நாளிதழ் செய்தி

11வது ஐந்தாண்டுத்திட்டத்தில் 60 சூரிய ஒளி நகரங்கள்

நமது நாட்டில் சூரியஒளி நகரங்களை உருவாக்கும் உயரிய திட்டம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரம், நாட்டின் முதல் சூரியஒளி நகரமாக போகின்றது. புதிய மற்றும் புத்தாக்க சக்தி அமைச்சகம் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 60 சூரிய ஒளி நகரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஒரு மாநிலத்திற்கு குறைந்தது ஒரு நகரம், அதிக பட்சமாக 5 நகரங்கள் வரை இவ் அமைச்சகம் உதவி செய்யும்.

இத்திட்டமானது, நகரங்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்யவும், புதுபிக்கப்பட முடியாத எரிபொருள் மூலங்கள், அதிக விலையுள்ள எண்ணை, எரிவாயு போன்றவற்றை சார்ந்து இருத்தலை குறைப்பதற்காகவும், புத்தாக்க சக்தியை பயன்படுத்துவதற்காகவும், இந்த சூரிய ஒளி நகரங்கள் உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்படி, 2012ம் ஆண்டுக்குள் நாக்பூர் ஒரு மாதிரி சூரிய ஒளி நகரமாக மாறும். புத்தாக் சத்திமூலமும், திறமையான மின்சக்தி சேமிப்பு மூலமும், நகரத்தின் பத்து சதவிகித மின்தேவை பூர்த்தி செய்யப்படும்.  மற்ற நகரங்களையும் இதுபோல் உருவாக்குவதற்காக, மத்திய அமைச்சகம் இப்படி இரண்டு மாதிரி நகரங்களை  அமைக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கான நிதிஉதவி, ஒவ்வொரு நகரத்திற்கும், 9.5 கோடி ரூபாய் நிதியை புதிய மற்றும் புத்தாக்க எரிசக்தி அமைச்சகம் வழங்கும். இத்திட்டத்தில், 50 சதவிகிதம் நிதி பங்கீட்டை மாநகராட்சி / நகராட்சி / மாநில  அரசு கொடுக்க வேண்டும்.

மூலம் : http://mnes.nic.in/press-releases  



தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களைச் சார்ந்த ஒன்பது இலட்சம் நுகர்வோர் சி.எஃப்.எல் பல்புகளைப் பெற உள்ளனர்

இன்கான்டிசன்ட் (குண்டு பல்புகள்) பல்புகளுக்குப் பதிலாக சி.எஃப்.எல். (காம்பாக்ட் புளோரசண்ட் விளக்குகள்) பல்புகளை வழங்கி எரிசக்தியை திறம்பட உபயோகிக்க ஊக்குவிக்கும் திட்டமே, பச்சாட் லேம்ப் யோஜனா (BLY). விரைவில், இத்திட்டத்தால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சார்ந்த சுமார் ஒன்பது இலட்சம் நுகர்வோர் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நுகர்வோரும் ஒரு   சி.எஃப்.எல் பல்பைப் பெற ரூ.15-ஐ மட்டும் செலுத்தினால் போதும். 60 சதவீத நுகர்வோரை (எண்ணிக்கையில் 1.3 கோடி) இத்திட்டத்தின்கீழ் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கணக்கெடுப்பின்படி, வீட்டுத்தேவைகளுக்குப் பயன்படும் மொத்த மின்சார அளவில், மின்விளக்குகளைப் பயன்படுத்துவதற்கு மட்டுமே 30 சதவீதத்திற்கும் மேல் செலவழிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ், 60 மற்றும் 100 வாட்  குண்டு பல்புகளுக்குப் பதிலாக, முறையே, 11-15 வாட் மற்றும் 20-25 வாட் சி.எஃப்.எல் பல்புகள் மாற்றி பொருத்தப்படுகின்றன. எரிசக்தி சேமிப்பு நிர்வாகக் குழுவானது, இன்கான்டிசன்ட் பல்புகள் விற்கப்படும் விலைக்கு நிகராக, தரம் வாய்ந்த ஒரு சி.எஃப்.எல் பல்பை ரூ.15க்கு வழங்கக்கூடிய முயற்சிகளை ஒருங்கிணைக்கின்றது.

தற்போது, கடைகளில் அதிக விலையில் (பல்பு ஒன்றுக்கு ரூ.80-ரூ.100 வரை)   விற்கப்படுகின்ற காரணத்தால் வீடுகளில் சி.எஃப்.எல் பல்புகளின்   பயன்பாடு மிகவும் குறைவு. இத்திட்டத்தின்கீழ் இத்தடை நீக்கப்படும். இத்திட்டம் நாட்டில் பயன்பாட்டில் உள்ள 400 மில்லியன் பல்புகளையும் அகற்றி, ஆண்டுதோறும் ஏற்படக்கூடிய 6,000 முதல் 10,000 மெகாவாட் மின்சார பற்றாக்குறையையும், 24 மில்லியன் டன்கள்  கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு காற்றில் கலக்கப்படுவதையும் குறைக்க வழிவகுக்கிறது.

மூலம் : http://www.hindu.com/2009/01/14/
stories/2009011454690500.htm



சிறப்புத்தகுதி பெற்ற மாநிலங்களில், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பத்தின் பெண் குழந்தை தனது பள்ளி படிப்பின் போது ஒரு சூரிய ஒளி விளக்கை இலவசமாக பெறும்.

மத்திய அரசின் புதிய மற்றும் புதிப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி அமைச்சகம், சிறப்புத்தகுதி பெற்ற மாநிலங்கள், தீவுகள், யூனியன் பிரதேங்களில் உள்ள மின்சார வசதி இல்லாத கிராமங்களில் சூரிய ஒளி விளக்கை வழங்குவதற்காக சிறப்புத்திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. தற்பொழுது, சூரிய ஒளி விளக்குகளில்,  சி.எஃப்.எல் (CFL)  பல்புகள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சூரிய ஒளி விளக்கின் சராசரி விலை 3500/-ரூபாயாகும். இதில் மத்திய அமைச்சகம் 24 00/-ரூபாயை ஒரு விளக்கிற்கு மான்யமாக வழங்குகிறது. இது தவிர,  வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் குடும்பத்தை சேர்ந்த,  9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு சிறுமிக்கும் ஒரு சூரிய ஒளி விளக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது.

சூரிய ஒளி விளக்குகளின்  உற்பத்தி செலவவை  குறைக்கும் எண்ணத்துடன், அமைச்சகம், வெள்ளை நிற ஒளியை தரக்கூடிய டையோட் (LED) உபயோகப்படுத்தும் சூரிய ஒளி விளக்குகளை  உருவாக்க உதவி செய்து வருகிறது.

மூலம் : http://www.pib.nic.in/release/release.asp?relid=43903



சூரிய ஒளி மற்றும் சாண எரிவாயு மூலம் கிராமங்களுக்கு மின்சாரம்

மத்திய அரசின் புதிய மற்றும் புதிப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி அமைச்சகம் உள்ளார்ந்த கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் உள்ளார்ந்த, மின்சார வசதி இல்லாத கிராமங்கள், குக்கிராமங்களுக்கு சூரிய ஒளி உட்பட வேறு புதிப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மின்சாரம் வழங்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு இந்த ஆண்டு (2008-09) தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்க்கான தகுதிகள்
1. கிரிட்-டன் தொடர்பு ஏற்படுத்தும் சாத்திய இல்லாததால், இராஜிவ் காந்தி கிராம வித்யூதிகரன் திட்டம் செயல்படுத்தப்படத்தப்படாத, மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்ட கிராமங்கள்.
2. மின்சார வசதி இல்லாத 100க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட கிராமங்கள்.
3. 100க்கும் மேற்பட்ட ஆனால் 300க்கும் குறைவான மக்கள் தொகை உள்ள குக்கிராமங்கள், இந்த கிராமம் உள்ள மாவட்டத்தில் முதல் கட்டத்தில் இராஜிவ் காந்தி கிராம வித்யூதிகரன் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கக் கூடாது.

6680 உள்ளார்ந்த கிராமங்கள், குக்கிராமங்கள் இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், 417 கிராமங்கள், இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளன. 8719 உள்ளார்ந்த கிராமங்கள், குக்கிராமங்களுக்கு மத்திய அரசின் நிதி உதவி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2008-09ம் ஆண்டில் 1500 கிராமங்களை  இத்திட்டத்தின் கீழ் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இராஜஸ்தானில் 417 கிராமங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு, மாநில திட்ட செயல்படுத்தும் முகமை 292 குக்கிராமங்கள், உள்ளார்ந்த கிராமங்களில் அமைச்சகத்தின் நிதி உதவி பெற்று கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க ஆவண செய்யப்பட்டுள்ளது. மீதியுள்ள 125 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது. காரணம் இந்த கிராமங்களில் மின்வசதி அளிக்கப்பட்டுள்ளது அல்லது மக்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர் என்பதாகும்.

1986 கிராமங்களில் சூரிய ஒளி விளக்குகளை வீடுகளில் நிறுவ ஆகும் செலவில் 90 சதவிகிதம் அளவிற்கு மத்திய நிதி உதவி  வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அசாம் எரிசக்தி மேம்பாட்டு முகமை, அசாம் மாநில மின்சார வாரியம், மாநில வனத்துறை ஆகிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால் சாண எரிவாயுவைப் பயன்படுத்தி மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு இதுவரை எந்த முன்னொழிவும் பெறப்படவில்லை.

பார்பீட்டா மாவட்டம், பிரிக்கப்படாத கொக்ராஜார், பொங்கைகான் மாவட்டங்கள்,  இவற்றிலுள்ள 92 உள்ளார்ந்த கிராமங்களுக்கு நிதி உதவி அனுமதிக்கப்பட்டுள்ளது. நல்பாரி மாவட்டத்தில் எந்த ஒரு கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கும் திட்டத்தில் உதவிபெற, திட்டம் செயல்படுத்தும் முகமைகளால் தேர்வு செய்யப்படவில்லை. முன்மொழிவும் அளிக்கப்படவில்லை.

மூலம் : http://www.pib.nic.in/release/release.asp?relid=43913


104 ஆதித்யா சூரிய ஒளிக்கடைகள் நிறுவப்பட்டுள்ளது

16 மாநிலங்களில் 165 அக்ஷ்ய் ஊர்ஜா கடைகள்
மொத்தத்தில் 104 ஆதித்யா சூரிய ஒளிக் கடைகள் நமது நாட்டில் புதிய மற்றும் புதிப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி அமைச்சகத்தினால் நிறுவப்பட்டுள்ளது. புதிய திட்டத்தில் உருவாக்கப்படும் கடைகள், அக்ஷ்ய் ஊர்ஜா கடைகள் என நிறுவப்படுகின்றன. இத்திட்டத்தில் மாவட்டத்திற்கு ஒரு கடை என்ற நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. 16 மாநிலங்களுக்கு மொத்தமாக 165 அக்ஷ்ய் ஊர்ஜா கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் 7 சதவிகிதம் வட்டியுடன், 10 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. ஒரு கடை நிறுவ இத்தொகை அனுமதிக்கப்படுகிறது. அத்துடன் 24 மாதங்களுக்கு ஊக்கத் தொகையாக ஒரு மாதத்திற்கு 10,000/- ரூபாய் வரை
வழங்குவதற்கு உத்தரவு உள்ளது. ஆனால் இந்த ஊக்கத் தொகை வழங்குவது ஒரு சில விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டது.

மூலம் - http://www.pib.nic.in/release/release.asp?relid=43900



சூரிய ஒளி சக்தியை மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும்

மத்திய புதிய மற்றும் புதிப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி அமைச்சகம், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், அரசு துறைகளை தங்களது தேவைக்கு சூரிய ஒளிக்கலன்களை பயன்படுத்த அறிவுரைகளை வழங்கியுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், தங்களது ஊராட்சிகளிலுள்ள ஒரு சில கட்டிடங்களில் சூரிய ஒளிக் கலன்கள், சுடுதண்ணீர் உருவாக்கும் அமைப்புகளை கட்டாயம் நிறுவ  சட்ட திருத்தங்களை கொண்டுவர வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, 18 மாநிலங்கள் தங்களின்  நகர்புற ஆட்சியகங்களுக்கு  தேவையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 7 மாநிலங்களிலுள்ள 26 மாநகராட்சிகளிலும், வளர்ச்சி முகமை களிலும் இத்தகைய சட்ட திருத்தங்களை கொண்டுவந்துள்ளன.

சூரிய ஒளி சக்தி பயன்பாட்டை தனியார் துறைகளிலும் ஊக்குவிப்பதற்காக, மத்திய அமைச்சகம் ஒரு சில அடிப்படை உதவிகளையும், நிதி உதவியையும் அளித்து வருகிறது. அவையாவன.

  • சூரிய ஒளியை பயன்படுத்தி நீர் சூடேற்றும் தொழில் நுட்பத்தை மேம்படுத்த குறைந்த வட்டி அதாவது 5 சதவிகித வட்டியில் கடனுதவி அளிக்கப்படுகிறது
  • சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோவாட் (Kwh) பவர் மின்சாரத்திற்கு, 10ரூபாய் முதல் 12 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இந்த மின் கலனின் உற்பத்தி திறன் ஒரு மெகாவாட் (MW) அதற்கும் மேலுள்ளதாக இருக்க வேண்டும்.
  • இத்துறையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு 50 சதவிகிதம் நிதி உதவியும் செய்யப்படுகிறது.
மூலம் : http://www.pib.nic.in/release/release.asp?relid=43898


8000 உள்ளார்ந்த கிராமங்களும், குக்கிராமங்களும் சூரிய ஒளி மூலம் சக்தி வசதியை பெற்றுள்ளன.

நமது நாட்டின் நிலப்பகுதிகளில் 5 ட்ரில்லியன் கிலோ வாட் மணிநேர அளவுக்கு சூரிய ஒளி படுகிறது. புதிய மற்றும் புதிப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி அமைச்சகம் சூரிய ஒளி சக்தியை பயன்படுத்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மொத்தத்தில் சூரிய ஒளி சக்தியைக் கொண்டு செயல்படும் 4,02,000 வீட்டு விளக்குகள், 6,70,000 லாந்தர்கள், குக்கர்கள் நமது நாட்டில் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் 8000 உள்ளார்ந்த கிராமங்கள், குக்கிராமங்கள் மின் வசதி பெற சூரிய ஒளி சக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.

மூலம் : http://www.pib.nic.in/release/release.asp?relid=44190



IREDA மூலம் கடன் வசதி

இந்திய புதிப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி மேம்பாட்டு முகமை (IREDA),  2005 - 2008 வரை, 17 மாநிலங்களுக்கு, 1265 கோடி ரூபாயை புதிப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி உபயோகத்திற்கென கடனாக வழங்கியுள்ளது. 
இந்திய புதிப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி மேம்பாட்டு முகமை புதிப்பிக்கப்படக்கூடிய மூலங்களிலிருந்து எரிசக்தி தயாரிப்பு மற்றும் சேமிப்பு தொடர்பான திட்டங்களை ஊக்குவிப்போருக்கு கடனுதவி செய்கிறது. ஆனால் மாநில அரசுகளுக்கு இதற்காக கடன்கள் வழங்கப்படுவதில்லை.
மாநில அளவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மற்றும் இந்த ஆண்டு இந்திய புதிப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி மேம்பாட்டு  முகமையினால் வழங்கப்பட்ட கடனுதவி (30.09.2008 வரை) (பணம் ரூபாய் கோடிகளில்)

 

வருடம்

2005-06

2006-07

2007-08

 

2008-09(*)

வ.     
எண்   

மாநிலம்

 

 

 

 

1

ஆந்திரா

37.49

6.01

25.21

8.34

2

சட்டீஸ்கர்

35.72

21.56

0.00

0.00

3

கோவா

0.00

0.00

0.13

0.00

4

குஜராத்

0.00

3.99

77.75

0.00

5

ஹரியானா

0.40

0.00

0.00

0.00

6

ஹிமாச்சல்
பிரதேசம்

27.30

37.74

46.99

1.03

7

கர்நாடகா

115.87

86.69

118.00

76.25

8

மத்தியபிரதேசம்

0.65

0.87

0.00

20.79

9

மகாராஷ்டிரா   

26.04

162.45

137.41

7.09

10

நாகாலாந்து

0.04

0.07

0.00

0.00

11

ஒரிசா    

28.37

31.75

14.22

3.02

12

பஞ்சாப்

4.13

0.51

0.00

0.00

13

இராஜஸ்தான்

2.34

41.14

1.00

6.00

14

தமிழ்நாடு 

20.19

17.15

17.30

1.80

15

உத்திரப்பிரதேசம்

0.44

0.40

68.30

0.00

16

உத்தராக்கண்ட்

0.00

0.00

46.79

36.57

17

மேற்கு வங்காளம்

3.53

0.54

0.54

0.00

 

மொத்தம் 

302.51

410.87

553.64

160.89

மூலம் : http://www.pib.nic.in/release/release.asp?relid=44191



11வது ஐந்தாண்டு திட்டத்தில் காற்று சக்தியை பயன்படுத்த இலக்கு

2007-2012  11வது ஐந்தாண்டு திட்டத்தில் காற்று சக்தி மூலம் 10,500 மெகாவாட்(MW) மின் உற்பத்தி செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.  மொத்தத்தில் 9522 மெகாவாட்(MW) காற்று சக்தியை உபயோகிக்கும் வண்ணம் 2008-செப்டம்பர் 5ம் தேதிவரை காற்றுருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் 2007-2008ம் ஆண்டில் நிறுவப்பட்டது 1663 மெகாவாட்(MW).

 

இந்திய அரசாங்கம் பொருத்தமான இடங்களில் வியாபார நோக்கோடு கூடிய காற்றின் மின் உற்பத்தி கலன்களை தனியார் மூலம் நிறுவ உதவி செய்து வருகின்றது. இதுவரை வடகிழக்கு பகுதிகள்/ மாநிலங்களில் கிரிட் -யுடன் தொடர்புடைய வகையில், காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க சாத்தியப்படவில்லை.  இதற்காக அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. மத்திய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் சென்னையில் செயல்படும் காற்று சக்தி தொழிற்நுட்ப மையம் பல்வேறு இடங்களில் காற்று எந்த அளவில் கிடைக்கிறது என்பதை ஆய்வு செய்து, அந்த குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்தும் தருகிறது.  வடகிழக்கு பகுதிகளிலும் இதுபோன்ற ஆய்வுகளை இந்த மையம் மேற்கொண்டு வருகின்றது. 

மூலம்: http://www.pib.nic.in/release/release.asp?relid=43901



காற்றிலிருந்து எரிசக்தி உற்பத்தி திறன் 225 கிலோவாட்டிலிருந்து 1650 கிலோ வாட்டாக அதிகரிப்பு

2008 செப்டம்பர் வரை 9522 மெகாவாட் காற்று சக்தியை பயன்படுத்த காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. காற்று சக்தியை உபயோகப்படுத்திய மாநிலங்களின் விவரங்கள் பின்வருமாறு.

வ.எண்

மாநிலம்

உற்பத்திதிறன்(30.09.2008 வரை)  (மெகாவாட்)

1.

ஆந்திரா  

122.50

2.

குஜராத்

1414.70

3.

கர்நாடகா

1164.10

4.

கேரளா

18.00

5.

மத்தியபிரதேசம்

187.70

6.

மகாராஷ்டிரா

1823.90

7.

ராஜஸ்தான்

671.00

8.

தமிழ்நாடு 

4115.80

9.

மேற்கு வங்காளம்

1.10

10.

ஒரிசா

3.20

 

மொத்தம்

9521.80

                    

10வது ஐந்தாண்டு திட்டத்தில் 5456மெகாவாட்டாக இருந்த காற்று சக்தி மூலமான மின் உற்பத்தி 11வது ஐந்தாண்டு திட்டத்தில் 10,500 மெகாவாட் கூடுதல் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட காற்றாலைகளின் உற்பத்தித்திறன் 225 கிலோவாட்டிலிருந்து 1650 கிலோவாட் வரை உள்ளது.

13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 216 இடங்கள் காற்றாலை நிறுவ, காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்ய பொருத்தமான இடங்கள் என தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மாநிலங்களில் 5 புதிய பகுதிகள்/ இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. காற்றாலைகள் அமைக்கத் தகுதியான இடங்கள்:

வ.
எண்

மாநிலம்  

கண்டறியப்பட்ட பொருத்தமான இடங்கள்

கடந்த மூன்று
ஆண்டுகளில் கண்டறியப்பட்ட இடங்கள் (2005-2008)

1

தமிழ்நாடு

41

-

2

கேரளா

17

1

3

கர்நாடகா

26

1

4

ஆந்திரா

32

-

5

மகாராஷ்டிரா

31

3

6

மத்திய பிரதேசம்

7

-

7

குஜராத்

38

-

8

இராஜஸ்தான்

7

-

9

உத்தராக்கண்ட

1

-

10

ஒரிசா

6

-

11

மேற்கு வாங்காளம்

1

-

12

அந்தமான் நிக்கோபார்
தீவுகள்

1

-

13

லக்ஷ்த்தீவ்

8

-

 

மொத்தம்

216

5

மூலம் : http://www.pib.nic.in/release/release.asp?relid=44245


முந்தைய செய்திகளைப் பார்க்கவும்


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: