|
|
கிராமப்புற எரிசக்தி பாதுகாப்புக்கான பரிசோதனை திட்டங்கள்
-
|
மின்வாரியம் மூலம், மின்சாரம் கிடைக்காத தொலைதூர கிராமங்களில் வாழும்
மக்களுக்கு மின்சாரம் வழங்குவதுடன், அவர்கள் அன்றாட எரிசக்தி தேவைகளை,
புதுப்பிக்கக் கூடிய எரிசக்தி ஆதாரங்களிலிருந்து வழங்குதலே இத்திட்டத்தின்
முக்கிய நோக்கமாகும்.
கிராமங்களில் எரிசக்தி உற்பத்தி முறையில் உள்ள பொருளாதார தொழில்நுட்ப
யுக்திகளை விளக்கவும், உற்பத்தி தொழில்நுட்பங்களை கையாளும் அனுபவங்களை
அளிக்கவும், ஊரக குழுக்கள் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்தலுமே இந்த
பரிசோதனைத் திட்டங்களின் முக்கிய பணிகளாகும்.
|
|
-
|
மின்வாரியம் மூலம் மின்சாரம் கிடைக்காத தொலைதூர சிறிய கிராமங்களில்
இத்திட்டம் செயல்படுத்துப்படும்
|
|
பரிசோதனைத்
திட்டங்களை செயல்படுத்தத் தேவைப்படும் வழிகாட்டு
நெறிமுறைகள்
இந்த பரிசோதனைத் திட்டங்களை கிராம பஞ்சாயத்துகள், மாவட்ட ஊரக வளர்ச்சி
முகமை, வனத்துறை, தொண்டு நிறுவனங்கள், தொழில் முனைவோர், கூட்டுறவு
அமைப்புகள் போன்ற அமைப்புகளின் உதவியுடன் செயல்படுத்தும்.
-
-
தேர்ந்தெடுக்கப்படும் கிராமமானது
- தொலை தூரத்தில், மலைப்பகுதி அல்லது வனம் சேர்ந்த பகுதியாக இருக்க
வேண்டும்
- சமூகக் காடுகள் வளர்க்க தேவையான ஆடுமாடு மேயாத தரிசு நிலமுள்ள
பகுதியாக இருக்க வேண்டும்
- முன்னோடியான, விழிப்புனர்வு கொண்ட சமூக அமைப்பு இருத்தல் அவசியம்
- 25 குறைந்தபட்சம், அதிகபட்சம் 200 வீடுகள் உள்ள பகுதியாக இருக்க
வேண்டும்
- தேர்ந்தெடுக்கும் போது, வனம், மலைவாழ், ஊரக மேம்பாடுத் துறையுடன்
சேர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
|
|
-
|
கிராமம் தேர்ந்தெடுத்த பிறகு ஆரம்பநிலை பிரேரணை தயார்
செய்யவேண்டும். மாநில சார்புத் துறையின் ஒப்புதலுடன், அமைச்சகத்தின்
ஒப்புதலுக்கு முன்மொழிய வேண்டும்.
கிராமங்களில் எரிசக்தி பாதுகாப்பான பரிசோதனைத் திட்டங்களுக்கு
ஆரம்பநிலை பிரேரணை தயாரித்தல்
1 செயல்படுத்தும் நிறுவனம் / அமைப்பின் பெயர் மற்றும் முழு முகவரி
(வனத்துறை / தொண்டு :
நிறுவனம் / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)
2 மாநில சார்புத்துறை / நிறுவனத்தின் பெயர் :
மற்றும் முகவரி
3 கிராம ஊராட்சி, கோட்டம் மற்றும் மாவட்டம் :
4 ஊராட்சியிலுள்ள மொத்த கிராமங்கள் :
5 திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்தின் பெயர் :
6 கிராம கணக்கெடுப்பு எண் :
7 முக்கிய சாலையிலிருந்து கிராமத்திற்கான தூரம் :
8 மின்சாரம் செல்லும் பாதையிலிருந்து துாரம் :
9 கிராமம் ஜனத்தொகை :
10 ஆண் / பெண் விகிதாச்சாரம் :
11 கல்வி அறிவு :
12 மொத்த வீடுகளின் எண்ணிக்கை :
13 குடிசைகளின், தலித்துகளின் எண்ணிக்கை :
14 சமூக அமைப்பின் மாதிரி :
15 சமூக நலக் கூடங்கள் - பள்ளிகள், மருந்தகங்கள், ஊராட்சி மன்றம் :
16 முக்கியத் தொழில் (பணப் பயிர் குறிப்பிடவும்) :
17 உயிராற்றல் உற்பத்திக்கான மூலப்பொருள் பற்றிய விவரம் - மூலப்பொருளின்
வகை, எரிபொருள் / :
எண்ணைவித்துக்கள் இருந்தால்
18 தரிசு நிலம் / சாகுபடிக்கு லாய்க்கற்ற நிலம் / சாகுபடி செய்யாத நிலம்
எவ்வளவு இருக்கிறது :
19 தண்ணீர் வளம் :
20 எரிசக்தி தேவை :
(அ) வீட்டில் - சமைக்க, விளக்கு எரிய பிற தேவைகளுக்கு :
(ஆ) பொது நலனுக்கு - தெரு விளக்கு போன்றவற்றுக்கு :
(இ) வேளாண்மை / நீர் பாசனத்துக்காக :
(ஈ) வியாபாரத்துக்கு :
(உ) தொழிற்சாலைகளுக்கு :
21 தற்போது பயன்படுத்தும் எரிபொருள் சராசரியாக ஒரு வீட்டிற்கு
ஒருமாதத்திற்கு எவ்வளவு மீண்டும் பயன்படுத்தும் வகையான எரிசக்தி
:
22அமைப்புகள், கிராமங்களில் ஏதாவது உள்ளனவா?
23 உத்தேச உயிர்பொருள் தொழில் நுட்ப அமைப்பு :
24 எரிசக்தி முறைகளின் குறிப்பிடும்படியான அளவு :
25 கிராமப்புறவாசிகளின் பங்கு - (திட்டமிடுதல், செயல்படுத்துதல்,
பராமரித்தல், வருமானம் பார்த்தல்) :
26 கிராமத்தில் ஏற்கனவே செயல்படும் தொண்டு நிறுவனங்கள் :
27 வேறு குறிப்பிடும் படியான தகவல்கள் :
|
|
-
|
அமைச்சகத்திலிருந்து முறையான ஒப்புதல் பெற்ற பின்பு, கிராமப்புற
எரிசக்தி
தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திட்டம் தயார் செய்துகொள்ள
வேண்டும்.
இதற்கு கிராமத்திலுள்ள அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
மொத்த எரிசக்தி தேவையை
மதிப்பிடுதல்:
எரிசக்தி தேவை எதற்கு
?
- வீட்டில் சமைக்க, விளக்கு எரிய, பொழுது போக்குக்காக.
- சமூக, வியாபார நலனுக்கு - தெருவிளக்கு, அங்காடிகள், சுகாதார
நலவாழ்வு
- மையம், பள்ளிகள், மாவுமில், தகவல் தொழில் நுட்பம் ஆகியவற்றுக்கு.
- குடிநீர் மற்றும் பாசன நீர் இறைப்பதற்கு.
- ஊரகத்
தொழிலுக்கு.
சமையல், விளக்கு எரித்தல், தெருவிளக்கு, குடிநீர் வழங்குதல்,
பள்ளிகளுக்கு விளக்கு மற்றும் மின் விசிறி வழங்க குறைந்தபட்சம் சக்தியை
வழங்க வேண்டும்.
உள்ளுரில் கிடைக்கும் வளங்களின் அளவு
என்ன? அல்லது வளங்கள்
எவை?
மாட்டு சாணம், வேளாண் கழிவுகள், காடுகளிலிருந்து கிடைக்கும்
கழிவுகள்
ஆகியவை உள்ளுர் வளங்களாகும்.
எரிசக்தி தேவையை எப்படி
சமாளிப்பது?
- கிராம எரிசக்தி திட்டத்தின் முதற்படியே, உள்ளுர் வளங்களை பயன்
படுத்துவதுதான
- வேகமாக வளரும் எண்ணைவித்து மரப்பயிர்களை கண்டுபிடித்தல்
- மரம், காய்கறி எண்ணை மற்றும் இதர மூலப் பொருட்கள் தரும் பயிர்களை
சாகுபடி செய்ய திட்டம் தயார் செய்தல்
- மர வகைகள், பயிர் வகைகள் வளரும் வரை, உள்ளுரில் கிடைக்கும் எரிசக்தி
தரும் வளங்களை பயன்படுத்தி சக்தி தயார்செய்யலாம். அல்லது சமையல்
வாயுவை பயன்படுத்தலாம்.
- உள்ளுரில் எரிசக்தி வளங்கள் மற்றும் மரவகைகள் கிடைக்காத பட்சத்தில்
மட்டுமே, மாற்று எரிசக்திகளான தண்ணீரை பயன்படுத்தி மின்சாரம் அல்லது சூரிய
ஒளியை பயன்படுத்த வேண்டும்
- எரிசக்தி தேவை மற்றும் உள்ளுரில் கிடைக்கும் மூலப் பொருட்களின் அளவைப்
பொருத்து - எரிசக்தி உற்பத்தியின் அளவை கணக்கிடவேண்டும்
- உள்ளுர் வளங்களை பயன் படுத்தும்போது - எரிசக்தி உற்பத்திக்கு தகுந்த
நுட்பங்களை தேர்வு செய்ய வேண்டும். இதற்கு . . . . .
- ஒன்று / இரண்டு கட்ட சாண எரிவாயு
உற்பத்தி (மரங்களை அடிப்படையாகக் கொண்ட கலவை, காய்கறிக் கழிவுகள்,
அடுப்பங்கரைக் கழிவுகளை பயன்படுத்தி எரிவாயு உற்பத்தி
செய்தல்)
- உள்ளுர் கழிவுகளை எரிவாயுவாக மாற்றி அதன்
மூலம் முழுமையாக வாயுவை எரிபொருளாக இஞ்ஜினில் பயன்படுத்துதல்
- நில இஞ்ஜின்கள், காய்கறி எண்ணை அல்லது
காட்டாமணக்கு எண்ணையில் (பயோ டீசலில்) இயங்கும்
- மின்சார வினியோகம், கிராமங்களில் அமைக்கப்பட்ட சிறிய
மின்சார க்ரிட்
மூலமே நடைபெற வேண்டும். உற்பத்தி தேவைக்கேற்ப சக்தி வழங்கப்பட
வேண்டும். அதற்கேற்ற சிறிய தொழில் வளர்ச்சி, கடன் வசதி, அதன் மூலம்
வேலைவாய்ப்பு, வருமானம், வாங்கும் திறன் மற்றும் கிராமங்களிலிருந்து
இடம் பெயர்தலை தவிர்த்தல் ஆகியன நடைபெறும்.
|
|
-
|
தொடக்கத்திலிருந்தே கிராம எரிசக்தி குழுவின் பங்கேற்பு இருக்க
வேண்டும். கிராம சபா மூலம் இந்தக் குழு அமைக்கப்பட்டு, கிராம பஞ்சாயத்தின்
வழிகாட்டுதலோடு, மாநில பஞ்சாயத்ராஜ் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இக்
குழு செயல் படவேண்டும். கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் இந்த கிராம
எரிசக்தி குழுவின் அலுவல் சாரா உறுப்பினராக இருப்பதற்கு ஆவன செய்ய
வேண்டும்.
|
|
-
- மாநில பஞ்சாயத்ராஜ் சட்டத்தின்படி, கிராம எரிசக்தி நிதி உருவாக்கப்பட
வேண்டும். ஆரம்பகாலத்தில் உபயோகிப்பாளரிடம் இருந்து திட்ட பராமரிப்பிற்கு
நிதி பெறப்பட வேண்டும்.
- இனிவரும் காலங்களில், மாதாந்திர / வருடாந்திர அளவில் கணக்கிட்டு, நிதி
வசூல் செய்து கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.
- கிராம எரிசக்தி திட்டத்தை செயல்படுத்தத் தேவையான நிதியை அரசாங்க
திட்டங்கள் மூலம், உதாரணமாக ஊரக வளர்ச்சி, வனம் மற்றும் மலைவாழ்
மேம்பாட்டுத் துறையிடமிருந்து நிதி உதவியாக பெறலாம்.
- கிராம எரிசக்தி நிதியை கிராம எரிசக்தி குழுவின் இரண்டு உறுப்பினர்கள்
கையொப்பமிட்டு கையாளலாம். இதில் ஒருவர் கிராம பஞ்சாயத்து
உறுப்பினராக இருக்க வேண்டும்.
- உற்பத்தி தொகுதிகளை அமைப்பதற்கும் பராமரிப்பதற்கு, சக்தியை பங்கீடு
செய்வதற்கும் தனியாக ஒரு நிதி ஒதுக்கப்பட வேண்டும். இந்த
நிதிக்கணக்கும் கிராம எரிசக்தி குழுவால் நிர்வகிக்கப்பட்டு, இரண்டு
உறுப்பினர்களின் கையொப்பம் பெற்று கையாளப்பட வேண்டும்.
- கிராம எரிசக்தி நிதி மற்றும், கிராம எரிசக்தி குழுவின் மூலதன நிதி
பஞ்சாயத்து சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.
தணிக்கைக்கும் உட்பட்டதாகும்.
- கிராம எரிசக்தி குழு செய்யும் செலவுகள் யாவும், கிராம பஞ்சாயத்து
மாதாந்திர கூட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டும். பஞ்சாயத்துராஜ்
சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும்.
- தகவல் அறியும் சட்டத்திற்கு உட்பட்டு, கிராம எரிசக்தி குழு, கிராம
பஞ்சாயத்தின் ஒரு உப குழுவாக இருப்பதால் அணைத்து தகவல்களையும்,
வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும்.
- கிராம எரிசக்தி குழு, ஒவ்வொரு முறையும் கிராம பஞ்சாயத்திடம்
பயன்படுத்திய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கிராம பஞ்சாயத்து, இந்த
சான்றிதழை, மாவட்ட அளவில் நிதி உதவி பெற்ற நிறுவனத்திற்கு சமர்ப்பிக்க
வேண்டும்.
- தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் உதவிள் பெறும் நிறுவனங்கள் அல்லது
தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் கிராம பஞ்சாயத்தின் மூலமாக கிராம
எரிசக்தி குழுவில் விவாதிக்கப்பட வேண்டும்.
|
|
|
|
-
- திட்டம் முழுமையாக கிராம சமுதாயத்திற்கு சொந்தமானதாக இருக்க
வேண்டும். செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல் போன்ற பொறுப்புகளை
கிராமவாசிகளே ஏற்க வேண்டும்.
- இருப்பினும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள், கிராமவாசிகளக்கு திட்ட
செயலாக்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை உதவி செய்யலாம். அவ்வாறு உதவி
செய்யும் போது, கிராமத்திலுள்ள இளையோர்களுக்கு நடைமுறைப்படுத்தும்
நிறுவனங்கள் திட்ட செயலாக்கம் மற்றும் பராமரிப்பில் பயிற்சி
அளிக்கும். இதன்பிறகு அனைத்து பொறுப்புகளும் கிராம எரிசக்தி
குழுவிற்கு சென்றுவிடும். தேவையானால், கிராம எரிசக்தி குழு, திட்ட
செயலாக்கப் பணியை ஏதாவது ஒரு நிறுவனத்திடம் செயல்படுத்துமாறு
பணிக்கலாம்.
- மாற்று எரிசக்தி பயன்பாட்டுக்கான மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுவின்
தலைவர் - மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட
அலுவலர் - உறுப்பினர் செயலர், மாவட்ட அளவிலான முக்கிய துறைகளின்
தலைவர்கள், முக்கியஸ்தர்களை பரிசோதனை அடிப்படையிலான திட்டங்களை
செயல்படுத்தும் போது ஈடுபடுத்திக்கொள்வது அவசியம்.
- திட்டம் முழுமையாக செயல்படத் துவங்கும் வரை, மாதாந்திர அளவில், பணிகள்
எப்படி நடைபெறுகின்றன என்பது குறித்த அறிக்கையை மாநில சார்பு நிறுவனங்கள்
அமைச்சகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். திட்டம் செயல்படத் துவங்கிய
பின், காலாண்டுக்கு ஒரு முறை திட்டம் குறித்த அறிக்கைகளையும், மக்கள்
கருத்துக்களையும் அனுப்ப வேண்டும்.
- அமைச்சகம், திட்ட செயலாக்கம் பற்றி தொடர் கண்காணிப்பு தனியாகவே
செய்யும். தேவை ஏற்படின் இதற்காக உள்ள நிறுவனங்களின் சேவையையும்
பயன் படுத்திக்கொள்ளும்.
|
|
-
- 90 சதவிகித நிதி, மத்திய அரசிடமிருந்து பெறலாம், எப்போது? ஒரு
பயனாளியின் சொந்த மற்றும் அவரின் சுற்றுப்புற எரிசக்தி தேவை
பூர்த்தியாகும் பட்சத்தில் ஒருவருக்கு 20,000/- ரூபாய் வரை அதிகபட்சமாக
பெறலாம்.
- மீதியுள்ள 10 சதவிகித நிதி, கிராம சமூகம், நடைமுறைப்படுத்தும்
நிறுவனங்கள், மாநில சார்பு நிறுவனங்கள் - இவைகளிடமிருந்து மீதித் தொகையை
பெறலாம்.
- மத்திய நிதி உதவி, கிராம மூலதன நிதிக்கு எப்படி அனுப்பப்படும்
என்றால்.
- திட்டம் செயல்படுத்தலாம் என்ற முதல் ஒப்புதல் அளிக்கும்போது
50 சதவிகித நிதி அளிக்கப்படும்.
- திட்டம் செயல்படுத்தும் இடத்திற்கு, தேவையான
உபகரணங்கள் வந்து சேர்ந்த உடன் 2-வது தொகையாக 25 சதவிகிதம்
அளிக்கப்படும்.
- மூன்றாவது மற்றும் இறுதி நிதி உதவி 25 சதவிகிதத் தொகை,
வெற்றிகரமாக திட்டம் செயல்படத் துவங்கியதும், மற்றும் ஒரு மாத
காலம் நன்றாக
செயலபட்டதை பார்வையிட்டதும், மீதித் தொகை வழங்கப்படும்
மத்திய நிதி உதவி ஒரு சில சார்பு செயல்பாடுகளுக்கும்
வழங்கப்படுகிறது.
- செயலாக்கம், பராமரிப்பு, மற்றும் மேம்பாட்டு நிதியை பயனாளிகளின்
பயன்பாட்டு செலவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது திட்ட
செயலாக்கத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தும் பட்சத்தில், செயலாக்கம்,
பராமரிப்பு, மேம்பாட்டுக்காக மத்திய நிதி உதவியாக ஒவ்வொரு திட்டத்திற்கும்
அதிகபட்சமாக 10 சதவிகித நிதி என வழங்கப்படும். பயனாளிகளின் பயன்பாட்டு
செலவு வசூல் செய்தமைக்கான முயற்சி பற்றி அமைச்சகத்திற்கு கட்டாயம்
தெரிவிக்க வேண்டும்.
- மொத்த நிதி உதவியில் 20 சதவிகிதம் - செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு,
தொழில்சார்ந்த கட்டணமாக வழங்கலாம். இதில் ஒரு கிராமத்திற்கு
அதிகபட்சமாக 4லட்சம் ரூபாய் வரை வழங்கலாம்.
- மொத்த நிதியில் சேவைக் கட்டணமாக 10 சதவிகிதம், அதிகபட்சம் ஒரு
கிராமத்திற்கு 2லட்சம் ரூபாய் வரை மாநில சார்பு நிறுவனங்களுக்கு,
கண்காணிப்பு, அறிக்கை சமர்ப்பித்தல், மக்கள் கருத்துக்களை கேட்டறிதல் ஆகிய
பணிசெலவுக்காக வழங்கலாம்.
- பரிசோதனைத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பயிற்சி,
கருத்தரங்கம், பயிற்சி பட்டறைகள் நடத்துவதற்கும் நிதி உதவி அளிக்க
முடியும் - ஒவ்வொரு பயிற்சிக்கும் அதன் செயல் அடிப்படையில்.
- திட்டத்தை நடைமுறைபடுத்தும் நிறுவனங்களுக்கு நேரடியாகவே தொழிற்சார்ந்த
கட்டணம் வழங்கப்படும். மாநில சார்பு நிறுவனங்களுக்கு சேவைக்
கட்டணங்கள் திட்டம் முழுமை பெற்றபின் வழங்ககப்படும். செயலாக்கம்,
பராமரிப்பு, மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய நிதிஉதவி தேவையின்
அடிப்படையில் கொடுக்கப்படும்.
- திட்டப்பணி வெற்றிகரமாக முடிந்தபின், செயலாக்கத்திற்கு வந்தபின்,
முடிவுபெற்ற சான்றிதழை கிராம எரிசக்தி குழு, மாநில சார்பு நிறுவனம் ஆகியவை
இணைந்து வழங்க வேண்டும். அதன்பின்னரே நிறைவு நிதி உதவி
அனுமதிக்கப்படும்.
- கிராம பஞ்சாயத்து அல்லது இணை வனமேம்பாட்டுக் குழு - எதுவாக
இருந்தாலும், கிராம எரிசக்தி குழுவின் கணக்கு வழக்குகளை சரிபார்த்தல்,
சரிபார்த்தபின் நிதி உதவி பயன்படுத்திய சான்றிதழ் வரையறுக்கப்பட்ட
முறையில் மாநில சார்பு நிறுவனத்தின் மூலமாக அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க
வேண்டும்.
|
|
|
|