பன்கங்கா- சூரிய சக்தி மூலம் திருத்தம் பெற்ற கிராமம்
இராஜஸ்தானில், விரத் நகர் வட்டாரத்திலுள்ள
ஒரு கிராமம் தான் பன்கங்கா. இந்த கிராமத்தில் நிலத்தடி நீர் அதிகளவில்
எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. காடுகளும் அழிக்கப்பட்டுள்ளன.
நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம், வெற்று தரிசாகவே இருக்கிறது. இதனால்
அப்பகுதியில் மழையும் குறைந்துவிட்டது.
பன்கங்கா கிராம மக்கள் விவசாயத்தையே முக்கிய
தொழிலாகக் கொண்டுள்ளனர். மின்சார கிரிட் வெகு காலத்திற்கு முன்பே வந்த
போதிலும், இந்த கிராமத்திற்கு இன்னும் மின்சார கிடைக்கவில்லை. இந்த
கிராமத்தில் சூரிய ஒளி அஸ்தமனத்திற்கு பிறகு நடைபெறும் அனைத்து பணிகளும்
மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்திலேயே நடைபெறுகிறது. மண்ணெண்ணெய்
விளக்கிலிருந்து வரும் புகையானது, மக்களின் உடல் நலத்தையும், கண்
பார்வையையும் பாதிக்கின்றது.
-
 |
ஒரு கோடி மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் திட்டம் துவக்கப்பட்டபின்,
மக்கள் வாழும் சூழலில் மாற்றம் ஏற்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பன்கங்கா
கிராம மக்களுக்கு தூய்மையான, பிரகாசமான வெளிச்சம் வழங்கப்பட்டுள்ளது.
|
வாடகைக்கு வைக்கப்பட்டுள்ள வெளிச்சம்
தரக்கூடிய லாந்தர்கள் அனைத்தும் தினமும் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.
இதிலிருந்து மக்களின் தேவையை நம்மால் உணர முடியும். பன்கங்கா
கிராமத்திலுள்ள 100 வீடுகளில், அந்த மக்களின் வாழ்க்கைத்தரம் உயர
லாந்தர்கள் உதவி செய்துள்ளன. வீட்டில் வெளிச்சம் காணப்பட அதிகளவில்
லாந்தர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. சரியான விளக்கு வெளிச்சம்
ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், மாணவர்கள் வீட்டிலும், கல்விக்
கூடங்களிலும், இரவு நேரத்தில் படிக்க முடிகிறது. லாந்தர்கள், மாலை மற்றும்
இரவு நேரத்தில் பெண்கள் உபயோகமான பணிகளை முழுமையாகவும், வேகமாகவும் செய்து
முடிக்க உறுதுணை புரிகின்றன. லாந்தர்களை பயன்படுத்துவதன் மூலம்
வீட்டிற்குள் சுற்றுச்சூழல் மாசுபடுதல் குறைகிறது. இதன் மூலம் சமூகத்தின்
சுகாதாரம் மேம்படுகிறது, குறிப்பாக குழந்தைகள், பெண்கள் நிம்மதியாக வாழ
முடிகிறது.
|
|
-
|
மேம்படுத்தப்பட்ட வெளிச்சம் வழங்கும் வசதிகள், உற்பத்தியையும்,
வருமானத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. அதாவது கூடை பின்னுதல், துடைப்பம்
செய்தல், காய்கறிகளை பிரித்தெடுத்தல், கிராமப்புற சந்தைகளை உருவாக்குதல்
ஆகியவற்றிற்கு இந்த லாந்தர்கள் பயன்படுகின்றன.
|
 |
இதன் மூலம் தனி நபர் வருமானம், குடும்ப வருமானம் அதிகரித்துள்ளது.
லாந்தர்களை, கடைகாரர்களும், காய்கறி விற்பனையாளர்களும் அருகிலுள்ள
சந்தைகளில் பயன்படுத்துகிறார்கள். இதனால் இந்தக் கடைகள் மாலை நேரத்தில்
நீண்ட நேரம் திறந்திருக்கின்றன. இதனை செயல்படுத்தும் நிறுவனம்
கிராமங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை நடத்துகிறது. இக்குழுக்களின்
உறுப்பினர்கள் லாந்தர்களை பயன்படுத்தும் போது, வியாபார நோக்கிலான
உற்பத்தியில் அதிக நேரம் செலவிட முடிவதாகவும், அதனால் குழுவுக்கும்
தங்களுக்கும் கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்புகள் கிடைப்பதாகவும்
கூறுகின்றனர். வரும் காலங்களில் சுயஉதவிக்குழுவினர் அவர்களுக்கான வங்கிக்
கணக்கை துவக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்குள்ளே கடன் கொடுத்து
வாங்கவும் திட்டமிட்டுள்ளனர்.
திருமதி கோட்டி தேவி, சக்தி லாந்தர் வழங்கும் நிலயத்தை நடத்துபவர்.
இவருக்கே ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டு அந்த நிலையத்தை நடத்துவதன் மூலம்
நன்மதிப்பும், மரியாதையும் அவருக்கு கிடைத்துள்ளது. அவருடைய மகன் திரு.
ஓமி, தொழில்நுட்ப ரீதியில் உதவிகரமாக இருக்கிறார். அது மட்டுமல்ல
லாந்தர்களை வாங்கிச் சென்றவர்கள் சரியான நேரத்தில் திரும்ப கொண்டு வந்து
கொடுக்கவில்லை என்றால், விசாரித்து, அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் ஓமி
உதவியாக இருக்கிறார்.
|
|
மூலம் : http://labl.teriin.org