உலக சுற்றுப்புற சூழல் தினம் 2011

ஐக்கிய நாடுகளின் சுற்றுப்புற சூழல் திட்டத்தின் கீழ் 1972 ஆம் ஆண்டிலிருந்து உலக சுற்றுப்புற சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. இது, சாதகமான சுற்றுப்புற சூழல் வேலைகளுக்காக ஐக்கிய நாடுகளினால் கொண்டாடப்படும் மிகப் பெரிய கொண்டாட்டம் ஆகும்.

பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் ஓர் பங்காக உள்ள காடுகளானது உலகமெங்கும் முக்கிய வேலைகள் மற்றும் சேவைகள் செய்வதன் மூலம் நம் கோளை எல்லா வித நிகழ்வுகளுடன் உயீரூட்டம் உள்ளதாக செய்து வருகின்றன. சொல்லப் போனால், 1.6 பில்லியன் மக்கள் தங்களுடைய வாழ்க்கைத் தரத்திற்கு காடுகளையை சார்ந்து வாழ்கின்றனர். அவை, ஆக்சிஜன் வாயுவை வெளி மண்டலத்தில் வெளியிடுவதன் மூலமும், கார்பன் – டை – ஆக்சைடை சேமித்து வைப்பதன் மூலமும் பருவ நிலை மாற்றத்திற்கு எதிராக நாம் நடத்தி வரும் போராட்டத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன. நாம் உயிர் வாழத் தேவையான சுற்றுப்புற சூழல், பொருளாதார, சமூக மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற விலை மதிப்பற்ற நன்மைகளை காடுகளிலிருந்து பெற்ற போதும், நாம் அத்தகைய காடுகளை அழித்து கொண்டு தான் இருக்கின்றோம்.

இந்த வருடத்தில், உலக சுற்றுப்புற சூழல் தினமானது அகில ஐக்கிய நாடுகளினால் “உலக காடுகளின் வருடமாக” கொண்டாடப்படுவதை “காடுகள் : இயற்கை உங்கள் சேவையில்” என்ற தலைப்பில் ஆதரிக்கிறது. இந்த தலைப்பானது, காடுகளின் சுற்றுப்புற சூழல் மற்றும் ஆரோக்கியம் ஆகிய இவைகளுக்கும், வாழ்க்கையின் தரத்திற்கும் இடையேயுள்ள பிணைப்பை வலியுறுத்துவதாக உள்ளது.

அகில உலக அளவில் அதி வேகமாக பொருளாதாரத் துறையில் முன்னேறி வரும் நாடுகளில் ஒன்றான இந்தியா, பசுமையான பொருளாதாரத்தை தழுவ சென்று கொண்டிருக்கும் மாற்றமான சூழலில், முதன் முறையாக 2011 ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுப்புற சூழல் தினத்தை ஜூன் 5 ந் தேதி அகில உலக அளவில் ஏற்று நடத்தும் நாடாக உள்ளது.

மேலும் தகவல் அறிய, www.unep.org/wed/index.asp


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: