கோட்டபாளையத்தில், இரவிலும் சூரிய ஒளி!
பொது நலனுக்காக, இந்தியாவில் பலகிராமங்கள், கோட்டபாளையம் கிராமம் போல், மாற்றியமைக்கப்படலாம். அரசு சாரா நிறுவனம், தனியார் நிறுவனம், உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் மாநில அரசு ஆகியவற்றின், கூட்டு முயற்ச்சியால், இந்த விந்தை நிகழ்ந்தது.
|
முருகம்மா என்பவர், கோயம்புத்தர் சென்றுவிட்டு இரவு நேரத்தில் கடைசி பேருந்தில் கோட்டபாளையம் திரும்பியுள்ளார். வீடு சென்றவுடன், தனது 10 வயது மகளை, தெரு குழாயில் நீர் எடுத்து வர அனுப்பினாள். ஆனால், மூன்று வருடங்களுக்கு முன் இவ்வாறு தன் மகளை, முருகம்மா, அனுப்பி இருக்க முடியாது. கோட்டபாளையம், ஒரு அழகிய மற்றும் தூய்மையான கிராமம். கிராமத்தில் உள்ள
50 வீடுகளும் (முருகம்மாவின் வீடு உட்பட) அழகான வீதிகளுடன்
அமைக்கப்பட்டிருக்கும். |
சிவப்பு கலர் கூரை மற்றும் பளீரென்று சுவர்களையுடைய எளிமையான கலைநயத்தடன் வசிக்கக்கூடிய வீடுகள் ஆகும். வவ்விபாளைய பஞ்சாயத்தின், 10 குக்கிராமங்களின் ஒன்றான கோட்டபாளையத்திற்கு, தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோயம்புத்ததூரில் இருந்து, 1.5 மணி நேரத்தில் பேருந்தில் சென்று விடலாம்.
2004-ல் கோட்டபாளையம் கிராமம், பகலில்
சூரியனால் வெளிச்சமாய் காணப்பட்டு, இரவில் இருளால் சூழ்ந்த கிராமமாக
இருந்தது. தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராமங்களைப் போல், மின்சார
மயமாக்கப்பட்டிருந்தாலும், மின்சாரம் தடையின்றி கிடைப்பது அரிதாக
இருந்தது. இந்த சூழ்நிலையில், முருகம்மா, கடைசி பஸ்ஸையோ, தன் மகளை இரவில்
தண்ணீர் பிடிக்கவோ அனுப்பி இருக்க முடியாது.
ஆனால் இன்று, 10 சூரிய போட்டோவோல்டிக் தெரு விளக்குகள் கொண்ட கிராமமாக
இருக்கிறது. இவை வவ்விபாளைய பஞ்சாயத்திற்கு சொந்தமானதாகும். இந்த
விளக்கிற்காக, பஞ்சாயத்து, எந்த மின்சார கட்டணமும் கட்டவேண்டியதில்லை.
கடினமாக உழைக்கும், ஆண் மற்றும் பெண், குறிப்பாக, நிலமற்றவர்கள், இந்த
விளக்குகளை நினைத்து பெருமையடைகிறார்கள்.
தொழில்நுட்ப ரீதியாக, இவ் விளக்குகளை நிறுவுவது எளிது. ஆனால், இந்த
திட்டத்தை ஆரம்பித்தது, தனித்துவம் வாய்ந்தது. இந்த கிராமத்தில் இயங்கும்,
அரசு சாரா இயக்கமான, சிந்தனை சிற்பிகளின், சுந்தரமூர்த்தி மற்றும்
செந்தில் ஆறுமுகம், ஆகிய இருவரும் இத்திட்டத்திற்கான தொடக்கத்தை
கொடுத்தனர். இவர்கள், கோயம்புத்தூர் மாவட்ட கிராமபுற மேம்பாட்டு
நிறுவனத்தின், திட்ட அலுவலர், ஜெயபாலகிருஷணன் என்பவரிடம், இன்பராசிஸ்
எனும், பெங்களுர் சார்ந்த நிறுவனத்தை அறிமுகப்படுத்தி வைத்தனர்.
இன்பராசிஸ் எனும் நிறுவனம், கிராமபுற கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதியுதவி
அளிக்கும் நிறுவனமாகும்.
இவர்களுக்கிடையே ஆன ஒப்பந்தம் மிக எளிமையானதாகும். தமிழ்நாடு அரசு,
இத்திட்டத்திற்காக ரூ.1,00,000/- மான்யமாக அளிக்கும். இன்பரசிஸ்சும் அதே
அளவு பங்கை முதலீடு செய்து, பின்வரும் மூன்று வருடங்களில் சிறிய வருமானம்
வாயிலாக, முதலீட்டை திரும்ப பெறும். மூன்று வருடங்களுக்கு பின்னர்,
வவ்விபாளைய பஞ்சாயத்து, இந்த விளக்குகளை சொந்தமாக்கிக் கொண்டு, பின்னர் 20
வருடங்களில், மின்சார சேமிப்பு மூலம், ரூ.3,00,000/- வருமானமாக
பெறும்.
ஜனநாயக மற்றும் ஒளிவு மறைவு இல்லாத இந்த திட்டத்தை பஞ்சாயத்து மற்றும்
ஊர்மக்கள் ஒப்புக்கொண்டனர். 2004, ஜனவரி 2ம் தேதி, கிராம சபையில்
வவ்விபாளைய மக்கள், இன்பராசிஸ் நிறுவனத்துடன், சூரிய தெருவிளக்குகளுக்கான
திட்டத்தில் உடன்படிக்கை எடுத்துக் கொள்வதற்கான தீர்மானத்தை
நிறைவேற்றினர். இது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில்,
பிப்ரவரியில் முடிவு செய்யப்பட்டு, முகமையின் வழிகாட்டுதலில், மே, 2004ல்
விளக்குகள் நிறுவப்பட்டது.
|
பிப்ரவரி 2005-ல், விளக்குகள், இரவில் வெளிச்சம் காட்டத் தொடங்கியது. இங்கு வசிப்பவர்கள் இந்த சாதனையில் பெருமிதமாக உள்ளார்கள். இப்பொழுது அவர்கள், இரவில் பாதைகளை காண முடிகிறது, இவர்களது குழந்தைகள், வெளியில் அதிக நேரம் விளையாட முடிகிறது. இதைவிட எல்லாம் சிறந்தது, இவர்களை எந்தவித மின்வெட்டும் பாதிப்பதில்லை. |
விளக்குகளை எங்கெங்கு நிறுவுவது என்பது ஜனநாயக முறையில் முடிவெடுக்கப்பட்டாலும், சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் இரண்டு விளக்குகள் மட்டும் எந்த வித கருத்து வேறுபாடுமின்றி நிறுவப்பட்டன. ஒன்று, சமுதாய குழாயின் அருகே அமைந்தது. மற்றொன்று, ஒரு விளக்கின் கீழே, பிரதி செவ்வாய் கிழமை, இரண்டு ஆண் சுயஉதவி குழு கூடி குழு பரிமாற்றங்கள் நடத்துகின்றன. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இந்த குழுக்களே, விளக்குகள் நிறுவப்பட்டபின் ஆரம்பிக்கப்பட்டதாகும். இதைப்போல், நமது கிராமபுற இந்தியாவில், இன்னும் பல கதைகள், சூரிய ஒளி தெரு விளக்கின் கீழ் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.
மூலம்: www.businessworld.in


