பசுமை வழி - வாழ்க்கை தரத்தை மேம்படுத்த புதுப்பிக்கவல்ல ஆற்றலின் பயன்பாடு

பனோ ஹன்ச்டா, தன்னுடைய சாண எரிவாயு அடுப்பில் தேனீர் தயாரித்துக் கொண்டே பெருமையாக, “நாங்கள் சமைப்பதற்கு இப்பொழுது சாண எரிவாயு அடுப்பை உபயோகிக்கின்றோம். இரவில் சூரிய மின்சாரத்தை பயன்படுத்துகிறோம். இதனால், என்னால் சாயங்கால நேரங்களில், ஏதாவது வேலை செய்ய முடிகிறது” என்று கூறுகிறார். சில மாதங்களுக்கு முன்னர்தான், பனோ ஒரு சாண எரிவாயு உற்பத்தி கலனுக்கு சொந்தகாரர் ஆனார். இந்த கலன், சாணம் மற்றும் இலை சறுகை எரிவாயுவாக மாற்றும் திறன் கொண்டது. ஜார்கண்ட் மாநிலத்தின் சோரோ கிராமத்தின் மக்களின் அன்றாட வாழ்க்கையை மாற்றியமைத்தது போல், புதுப்பிக்கவல்ல ஆற்றலான சாணவாயு மற்றும் சூரிய சக்தியின் பயன்பாடு, பனோவின் அன்றாட வாழ்க்கையையும் மாற்றி அமைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் (UNDP) கிராமபுற மக்களின் வாழ்க்கை தரத்துக்கான புதுபிக்கவல்ல ஆற்றல் திட்டம் செயல்படும் 34 கிராமங்களில் ஒன்று, சோரா கிராமம். இந்த திட்டமானது ஜார்கண்ட், உத்தர்கண்ட், இராஜஸ்தான் மற்றும் சிக்கீம் ஆகிய மாநிலத்தின் தொலைதூர கிராமங்களில் செயல்பட்டு வருகிறது.

சோரா கிராமங்களின் கூரை மேல் இருக்கும் சூரிய பேனல்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமில்லாமல், வீட்டிற்கு தேவையான மின்சாரத்தையும் அளிக்கும். மேலும் வீதிகளின் விளக்குகளையும் எரிய வைக்கும். இவைகளை நிறுவுவதற்கு முன்னர், இக்கிராமத்தில் மின்சாரம் இல்லையாதலால், கிராம மக்கள் மண்ணெண்ணெய் விளக்குகளை சார்ந்து இருந்தனர். இப்பொழுது சோரா கிராமத்தில் பொழுது சாயும் நேரத்தில் குழந்தைகள் தங்கள் வீட்டு பாடங்களை செய்வதற்கு தெருவிளக்கு அருகே கூடுகின்றனர்.

விமலா என்பவரும் தன்னுடைய சுயஉதவிகுழு மூலம், புதுப்பிக்கவல்ல ஆற்றல் பயன்பாடு செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார். விமலா கூறுகையில் “அவர்கள் உயிர்பொருள் எரிவாயுவை, அரிசி அரைப்பதற்கு உபயோகிப்பதாக கூறினார். இதனால் பணமும் சம்பாதிக்க முடிகிறது என்று கூறுகிறார். இந்த உயிர்பொருள் வாயு உற்பத்தி கலனானது உயிர்ப் பொருளை வாயுவாக மாற்றி மின்சாரம் உற்பத்தி செய்ய உதவுகிறது. முன்பெல்லாம் சுய உதவி குழுவில், பெண்கள் அரிசி அரைக்கும் வேலையில் ஈடுபட விருப்பமில்லாமல் இருந்தனர். ஆனால் இப்பொழுது ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர் என்று விமலா கூறுகிறார். விமலாவின் சுய உதவி குழுவில் இருக்கும் பெண்கள் இதன் மூலம் கிடைக்கும் பணத்தை, தங்கள் மகள்களை படிக்க வைக்க உபயோகிக்கின்றனர். இராஜேஷ் என்னும் விவசாயி இந்த உயிர்பொருள் வாயு உற்பத்தி கலனை வேறொரு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்துகிறார். இந்த உயிர்பொருள் எரிவாயு உற்பத்தி கலனின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு தேவையற்ற மரக்கட்டைகளைக் கொண்டு கரித்துண்டுகள் தயாரிப்பதற்கு பயன்படுத்துகிறார். இக்கரித்துண்டுகளை அருகில் உள்ள தொழிற்சாலைக்கு விற்பனை செய்கின்றார். இதனால் இவர் வேலைக்காக வெளீயூர் செல்ல தேவை ஏற்படுவதில்லை. இதனால் தன் கிராமத்திலேயே இருந்து தன்னுடைய நிலங்கள் மற்றம் குடும்பத்தினரைக் கவனித்துக் கொள்ள முடிகிறது. இந்த கரித்துண்டுகள், தொழிற்சாலை உலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தின் சரைகேளா-கார்ச்வான் என்றும் மாவட்டத்தில் 110 சாண எரிவாயு கலன்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கு முன்னர் சமைப்பதற்கு உபயோகப்படுத்திய 240,900 கிலோ விறகுகள் மிச்சம் ஆகிறது. இது 385, 440 கிலோ கரி அமில வாயு உமிழ்வை கட்டுபடுத்தியுள்ளது. இந்த கரிஅமில வாயுவின் அளவு, ஒருவருடத்தில் 200 இந்திய கார்கள் உமிழும் அளவாகும். இந்த திட்டம் தொடங்கியதில் இருந்து, மொத்தத்தில் 39,286 வேலை நாட்களை அளித்துள்ளது.

மூலம்: www.undp.org


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: