சுற்றுச்சூழல் நிலை பற்றிய அறிக்கை

இந்திய சுற்றுச்சூழல் நிலை பற்றிய அறிக்கையை வெளியிடுவதற்கான முக்கிய நோக்கம், இந்திய சுற்றுச்சூழல் குறித்த முக்கிய கருத்துக்களை வெளியிடுவதே ஆகும். இந்த கருத்துக்கள், ஒரு அடிப்படை ஆதாரமாக, மற்றும் முக்கிய கொள்கை முடிவெடுக்க உதவும் தகவல்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
இந்த அறிக்கை, வரக்கூடிய ஆண்டுகளில், தேசிய அளவில் ஆதாரங்களை திட்டமிட தேவைப்படும் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை கொடுக்ககூடியதாக அமையும்.

இந்த அறிக்கையானது, நிலம், காற்று, தண்ணீர், உயிர்ச்சூழல் ஆகியவற்றின் நிலை மற்றும் 5 முக்கியமான பிரச்சனைகளான, தட்பவெட்பநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, தணணீர் பாதுகாப்பு, சக்தி பாதுகாப்பு, நகரமயமாக்குதலை நிர்வகிப்பது ஆகியவற்றையும் உள்ளடக்கியது ஆகும்.

இந்திய நாட்டின் சுற்றுச் சூழல் தொடர்பான பிரதான பிரச்சனைகள் இவ் அறிக்கையில் விளக்கப்பட்டிருக்கும். மேலும், அதில், சூழலின் இன்றைய நிலை, இயற்கை வளங்கள் மீதான அழுத்தம், சூழல் மாற்றங்கள் மற்றும் இந்த மாற்றங்களினால் ஏற்படும் தாக்கம் ஆகியவை பற்றியும் விளக்கப்பட்டிருக்கும். மேலும் அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் எதிர்காலத்து கொள்கை முடிவுகள் அல்லது நிகழ்வுகளை இந்த அறிக்கை அலசி ஆராயும். அத்துடன் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாமல் கண்காணிக்கும் பணியையும், கொள்கைகளையும் இவ்வறிக்கை முன்மொழியும்.

சுற்றுச்சூழல் அறிக்கை நிலை 2009ல் உள்ள முக்கிய கருத்துக்கள்
  • சுமார் 45 சதவிகித இந்திய நிலங்கள், மண் அரிப்பு, மண் அமிலத்தன்மை அடைதல், களர் உவர் பிரச்சனை, தண்ணீர் தேங்குதல், காற்று மூலம் அரிப்பு ஆகியவற்றால் வீணாகின்றன. இதற்கு முக்கிய காரணம், காடுகளை அழித்தல், நிலையில்லா வேளாண்மை, சுரங்கம் தோண்டுதல், அதிகளவு நிலத்தடி நீரை பயன்படுத்துதல் ஆகியனவாகும். இருந்தும், மூன்றில் இரண்டு பங்கு வீணாகும் நிலங்கள் அதாவது 147 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை சரி செய்து, மீண்டும் பயிர் சாகுபடிக்கு கொண்டு வர இயலும். இந்திய நாட்டின் வனப்பரப்பு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. (இப்போது 22 சதமாக உயர்ந்துள்ளது)
  • காற்று மாசுபடுதல் இப்போது அனைத்து நகரங்களிலும் அதிகரித்து வருகிறது. உள்ளிழுக்கும் காற்றில் உள்ள சிறு பொருட்கள் அல்லது துகள்களின் அளவு இந்தியாவின் 50 நகரங்களில் இப்போது உயர்ந்துவிட்டது. நகரச்சுற்றுச்சூழல் மாசுபடுதலுக்கு வாகனங்களும், தொழிற்சாலைகளுமே முக்கிய காரணங்களாகிவிட்டன.
  • இந்திய நாடு பயன்படுத்தக்கூடிய தண்ணீரில், 75 சதவிகித தண்ணீரை பயன்படுத்தி வருகிறது. நல்ல முறையில் சிக்கனமாக பயன்படுத்தும் பட்சத்தில், அந்த நீர் எதிர்காலத்திற்கும் போதுமானது. வீட்டு உபயோகதிற்கான தண்ணீர் பயன்பாட்டை தகுந்த முறையில் கட்டணத்திற்கு உட்படுத்தாதது, சுகாதாரமின்மை, நிலத்தடி நீரை முறையில்லாமல் எடுத்து தொழிற்சாலைகளில் பயன்படுத்துதல், விஷமுள்ள மற்றும் இயற்கை கழிவுகளை தொழிலகங்கள் வெளியிடுதல், முறையற்ற நீர்பாசனம், அதிகளவு ரசாயன உரங்களை உபயோகித்தல், பூச்சிக்கொல்லி பயன்பாடு ஆகியவைகளே நாட்டில் உண்டாகும் தண்ணீர் பிரச்சனைகளுக்கான முக்கிய காரணங்களாகும்.
  • பல்வேறு வகையான விலங்கினங்கள், தாவரங்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவிற்கு உலகத்தில் 17வது இடம் கிடைத்தாலும், 10 சதவிகித உயிரினங்கள் அச்சுறுத்தும் வகையிலான அழிவின் நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வாழும் சூழலில் ஏற்பட்டுள்ள அபாயம், விலங்குகளை வேட்டையாடுதல், உயிரினங்களை அழித்தல், அதிகம் பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு, தட்பவெப்பநிலை மாற்றம் ஆகியவைகளின் மூலமே இந்த அழிவு ஏற்பட்டுள்ளது.
  • இந்தியாவின் நகர மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு சேரிகளில் இப்போது வாழ்கிறது.
  • உலக பசுமை இல்லை வாயுக்கள் (தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணி) வெளியீட்டில் இந்தியாவின் பங்கு 5 சதவிகிதம் ஆகும். எனினும், 700 மில்லியன் இந்தியர்கள், புவிவெப்பமடைதல் தாக்கத்தை நேரடியாக இன்று சந்திக்கிறார்கள். ஏனெனில், இது வேளாண்மையை பாதிக்கிறது. வறட்சி, வெள்ளம், புயலை அடிக்கடி ஏற்படுத்தி அதிக பாதிப்புகளை உண்டாக்குகிறது. கடல் மட்டமும் இதனால் உயர்ந்து பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது.


மூலம்:http://moef.nic.in/index.php


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: