிதக்கும் மேற்பாகத்தையுடைய உயிர்எரிவாயுஉற்பத்திக்கலன்கள்

  • கே.வி.ஐ.சி மிதக்கும் உலோகத்தினாலான மேற்பாகத்தையுடைய உயிர்எரிவாயு உற்பத்திக்கலன்கள்
  • கே.வி.ஐ.சி இரும்பு, சிமெண்ட் டைஜஸ்டர், எப்.ஆர்.பி வாயு ஹோல்டருடைய உயிர்எரிவாயு உற்பத்திக்கலன்கள்
  • பிரகதி மாதிரி உயிர்எரிவாயு உற்பத்திக்கலன்கள்

3.பை வடிவ (மாற்றியமைக்கக்கூடிய) உயிர்எரிவாயு உற்பத்திக்கலன்கள்

4.பொருத்தப்பட்ட மேற்பாகத்தையுடைய உயிர்எரிவாயு உற்பத்திக்கலன்கள்

  • செங்கல்லால் வடிவமைக்கப்பட்ட தீனபந்து உயிர்எரிவாயு கலன்கள்
  • தீனபந்து பெரோஸ்மென்ட் மாதிரி (உள் அடக்கிய தொழில்நுட்பத்துடன்)
  • முன்பே வடிவமைக்கப்பட்ட அதிக அடர்த்தி பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட மேற்பாகத்தினையுடைய குடும்பத்திற்கேற்ற தீனபந்து உயிர்எரிவாயு உற்பத்திக்கலன்கள்
  • திட நிலை தீனபந்து வடிவ நிலையான உருளை மாதிரி. இதனை இந்திய வேளாண் அறிவியல் கழகம் வடிவமைத்துள்ளது.


அங்கீகரிக்கப்பட்ட சாண எரிவாயுக்கலன் மாதிரிகள்:

மாதிரி

அங்கீகரிக்கப்பட்ட அளவு = க்யூபிக் மீட்டர் எரிவாயு உற்பத்தி ஒரு நாளைக்கு

மிதக்கும் ட்ரம் போன்ற சாண எரிவாயுக்கலன்
கதர் கிராம தொழில் நிறுவன மாதிரி
கதர் கிராம தொழில் நிறுவன மாதிரியுடன்

1 - 10

 ஃபெர்ரோ சிமெண்ட் கலன் மற்றும், அல்லது  ஃபைபர் கண்ணாடி சேர்ந்த ப்ளாஸ்டிக்
எரிவாயுக்கலன்.

1 - 10

தீனபந்து மாதிரி

1 - 6

 தீனபந்து மாதிரியில் ஃபெர்ரோ சிமெண்ட் சேர்ந்தது 

1 - 6

ஆர்.சி.சி. பிக்ஸ்டு டோம் மாதிரி

2 மற்றும் 3

பைபோன்ற கலன் - ரப்பர் நைலானால் செய்யப்பட்டது

1 - 6



கிராமப்புற சக்தி திட்டங்கள் நிறைவேற்றும் சார்புத்துறைகள் மற்றும் சார்புநிறுவனங்கள்


கிராமப்புற சக்தி திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவி

 

 

பிரிவு தொகுதிக்கு

மத்திய அரசு ஒரு கலனுக்கு
வழங்கிய மான்ய உதவி (ஒரு க்யூபிக் மீட்டர் அசையா டோம் மாதிரிக்கு

 வடகிழக்கு மண்டல மாநிலங்கள், சிக்கிம்
(அஸ்ஸாம் மாநில சமவெளிப்பகுதி நீங்கலாக)

         ரூ.14,700/- (2-4 க்யூபிக் மீட்டர் மாதிரிக்கும் இதே தொகை)

அஸ்ஸாம் மாநில சமவெளிப் பகுதிக்கு

ரூ.9,000/- (2-4 க்யூபிக் மீட்டர் மாதிரிக்கு ரூ 10,000)

 ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரேதசம், உத்தராஞ்சல், தமிழ்நாட்டின் நீலகிரி பகுதி, சாதர் குர்சாங் மற்றும் கலிம்பாங் பகுதிகள் (டார்ஜிலிங்), சுந்தர்பன்ஸ் (மேற்கு வங்காளம்) மற்றும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்

ரூ. 4,000/-
(2-4 க்யூபிக் மீட்டர்  மாதிரிக்கு ரூ.10,000/- )

பிற பகுதிகள்                                        

ரூ.    4,000-   (2-4 க்யூபிக்மீட்டர்     மாதிரிக்கு      ரூ.8,000/-  வழங்குதல்)




Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: