கிராமப்புற வாழ்க்கை மேம்பாட்டிற்கான புதுப்பிக்கவல்ல ஆற்றல் - பெண்களின் எதிர்காலத்தை சுடர்விட செய்யும் முயற்சி

இராஜஸ்தான் மாநிலத்தின் விளிம்பில், நான்கு கிராமங்கள் தன்னுடைய இரவை இன்கேன்டஸண்ட் விளக்குகளால் மிளிர வைத்துக் கொண்டிருந்தது. ஏற்றம் இறக்கம் கொண்ட பாலைவனப் பகுதியில், பரவி கிடக்கும் வீடுகளைக் கொண்ட இந்த கிராமமானது, மின்சார கம்பியுடன் இதுவரைக்கும் இணைக்கப்பட வில்லை. இப்பொழுது அவர்களிடம் இருக்கும் விளக்குகள் எல்லாம் இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடு மேம்பாட்டு திட்டமான "கிராமப்புற வாழ்க்கை மேம்பாட்டிற்கான புதுப்பிக்கவல்ல ஆற்றல்" என்னும் திட்டத்தின் கீழ் பெறப்பட்டவை.

இரவு நேரங்களில், முற்றத்தில் எரியும் ஒரு விளக்கானது, அங்குள்ள மக்களுக்கு ஒரே வழிகாட்டியாகயாகும். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இக்கிராமங்களைச் சேர்ந்த நான்கு பெண்களே இந்த விளக்குகளைப் பொருத்துகிற பொறியியற் பணியை மேற்கொண்டு, இப்பொழுது பராமரிக்கிற பணியையும் மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு நான்கு பெண்களை, இந்த சூரிய ஒளி மின்விளக்கு பயிற்சி பெறுவதற்கு வரவழைப்பது ஒரு பெரிய செயலாக அமைந்தது. சமூக சேவை மற்றும் ஆராய்ச்சி மையம் (SWRC) என்ற அமைப்பு, திலோனியாவை சார்ந்த, ஒரு அரசுசாரா நிறுவனமாகும். இது இவ்வாறு பயிற்சி அளிப்பதற்கு ஒரு பயிற்சி மையத்தை இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் நடத்தி வருகிறது. இதுவே இத்திட்டத்தை பர்மர் என்னும் கிராமத்தில் நிறுவியது.

இந்த நான்கு பெண்களும் ஐந்தாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரையே பள்ளி சென்று பயின்றுள்ளனர். இதில் யாரும் தங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றதோ அல்லது பக்கத்து கிராமத்தை தாண்டியதோ இல்லை. இந்த நான்கு பயிற்சி பெற்ற பெண்களில் மூவர் திருமணம் ஆனவர், ஒருவருக்கு நிச்சயம் ஆகியுள்ளது.

கிராம மக்கள், ஆண்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று கூறியபோது, திட்டமானது பெண்களுக்கு தான் பயிற்சி என்று கூறியது. இதை மக்கள் ஏற்பதற்கு நீண்ட காலம் ஆனது. கடைசியில் பகவதி, சஜானி, சலிமாட்டி மற்றும் சனோ ஆகியோர், SWRC-யில் இரண்டு மாதங்கள் தங்கியும் பின்னர் ஒரு மாதம் களப்பயிற்சியும் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்களே கிராமத்தில் விளக்குகளை அமைத்தும் அடிக்கடி கண்காணித்தும், சரி செய்தும், புகார்களை சரி செய்தும், விளக்குகளின் பேட்டரிகளை சக்தியூட்டவும் செய்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன், ஏனைய பெண்கள் போல் வீட்டை சுத்தம் செய்யவும், நீர் கொண்டு வரவும், சமைக்கவும் செய்து கொண்டிருந்த இந்த இளம் பெண்கள், இப்பொழுது பொறியாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். இந்த விளக்கை கொண்ட, ஒவ்வொரு குடும்பமும், கிராம பொது நிதிக்கு, பணம் தருவதிலிருந்து, இப்பெண்கள், ரூபாய் 1000-திலிருந்து ரூபாய் 1350 வரை மாத சம்பளம் பெறுகின்றனர்.

மூலம் : www.undp.org

 

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: