தேசிய ஊரக மின்மயமாக்கல் கொள்கைகள், 2006
முக்கிய சுருக்கம்
இதன் நோக்கங்கள் ஆவது;
- 2009-க்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்
- நியாயமான விலையில், தரமான மற்றும் இடர்பாடு அற்ற மின்சார விநியோகம்
- 2012-க்குள் ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு ஒரு யூனிட் என்ற விகிதம் மின்சார விநியோகம்
எந்த கிராமங்களில் அல்லது குடியிருப்புகளில் மின் கட்டமைப்பு வசதி இல்லையோ, அந்த பகுதிகளுக்கு, தனித்து இயங்கும் எரிசக்தி ஆற்றல் கொண்டு மின்சாரம் வழங்கப்படும். இவைகளும் சாத்தியம் இல்லாத நிலையில், சூரிய ஒளி மின் அமைப்புகள் உபயோகிக்கப்படும். இருப்பினும் இப்படிப்பட்ட தொலைதூர கிராமங்கள் மின்சாரமயமாக்கப்பட்டது என கருதப்படமாட்டாது.
மாநில அரசானது, 6 மாதத்திற்குள் ஊரக மின்மயமாக்கல் திட்டத்தை, தகுந்த வரைபடத்துடனும், விரிவாக மின்சார விநியோக முறையுடனும் தயாரித்து அறிவிக்க வேண்டும். இந்த திட்டங்கள் மாவட்ட மேம்பாட்டு திட்டத்துடன் இணைத்தும், ஒருங்கிணைக்கவும் பட வேண்டும். இந்த திட்டத்தை, அதற்குரிய இயக்கத்துக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
கிராமங்கள் மின்சாரமயமாக்கப்பட்ட தகுதி பெற்றவுடன், கிராம பஞ்சாயத்து, முதல் சான்றிதழை அளிக்கும். பின்னர், மின்சாரமயமாக்கப்பட்ட கிராமங்களின் கிராம பஞ்சாயத்து 31 மார்ச் முடிவில், ஒவ்வொரு வருடமும் சான்றை அளிக்கும்.
மாநில அரசானது, ஜில்லா பஞ்சாயத்து தலைவரை, தலைவராக கொண்ட குழுவை மாவட்ட அளவில், 3 மாதத்திற்குள அமைக்க வேண்டும். இதில் மாவட்ட அளவிலான நிறுவனங்கள், நுகர்வோர் குழுமம், முக்கிய பயனாளிகள் மற்றும் போதுமான மகளிர் பிரதிநிதிகள இடம் பெறுவர்.
இந்த மாவட்ட குழு மின்சாரமயமாக்கலை ஒருங்கிணைப்பது, மேலும் விரிவுபடுத்துவது, நுகர்வோர் திருப்தி போன்றவற்றை கண்காணிக்கும்.
கிராம மின்மயமாக்கல் மேற்பார்வை மற்றும் ஆலோசனை வழங்குதலை பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் பார்த்துக் கொள்ளும்.
புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆற்றல் சார்ந்த மின்சார அமைப்புகளில், திடீர் பழுது ஏற்படும் போது மின்சார விநியோகம், மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளை மாநில அரசு கவனித்து கொள்ள வேண்டும்.
மூலம் : http://mnre.gov.in/


