கியோட்டோ நடப்படி

கியோட்டோ நடப்படி, உலகத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களின் வெளியாக்குதலை குறைப்பதற்கான ஒரு சர்வதேச மற்றும் சட்ட பூர்வமான ஒப்பந்தமாகும்.  இது 2005 பிப்ரவரி 16 ஆம் தேதி அமுலுக்கு வந்தது.  இதன் முக்கிய அம்சமானது, தொழில் மையமாக ஆக்கப்பட்ட நாடுகள் தங்களது பசுமை இல்ல வாயுக்கள்  வெளியாக்குதலின் அளவை குறைப்பதற்கான இலக்குகளை நிர்ணயத்தல் ஆகும். பசுமை இல்ல வாயுக்களாவன, கரிம வாயு, மீத்தேன், நைட்ரைஸ் ஆக்ஸைடு, ஸல்ஃபர் ஹெக்சாஃப்ளோரைடு, ஹைட்ரோஃப்ளோரோகார்பன் மற்றும் பெர்ஃப்ளோரோகார்பன் ஆகும். 2008 ஆண்டு வரையில், இந்தியா உட்பட, 183 தேசங்கள் இந்த நடப்படியை ஒப்புக்கொண்டுள்ளது.

வளர்ந்த நாடுகளின், 150 வருட கால தொழில் செயல்முறைகளால், சூழலானது பெரிதளவு பசுமை இல்ல வாயுக்களை கொண்டுள்ளது என்பதை கியோட்டோ நடப்படி கருத்தில் கொண்டுள்ளது. எனவே, "பொதுவான ஆனால் வேறுபடுத்தப்பட்ட பொருப்பு" என்பதின் அடிப்படையில், வளர்ந்த நாடுகளுக்கு பசுமை இல்ல வாயுக்கள்  வெளியாக்குதலை குறைப்பதற்கான அதிக பளுவை இந்த ப்ரோடோகால் விதித்துள்ளது.  இதன்படி, வளர்ந்த நாடுகள் 2012க்குள், பசுமை இல்ல வாயுக்கள்  வெளியாக்குதலை, 1990 ஆண்டில் ஆன அளவிலிருந்து 5.2% குறைக்க வேண்டும்.

கியோட்டோ வழிமுறைகள்       
இந்த ஒப்பந்தத்தின் கீழ், நாடுகள் தங்களுடைய இலக்கை, முதலில் தேசிய நடவடிக்கைகள் மூலம் அடையவேண்டும். இருப்பினும், தங்கள் இலக்கை அடைவதற்கும், மூன்று சந்தை சார்ந்த நுட்பத்தையும், கூடுதலாக இந்த நடப்படி அளித்துள்ளது. அவையாவன;

  • செறிவு வர்த்தகம் – தி கார்பன் மார்க்கெட் எனப்படுவது
  • கீளின் டெவலப்மெண்ட் மெக்கனீசம் (CDM)
  • கூட்டு செயல்பாடு (JI)
i. செறிவு வர்த்தகம் - கார்பன் வர்த்தகம்

கியோட்டோ நடப்படியில் கையெழுத்திட்ட நாடுகள், செறிவை கட்டுபடுத்த மற்றும் குறைவுப்படுத்த, இலக்குகளை ஏற்றுக்கொண்டது. இந்த இலக்குகளை, அனுமதிக்கப்பட்ட இலக்கு அல்லது சாட்டப்பட்ட அளவு என்று கூறப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட இலக்குகள், "சாட்டப்பட்ட அளவு எண்கள்" (அசைன்டு அமௌன்ட் யுனிட்ஸ்) ஆக பிரிக்கப்படுகிறது.

நாடுகள் தன் செறிவை, அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் குறைவாக  கட்டுபடுத்தினால், மீதமுள்ள செறிவு அளவுகளை விற்றுவிடலாம்.

இதன்மூலம், ஒரு விற்பனை செய்யக்கூடிய புதிய பொருள் உற்பத்தியாகியுள்ளது. பசுமை இல்ல வாயுக்களுள் கார்பன் முதன்மையான காற்று என்பதால், இந்த வர்தகத்திற்கு, கார்பன் வர்த்தகம், என்று பெயரிடப்பட்டது.  இப்பொழுது, கார்பன் ஆனது, மற்ற பொருளைப்போல், வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவே பொதுவாக, கார்பன் வர்த்தகம் என்று கூறப்படுகிறது.

கார்பன் வர்த்தகத்தில், வேறு வர்த்தக பொருள்கள்
இந்த திட்டத்தின் கீழ், ஒரு டன் கார்பன்டைஆக்சைடுக்கு சமமான, வரும் வேறு வர்த்தக பொருள்கள் ஆவன,

  • காடு வளர்த்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் நில பயன்பாடு, நிலபயன்பாட்டு மாற்றம் மற்றும் வனவியல் ஆகிய செயல்கள் மூலம், கார்பன் நீக்கு அளவு - ரிமூவல் யுனிட் (RMU)
  • கூட்டு நிறைவேற்று திட்டம் மூலம், செறிவு குறைவு அளவு - எமிஷன் ரிடக்ஷ்ன் யுனிட் (ERU)
  • கீளின் டெவலப்மெண்ட் மெக்கனீச (CDM) திட்ட நடவடிக்கை மூலம், சான்றளிக்கப்பட்ட செறிவு குறைப்பு - செர்டிபைட் எமிஷன் ரிடக்ஷ்ன் (CER)


ii. கீளின் டெவலப்மெண்ட் மெக்கனீசம் (CDM)

கியோட்டோ ஒப்பந்தத்தின் ஆர்டிகள் 12-ல் கூறப்பட்ட படி, கீளின் டெவலப்மெண்ட் மெக்கனீசம் (CDM) மூலம், செறிவு குறைப்பு அல்லது கட்டுப்பாட்டை செய்ய வேண்டிய ஒரு நாடானது, வளரும் நாடுகளில் செறிவை குறைக்கும் திட்டத்தின் மூலம் தனது இலக்கை அடையலாம். இவ்வகையான திட்டங்கள் மூலம், விற்கக்கூடிய, ஒரு டன் கார்பன்டைஆக்சைடுக்கு சமமான சான்றளிக்கப்பட்ட செறிவு குறைப்பு அளவீடுகளை சம்பாதிக்கலாம். 

சூரிய ஒளிக்கொண்டு, கிராமத்தை மின்சார மயமாக்குதல் அல்லது அதிக திறன்கொண்ட கலன் அமைத்தல் ஆவன,  CDM-ன் கீழ் வரும் திட்டங்களாகும். இந்த வழிமுறை நிரந்தரமான மேம்பாட்டை மற்றும் செறிவு குறைப்பை ஊக்குவிக்கும். அதே சமயத்தில், வளர்ந்த நாடுகள் தங்களது செறிவை குறைக்க பல வழிமுறைகளை ஏற்படுத்தவும் செய்கிறது.

CDM-ன் கீழ் செய்யப்படும் முயற்சிகள் இயற்கையாக நடக்கும் செறிவை காட்டிலும் கூடுதலான செறிவை ஏற்படுத்த வேண்டும். இவ்வாரு செயலாக்கப்படும் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அதிகாரிகளால் கண்டிப்பான மதிப்பீட்டில் தகுதியானதாகவும், ஒப்புதல் பெற்றதாகவும் இருக்கவேண்டும்.


iii. கூட்டு செயல்பாடு

கியோட்டோ ஒப்பந்தத்தின் ஆர்டிகள் 6-ன் படி, கூட்டு செயல்பாடு மூலம், செறிவு குறைப்பு அல்லது கட்டுப்பாட்டை செய்ய வேண்டிய ஒரு நாடானது, வேறு ஒரு நாட்டில் அத்தகைய செறிவு செயலாக்குவதன் மூலம் தனது இலக்குகளை அடையலாம்.  இவ்வாரு செய்யப்படும் செறிவு குறைப்பு, ஒரு டன் கார்பன்டைஆக்சைடுக்கு சமமான அளவீடுகளாக கணக்கு செய்யப்படும்.




Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: