அக்ஷய் உர்ஜா கடைகள்
இந்திய அரசின் புதிய மற்றும்
புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகம், ஆதித்யா சோலார் கடைகளை முக்கிய பெரிய
நகரங்களில் நிறுவி ஊக்குவிப்பதென முடிவு செய்துள்ளது. இந்த கடைகள்
தற்பொழுது ‘அக்ஷய் உர்ஜா கடைகள் (Urja Shops)’ எனப்படுகின்றன. இவை சூரிய
ஒளி ஆற்றல் உட்பட எல்லா விதமான புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலம் இயங்கும்
கருவிகளின் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்தல் போன்ற சேவைகளை செய்யும்.
இக்கடைகள் கீழ்க்கண்ட சேவைகளை வழங்குகின்றன:
- பல்வேறுபட்ட புதுப்பிக்கவல்ல ஆற்றல் மற்றும் ஆற்றலை திறம்பட
உபயோகிக்கும் கருவிகளை விற்றல்
- புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலம் இயங்கும் கருவிகளை பழுது பார்த்தல்
மற்றும் சர்வீஸ் செய்தல்
- புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலம் இயங்கும் கருவிகள் பற்றிய தகவலை
பரப்புதல்
- தனிநபர்களும் நிறுவனங்களும், புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலம் இயங்கும்
கருவிகளை உபயோகிப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்துதல்
-
|
மாநில அளவிலான தொடர்பு நிறுவனங்கள், தனியார் தொழில் முனைவோர்,
இக்கடைகளை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவி செயல்படுத்தக்கூடிய
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.
|
|
-
- நிதியுதவிக்காக விண்ணப்பிப்பவர்கள், இக்கடைகளை நிறுவுவதற்கு
அதிகபட்சமாக 10 லட்சம் வரை குறிப்பிட்ட வங்கிகளில் கடனாகப் பெற
தகுதியுடையவர்கள். இதில், அதிகபட்சமாக 85 சதவிகிதம் வரை, 7 சதவிகித
வட்டியில் கடனாக கிடைக்கும். இக்கடனை 5 ஆண்டுகளில் திரும்ப
செலுத்தவேண்டும்.
- குறிப்பிட்ட அளவு குறைந்தபட்ச வியாபார அளவுக்குட்பட்டு, மாநில தொடர்பு
நிறுவனத்திடமிருந்து அன்றாடத் தேவைகளுக்கான நிதியுதவியும், ஊக்கத்
தொகையும், கீழ்கண்டவாறு பெறலாம்:
- ஒரு மாதத்திற்கு ரூ.5000/- வரை, வேலையாள் சம்பளம், மின்சாரம்,
தொலைபேசி கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்காக நிதியுதவி
- முதல் வருடத்தில், பிரதி மாதம் ரூ. 50,000 மற்றும், இரண்டாமாண்டில்
பிரதி மாதம் ரூ. 1,00,000 வரை வியாபாரம் செய்தால், ஊக்கத்தொகையாக ஒரு
மாதத்திற்கு ரூ.5000/- வழங்கப்படும்.
- இத்திட்டம் மாநில தொடர்பு நிறுவனங்கள் மற்றும் IREDA. மூலம்
செயல்படுத்தப்படும்
|
|
-
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கடை மட்டுமே நிறுவப்படவேண்டும். ஏற்கெனவே
இக்கடை உள்ள மாவட்டத்தில் இன்னொரு கடை வைக்கக்கூடாது
- இந்த கடைகளின் பரப்பளவு குறைந்தபட்சம் 200 சதுர அடியாக இருக்கவேண்டும்
(கிடங்கு தவிர). இக்கடைகள் கட்டப்பட்டதாகவோ, வாங்கப்பட்டதாகவோ அல்லது
புதுப்பிக்கப்பட்டதாகவோ இருக்கவேண்டும். வாடகைக்கு எடுக்கப்படும்
கடைகளுக்கு அரசாங்கத்தின் நிதியுதவி வழங்கப்படாது. .
- நகரத்தின் முக்கிய இடத்தில், எளிதல் சென்றடையும் வகையில் கடை
இருக்கவேண்டும்
- இக்கடைகளுக்கு நாடு முழுவதும் ஒரே பொதுவான பெயர் வைக்கப்படவேண்டும்.
‘அக்ஷய் உர்ஜா கடைகள்’
என்று பளபளக்கும் 8’ x 3’ என்ற அளவிலான போர்டில்
பொறிக்கப்படவேண்டும். கடைப் பெயரின் முன், எடுத்துக்காட்டாக கடையின்
உரிமையாளர் பெயர் “..........அக்ஷய் உர்ஜா
கடை’ என்ற
முறையில் இருக்கவேண்டும்..
- இக்கடைகள், நாகரீகமான உட்புறங்களுடன் வாடிக்கையாளர்களை கவருமாறு
வெளிச்சமாக இருக்கவேண்டும்
- இக்கடையில் குறைந்தது இரண்டு ஊழியர்கள் இருக்கவேண்டும். அதில் ஒருவர்
புதுப்பிக்கவல்ல ஆற்றலில் செயல்படும் கருவிகளை பழுது பார்க்கவும், சர்வீஸ்
செய்வதற்கும் உரிய தொழில் அறிவை பெற்றவராக இருக்கவேண்டும். புதிய மற்றும்
புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறை அமைச்சகம் இக்கடையில் அமர்த்தப்படும்
ஊழியர்களுக்கு பொறுப்பேற்காது
- இக்கடைகள் வணிக நிறுவனங்களைப்போல இயங்கி, தனக்கான வருமானத்தை
ஈட்டவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இக்கடைகளில் விற்ற பொருட்களுக்கு பழுது மற்றும் சர்வீஸ் செய்வது
மட்டுமன்றி, இதர வகைகளில் வாங்கப்பட்ட புதுப்பிக்கவல்ல ஆற்றலில் இயங்கும்
கருவிகளை பழுதுபார்க்கும் சேவையை நியாயமான விலையில் செய்து
தரவேண்டும்.
- நுகர்வோருக்கு ஏற்ற வகையில் இக்கடைகள் இயங்கவேண்டும். மாறுபாடான
மற்றும் வசதியில்லாத நேர அணுகுமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும்,
இக்கடைகளில், பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பலவித
புதுப்பிக்கவல்ல ஆற்றலில் இயங்கும் கருவிகளை, வாடிக்கையாளர் பார்த்து
தேவையானதை தேர்ந்தெடுத்து வாங்குமாறு பார்வைக்கு
வைக்கவேண்டும்.
- இக்கடைகளில் விற்கப்படும் பொருட்களின் சரியான விலைப்பட்டியல்,
நுகர்வோரின் பார்வையில் படுமாறும் கைக்கு கிடைக்குமாறும் வைக்கப்பட
வேண்டும். மேலும் அங்கு விற்கப்படும் கருவிகள் பற்றிய விவரங்களையும்
கடைக்கு வரும் பொது மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
- இக்கடைகளை வணிக ரீதியாக லாபம் பெறும் நிறுவனங்களாக இயக்க, ஆற்றலை
சேமிக்கும் சி.எஃப். எல் பல்புகள், விளக்குகளின் உதிரி பாகங்கள், அதிக
திறன் வாய்ந்த கெரசின் அடுப்புகள் போன்றவற்றை சேர்த்து விற்பனை
செய்யலாம்.
- புதுப்பிக்கவல்ல ஆற்றலில் இயங்கும் கருவிகள் அல்லது இதர பொருட்கள்
தயாரிப்பு மற்றும் வியாபாரம் போன்றவற்றிற்கு கடன் அளிக்கும் வங்கிகளுடன்,
நுகர்வோரின் நன்மைக்காக தொடர்பு வைத்திருக்கவேண்டும்.
|
|
மூலம்: www.mnre.gov.in