2010 – 11 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜட்டில் சுத்தமான சுற்றுச்சூழல் தொடர்பானவை

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கான ஒதுக்கீடு ரூ. 620 கோடிகளிலிருந்து, 61 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 2010-11 ம் ஆண்டில் 1,000 கோடிகளாக நிர்ணயம்.
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 1 டன் நிலக்கரிக்கு, ரூ. 50 வீதம் சுத்தமான எரிசக்தி வரி விதிக்கப்படுகிறது.
  • தேசிய அளவில் சுத்தமான எரிசக்தி நிதி உருவாக்கப்படுகிறது.
  • மண் அரிமானத்தைத் தடுக்கவும், பசுமையை அதிகரிக்கவும், கோவாவிற்கு ரூ. 200 கோடிகள் சிறப்பு ஒதுக்கீடாக அளிக்கப்படுகிறது
  • 2010 – 11 ல் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளுவதை கருத்தில் கொண்டு செய்யப்படும் விவசாய முன்னோடித் திட்டங்களுக்கு ரூ. 200 கோடிகள் அளிக்கப்படுகிறது

மின்னணுக் கழிவுகள் உற்பத்தி, 2012 ஆம் ஆண்டில் 8 லட்சம் டன்களாக உயரும் 

2005 ஆம் ஆண்டில் 1,46,800 டன்களாக இருந்த மின்னணுக் கழிவுகளின் உற்பத்தி, 2012 ஆண்டில் 8,00,000  டன்களாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், ஹைதராபாத், புனே, சூரத் மற்றும் நாக்பூர் ஆகியவை மின்னணுக் கழிவுகளை அதிகம் உற்பத்தி செய்யும் முதல் 10 நகரங்கள் என மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின்  (CPCB) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கார்களும் பருவநிலை மாற்றமும்

ஒவ்வொரு முறையும் ஒரு கார் பயணிக்கும்போது, காற்றில் கரியமிலவாயு வெளியேற்றப்படுகிறது. ஒரு ஆண்டில், ஒரு டிரைவரால், 7700 கிலோகிராம் அளவு கரியமில வாயுவை காற்றில் வெளியேற்றக்கூடிய அளவுக்கு பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்தப்படுகிறது. இந்த அளவுக்கு ஒரு காரினால் வெளியேற்றப்படும் கரியமில வாயுவை கிரகித்துக்கொள்ள, நமக்கு சராசரி அளவுள்ள நூறு மரங்களுக்கு மேல் தேவைப்படும்.

போக்குவரத்தை புத்திசாலித்தனமாக உபயோகிப்பீர.: அதிக மரங்களை நடுவீர்.

மாசுக்கட்டுப்பாட்டில், இந்தியா 123 வது இடத்தில் மதிப்பிடப்பட்டுள்ளது

2010 ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்பாட்டு குறியீட்டின்படி, (Environmental Performance Index - EPI), வேகமான தொழில்துறை வளர்ச்சியால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை பிரதிபலிக்கும் வண்ணம், மாசுக்கட்டுப்பாட்டில் இந்தியா 123 வது இடத்தில் மதிப்பிடப்பட்டுள்ளது. இதே குறியீட்டின்படி, மாசுக்கட்டுப்பாடு மற்றும் இயற்கை வள மேம்பாட்டில் உள்ள பிரச்சினைகளை கையாளுவது ஆகியவற்றில், ஐஸ்லாந்து நாடு உலகிற்கு முன்னோடியாக உள்ளது. சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகா, சுவீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் அதே போல் செயல்படுகின்றன.

யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுற்றுச்சூழல் வல்லுனர்களால், இந்தக் குறியீடு கணக்கிடப்படுகிறது. சுற்றுச்சூழல் ஆரோக்கியம், காற்றின் தரம், நீர் வள நிர்வாகம், பல்வகை உயிரிகள் மற்றும் வாழ்விடத்தின் தரம், வனங்கள், மீன்வளம், வேளாண்மை மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற 10 வகைகளாக தொகுக்கப்பட்ட 25 அளவீடுகளின் அடிப்படையில், 163 நாடுகள் இக்குறியீட்டின்கீழ் மதிப்பிடப்படுகின்றன.


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: