ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் குறித்த கோபன்ஹேகன் கருத்தரங்கம்
வெப்பம் அதிகரித்தலை குறைக்க, கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துதல் மற்றும் வளரும் நாடுகளில் பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தேவையான நிதியை தயார் செய்தல் ஆகிய அரசியல் உடன்பாடுகளுடன், கோபன்ஹேகனில் நடைபெற்ற ஐக்கிய நாட்டின் பருவநிலை மாற்றம் கருத்தரங்கம் முடிவுற்றது.
கோபன்ஹேகன் ஒப்பந்தத்தை, பெரும்பாளான நாடுகளின் உலக தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த ஒப்பந்தமானது, அதிகரிக்கும் வெப்பநிலையை, 2 டிகிரி செல்சியஸ்களுக்குள் குறைக்காவிட்டால், ஏற்பட போகும் தீமைகளை தடுப்பது கடினம் என்ற அறிவியல் நோக்கை ஏற்றுக் கொண்டனர். இந்த இலக்கை அடைவதற்காக, இந்த ஒப்பந்தம், வளர்ந்த நாடுகளை தனியாகவோ, அல்லது சேர்ந்தோ, 2020-லிருந்து அளவிடக்கூடிய நிர்ணயிக்கபட்ட கார்பன் உமிழ்வு குறிக்கோள்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கும் என்றும் குறிப்பிடுகிறது. அந்த அளவுப் பட்டியல் 31, ஜனவரி 2010க்குள் அளிக்க வேண்டும் என்பதையும் கூறியது.
மேலும் பல வளர்ந்துவரும் நாடுகளும் (பெரிய பொருளாதார நாடுகள் உட்பட) பசுமை கூடார வாயுக்களை குறைப்பதற்கான முயற்சிகளைக் குறித்து, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பகிர்ந்து கொள்வதுடன், 31 ஜனவரி 2010க்குள் தங்களுடைய விருப்ப ஒப்பந்தங்களை அளிக்கவும் ஒப்புக் கொண்டது.
மூலம் : http://unfccc.int


