தேசிய உயிர்எரிபொருள் கொள்கை
தேசிய உயிர்எரிபொருள் கொள்கையானது, மத்தியரசின் புதிய மற்றும் புத்தாக்க எரிசக்தி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. 2008ம் வருடம் செப்டம்பர் மாதம் 11ம்தேதி மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தேசிய உயிர்எரிபொருள் கொள்கையின் சிறப்பம்சங்கள்;-
- 2017ம் ஆண்டிற்குள், 20சதவிகிதம் அளவிற்கு உயிர்எரிபொருள் (உயிர் எரிசாராயம் மற்றும் பயோடீசல்) ஆகியவற்றை கலந்து பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- உணவு எண்ணை அல்லாத மற்ற எண்ணை வித்துக்கள் பயிர்களை உபயோகமற்ற, தரிசு நிலங்களில் பயிர் செய்வதன் மூலம் பயோடீசல் உற்பத்தி செய்யப்படும்.
- வெளிநாட்டிலிருந்து கொழுப்பு அமிலம் (FFA) உள்ள எண்ணை, பாமாயில், ஆகியவற்றை இறக்குமதி செய்யப்படாமல், உள்நாட்டிலேயே பயோடீசல் உற்பத்திக்கு வழிவகை செய்யப் படும்.
- பயோடீசல் உற்பத்திக்கான பயிர்சாகுபடி பொது/ அரசு/வனத்துறையின் தரிசு நிலங்களில் மேற்கொள்ள ஊக்கமளிக்கப்படும். வளமான, பாசனப்பகுதிகளில் மேற்கொள்ள ஊக்கமளிக்கப்படுவதில்லை.
- சாகுபாடியாளர்களுக்கு தகுந்த விலை வழங்குவதற்கு, பயோடீசல் உற்பத்திக்கான எண்ணை வித்துக்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அறிவிக்கப்படும். அவ்வப்போது, இது பரிசீலிக்கப்பட்டு நிர்ணயக்கப்படும். இதற்கான விபரங்கள் நிருவப்பட்டு, உயிர் எரிபொருள் நடப்பு குழுவால் கலந்தாலோசிக்கப்படும்.
- எண்ணை விற்பனை நிறுவனங்கள் வாங்கும் உயிர் எரிசாராயத்தின் குறைந்தபட்ச கொள்முதல் விலையானது, உற்பத்தி விலை மற்றும் உயிர் எரிசாராயத்தின் இறக்குமதி விலையை பொருத்து இருக்கும். பயோடீசல் பொருத்த மட்டும், டீசலின் அப்போதைய சில்லறை விலை கருத்தில் கொள்ளப்படும்.
- மாநிலங்களுக்குள்ளும் மற்றும் அவற்றின் இடையேயும், உயிர் எரிபொருள்களான பயோடீசல் மற்றும் உயிர் எரிசாராயம் தடையில்லாமல் செல்லுவதற்கு ஏதுவாக, இவற்றை பிரகடணம் செய்யப்பட்ட பொருட்களின்கீழ் கொண்டு வரப்படும் என தேசிய உயிர்எரிபொருள் கொள்கை எதிர்பார்க்கிறது.
- பயோடீசலுக்கு எவ்வித வரி விதிப்பும் செய்ய அனுமதி அளிக்கப் படக்கூடாது என்றும் இக்கொள்கையில் கூறப்பட்டுள்ளது
- தேசிய உயிர்எரிபொருள் குழுமத்திற்கு பாரதப்பிரதமர் தலைமை வகிப்பார்.
- உயிர் எரிபொருள் செயல்படுத்தும் குழுமத்திற்கு அமைச்சரவை செயலர் தலைமை வகிப்பார்.
- உயிர் எரிபொருள் ஆராய்ச்சிக்காக, துணைக்குழுமம் ஒன்று, செயல்படுத்தும் குழுமத்தின்கீழ் அமைக்கப்படும். இத்துணைக் குழுமத்தில் உயிர்தொழில்நுட்ப துறை, ஊரகவளர்ச்சி மற்றும் வேளாண் அமைச்சகங்கள் ஆகியவை உறுப்பினர்களாக இருக்கும். புதிய மற்றும் புத்தாக்க எரிசக்தி துறை அமைச்சகம் இக்குழுமத்தை ஒருங்கிணைக்கும்.
- புதிய தொழில்நுட்பமான செல்யோலோசிக் உயிர் எரிபொருள் உட்பட, பயிர்சாகுபடி, பதப்படுத்துதல், உற்பத்தி நுட்பங்கள் மேலான ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் செயல் விளக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மூலம் : http://mnre.gov.in/


