மின்சார சட்டம் 2003ல் புத்தாக்க சக்தி தொடர்பான குறிப்புகள்

மின்சார சட்டம் 2003ல், கீழ்கண்ட குறிப்புகள், புத்தாக்க சக்தி தொடர்பாக இடம் பெறுகிறது.

பிரிவு 3(1), 3(2)
இப்பிரிவுகளின்படி மத்திய அரசு ஒவ்வொரு நேரத்திலும் தேசிய மின்சாரக் கொள்கை, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை மாநில அரசுடன் கலந்தாலோசித்து வெளியிடும். மேலும் நிலக்கரி, இயற்கை எரிவாயு, அனுப்பொருள்கள், தண்ணீர் மற்றும் புத்தாக் சக்தி வளங்களைப் பொறுத்து இக்கொள்கை மற்றும் கட்டணம் வெளியிடப்படும்.

பிரிவு 4
மாநில அரசின் ஒப்புதலோடு, தனித்தன்மையோடு இயங்கும் அமைப்புகளை (புத்தாக்க சக்தி வளங்கள் மற்றும் இதர நடைமுறையில் இல்லா சக்தி வளங்களை பயன்படுத்துபவை) கிராமப்புறங்களில் செயப்படுத்துதல் குறித்த தேசிய கொள்கையை மத்திய அரசு வெளியிடும்.

பிரிவு 61
பிரிவு 61, 61(h), 61(i )ன்படி குறிப்பிட்ட ஆணையகம் கட்டண விதிகளை ஒரு சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வெளியிடும். அப்படி வெளியிடும்போது, இணை மின் உற்பத்தியை ஊக்கப்படுத்துதல், புத்தாக்க சக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்தல், தேசிய மின் கொள்கை மற்றும் கட்டண கொள்கை ஆகியவற்றை கவனத்தில் கொள்ளும்.

பிரிவு 86
பிரிவு 86(1), 86(1)(e)ன்படி மாநில ஆணையகங்கள் புத்தாக்க சக்தி மற்றும் இணை மின் உற்பத்தி மூலம் மின் உற்பத்தியை ஊக்கப்படுத்த,  மத்திய மின் க்ரிட்டுடன்(GRID) இணைப்புக்கான வழி, யாருக்கு தேவையோ அவர்களுக்கு மின்சாரத்தை விற்பனை செய்தல்,  மின்சாரத்தை வாங்குதல் மற்றும் ஒரு குறிப்பிட்ட சதவிகித மின்சாரத்தை வினியோக உரிமையுடன் அப்பகுதியில் பயன்படுத்துதல் ஆகியவற்றை இப்பிரிவு வழங்க ஊக்கப்படுத்தும்.

மூலம் : http://mnre.gov.in/

 

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: