வாழ்வுக்கு ஒளி ஏற்றுவோம்

அனிமிகாவிற்கு ஆங்கிலம் மிகவும் பிடித்தமான பாடம். அவளுக்கு எதிர்காலத்தில் மருத்துவராக ஆசை. ‘இந்த விளக்குகள் நான் படிப்பதற்கு மிகவும் உதவியாக உள்ளன அதனால் நான் இன்னும் நன்றாக படிக்க இயலும். இங்கே மின்சாரத் தட்டுப்பாட்டினால் ஏகப்பட்ட தொல்லைகள் உள்ளன. சமீபமாகக் கூட இரண்டு, மூன்று நாட்களாக மின்சார விநியோகம் இல்லை. இது போன்ற விளக்குகள் இருந்தால் நாங்கள் இரவிலும் வேலை செய்ய முடியும்’ என்று அனிமிகா கூறுகிறாள்.

உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் 454 கஸ்தூரிபாய் காந்தி பாலர் பள்ளிகள் உள்ளன. அவற்றுள் 376 அரசாங்கமும், 78 பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்களாலும் இயக்கப்படுகின்றன. இத்திட்டத்தில் 37,000-க்கும் அதிகமான சிறுமிகள் பதிவு செய்துள்ளனர்.

IKEA சமுதாய இயக்கத்தால் நூறு, சூரியஒளி மூலம் இயங்கும் சன்ஆன் (SUNNAN) விளக்குகள் பள்ளிக்கு கடந்த மாதம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த விளக்குகளின் எண்ணிக்கை பள்ளியில் பயிலும் ஒவ்வொரு சிறுமிக்கும் ஒன்று என்ற விகிதத்தில் போதுமானதாக இருந்தது. மாணவர்கள் பளிச்சென்று இருக்கும், அந்த விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கி அதன் பாகங்களை ஒன்றிணைத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

‘பொதுவாக இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாததால் சிறுமிகளால் படிக்க முடியவில்லை. ஆனால் ஒவ்வொரு சிறுமிக்கு இந்த விளக்குகள் வழங்கப்பட்டவுடன் அவர்கள் படிக்கும் நேரத்தை அவர்கள் விருப்பம் போல திட்டமிட்டு பயன்படுத்திக்கொள்கின்றனர்’ என்று கிஷோர் தெரிவிக்கிறார். ‘இந்தப் பகுதி முழுவதும் ஊரகப்பகுதி, மின்சார விநியோகம் 2-4 நாட்களுக்கு கூட தொடர்ச்சியாக இருப்பதில்லை. இவ்வாறான சூழ்நிலையில் இந்த விளக்குகள், படிக்கும் எங்கள் சிறுமிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. படிப்பதில் ஆர்வம் கொண்ட எங்கள் சிறுமியர் பகல் நேரத்தினைப் போன்றே இரவிலும் படிக்க விரும்புகின்றனர்’.

IKEA கடைகளின் மூலம் விற்கப்படும் ஒவ்வொரு சன்ஆன் விளக்கிற்கும் ஒரு சன்ஆன் விளக்கு உலக குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு இலவசமாக வழங்கபட்டு, அதன் மூலம் மின்சார வசதியில்லாத குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றுவதற்காக வழங்கப்படுகிறது. IKEA நிறுவனம் வளரும் நாடுகளுக்காகவே சிறப்பாக, சன்ஆன் விளக்கினை வடிவமைத்துள்ளது. இந்த விளக்குகள், கடினமான வாழும் சூழ்நிலைகளுக்கேற்ப தேய்மானங்கள் மற்றும் இதர சேதாரங்களை தாங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அதிக வெப்பநிலையைத் தாங்கும் பேட்டரியும் உள்ளது.

மொத்தமாக 66,740 சன்ஆன் விளக்குகள் 6,949 பள்ளிகளுக்கும், பெண்கள் எழுத்தறிவு குழுக்களுக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் 24720 விளக்குகள் இராசஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், குஜராத் மாநிலங்களில் விநியோகிக்கப்படவுள்ளன.

‘விளக்கு இருக்கும்போது மிகவும் வெளிச்சமாக உள்ளது. அது எனக்கு பிடித்திருக்கிறது’ என்று மாண்டசா மகிழ்ச்சியாக கூறுகிறாள். ‘விளக்கு இல்லாத போது நாங்கள் சீக்கிரம் எங்கள் இரவு உணவினை முடித்துக்கொண்டு தூங்க சென்று விட்டு அதிகாலையில் எழுந்திருக்கவேண்டும். ஆனால் தற்பொழுது நான் இரவிலும் படிக்கலாம்’ என்று அவள் மேலும் கூறுகிறாள்.

‘IKEA சன்ஆன் விளக்குகளுடன் வாழ்வுக்கு ஒளி ஏற்றுவோம் – படக்கட்டுரை’
மூலம் : www.unicef.org


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: