மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடிநீர் பெருக்கம் மூலம் குடிநீர் உத்திரவாதம்

பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த, 641 மக்கள்தொகையையுடைய, மத்தியப்பிரதேச மாநிலத்தின் புண்டல்கண்ட் பகுதியைச் சேர்ந்த டாதியா மாவட்டத்திலுள்ள ஹாமிர்பூர் கிராமத்தில், தாறுமாறான மழை காரணமாக எப்போதும் வறட்சி போன்ற சூழ்நிலை மற்றும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில், 100 (சராசரி 740 மில்லிமீட்டர்) நாட்களாக இருந்த மொத்த மழை நாட்கள், தற்போது 40 ஆக (சராசரி 340 மில்லிமீட்டர்) குறைந்துவிட்டது.

கிராம அளவிலான முயற்சிகள்

சுவஜல்தாரா திட்டத்தின்கீழ் கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் முயற்சியாக, பாய்ஜல் என்று கூறப்படும் கிராம நீர் மற்றும் சுகாதார கமிட்டி அமைக்கப்பட்டு மக்கள் பங்களிப்பாக ரூ. 40,000 வசூலிக்கப்பட்டும், தேவையான அனுமதியை அவர்களால் பெற முடியவில்லை. நிலையான குடிநீர் வழங்கும் முறை இல்லாததால், அதிக தூரத்திலிருந்து குடிநீர் கொண்டு வரவே அதிக நேரம் செலவாகும் பட்சத்தில், பொருளாதார அடிப்படையில் தங்களால் முன்னேற்றமடைய முடியாது என்று கிராம மக்கள் உணர்ந்தனர்.

புதிய கொள்கை

கிராம மக்கள், தங்களுக்குள் இது பற்றி பல கூட்டங்கள் கூட்டி ஆலோசித்தபின், கிராமத்தின் நிலத்தடிநீர் வளத்தை உயர்த்தவும், வருங்காலத்தில் நிலையான குடிநீர் பெறும் வகையிலும், “ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மைக்கான திட்டத்தைக் கடைபிடிக்க தாங்களே முயற்சி செய்ய முன் வந்தார்கள். நிலத்தடி நீரை அதிகரிக்கவும் மற்றும் மழை நீரை சேகரிக்கவும், அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், கிணறுகளை ஆழப்படுத்துதல், கைவிடப்பட்ட சமுதாய மற்றும் ஆழ்துளை கிணறுகளின் அருகில் நீர்சேமிப்பு குழிகள் அமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல் ஆகியவற்றுக்கான திட்டத்தைத் தீட்டினார்கள்.


செயலிழந்த கை அடிகுழாய் மற்றும் கிணறுகளில் நீராதாரப் பெருக்கம்

கை அடிகுழாய்களில் நீர் வரத்து மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக, ஒரு பெரிய குளத்தை உண்டாக்கும் வகையில், வீடுகள் கட்ட மற்றும் சாலைகள் அமைக்க தேவையான மண்ணை எடுக்கக்கூடிய பொது இடத்தை தேர்வு செய்தார்கள். பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறை மூலம், கற்களை கொண்ட தடுப்பணைகளும், பிற கிராமங்களில் வாரிகளுக்கு குறுக்கே தடுப்பணைகளும் அமைக்கப்பட்டதால், தடுப்பணைகளின் மேற்பகுதியிலிருந்த பல கை அடிகுழாய்கள் நீரோட்டம் பெற்றன. கிராமத்திலுள்ள 75 வீடுகள், பள்ளிக்கூடம் மற்றும் அங்கன்வாடியில் மண் மற்றும் சிறு கற்களைக் கொண்ட குழிகள் அமைத்து, கூரையிலிருந்து விழும் மழை நீரை அதில் சேகரிக்கும் பொருட்டு, பிலாஸ்டிக் குழாய்கள் அமைப்பதை கிராம நீர் மற்றும் சுகாதார கமிட்டி துவக்கியது. ‘பர்கித்' என்ற தன்னார்வ அமைப்பு, ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ 500 இதற்காக வழங்கியது. மேற்கொண்ட செலவான ரூ 1000 முதல் 1200 வரையான தொகையை மக்களே ஏற்றார்கள்.

ஹாமிர்பூர் மக்களால், அனைத்து குடும்பங்களுக்கும் அடிப்படை தேவைக்கான சுத்தமான குடிநீரை பெறுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அவர்களின் பயணம், ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை வழிகள், அதிக அளவிலான மழைநீர் சேகரிப்பு மற்றும் பிற நீர் பெருக்க முயற்சிகளால், போதுமான அளவு குடி நீரைப் பெறுவதில் முடிந்தது. இது அதிக பயன்களை தந்த சிறப்பான பரிசோதனையாகும்


பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறையால் கட்டப்பட்ட தடுப்பணை மற்றும் கூரையிலிருந்து விழும் மழைநீரை சேகரித்தல்

மூலம்: http://pib.nic.in/release/release.asp?relid=57116&kwd=


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: