எதிர்கால வெளிச்சம் மாதஹபெராவில் ஒளிர்கிறது

ஜார்கண்ட் மாநிலத்தில் மாதஹபெராவில் ஒரு சிறிய கிராமம். அந்த மாநிலத்தில் மலைவாழ் மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர். இவர்களது வாழ்வு விவசாயத்தையும், மாடு வளர்ப்பையும் நம்பி உள்ளது. இது தவிர ஊதுபத்தி உற்பத்தி, இலைத்தட்டு, கிண்ணம் தயாரித்தல், மூலிகைச்செடிகளை கண்டுபிடித்து பிரித்தல், மற்றும் உள்ளூரில் உள்ள வேலைகளை செய்து வாழ்க்கையை ஒட்டுகின்றனர்.

இதுவரை மாதஹபெரா கிராமத்திற்கு மின்சாரம் வசதி கிடைக்கவில்லை. அதனால் அந்த கிராம சமூகப் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. கிராமப்புற மகளிருக்கு ஊதுபத்தி, கைவினைப்பொருட்கள், இலைத்தட்டு, கிண்ணம், உடனடி உணவு வகை ஆகியவற்றை தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தங்களது அன்றாட பணிகளை அவர்கள் செய்து முடிக்கவே மாலை நேரம் ஆகிவிடும். மாலை நேரங்களில் கிடைக்கும் சுமாரான, மங்கலான வெளிச்சத்தில் இத்தகைய பணிகளை செய்ய வேண்டியிருக்கும். இதனால், இவர்களது உற்பத்தி திறன் குறைவாகவே காணப்படுகிறது.

புதிய உதயம்

ஒரு கோடி மக்கள் வாழ்வில் ஒளியேற்றும் திட்டம் மாதஹபெரா கிராமத்தில் 2008ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமுல்படுத்தப் பட்டது. இத்திட்டம் "சீட்ஸ்" என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிறுவனம் கிராம அளவில்,

ஊரக மேம்பாட்டுப் பணியில், மக்களிடையே நீண்ட நாட்களாக பணிபுரிந்து வரும் நிறுவனமாகும். சூரிய லாந்தர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின், கிராமத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. இளம் பெண்ணான சாவ்ரி டுடுவின் வாழ்விலும் புதிய ஒளி, திருப்பம் ஏற்பட்டுள்ளது. தினமும் இவர் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து சமைத்து, 5 மணிக்கு புறப்பட்டு செல்லும் தனது கணவருக்கு உணவு கொடுத்து அனுப்புவார். இவரது கணவர் அருகிலுள்ள கமாரியா நகரத்தில், ஒரு தொழிற்சாலையில் பணிபுரிகின்றார். முன்னர், உரைக்கல்லில் அரைக்கும் போது, எதை அரைக்கிறோம் என்று கூட தெரியாத அளவுக்கு இருண்டு காணப்பபடும். ஒரே ஒரு மண்ணெண்ணெய் விளக்கு இருக்கும். அதையும் அவர் கணவர் பயன்படுத்துவார். சாவ்ரி டுடு இருட்டில் மிகவும் கஷ்டப்படுவார். இருட்டில் சமைக்கும்போது உணவில் என்னென்ன பொருட்களை எவ்வளவு இடுகிறோம் என்பதே சரியாக தெரியாது. இப்போது சூரியஒளி லாந்தர் கிடைத்தவுடன் அவருடைய வேலைகளை விரைவாக முடிக்கின்றார். அவரது கணவரும், நேரத்திற்கு தொழிற்சாலைக்கு புறப்பட்டு செல்கிறார்.



தொழில் வாய்ப்புகள்

பெஜி மர்மு, தனது குழுவின மற்ற பெண்களுடன் சேர்ந்து, வியாபாரத்தை வேகமாகவும், விவேகமாகவும் செய்து வருகின்றார். சுயஉதவிக்குழுவினருக்கு தானியங்களை, பயறுவகைகளை, நிலக்கடலையை பதப்படுத்துதலில் பயிற்சி அளிக்கப்பட்டது. சூரியஒளி லாந்தர்களின் உதவியுடன் மாலை நேரத்தை அவர்கள் இத்தகைய பயனுள்ள செயல்பாடுகளை செய்ய பயன்படுத்துகின்றனர். மேலும், திருமணம், விழாக்காலங்களுக்கு தேவையான உணவு வகை தயாரிக்கும் பெரிய பணிகளையும் இவர்கள் தற்போது செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த உணவு வகைகளை உள்ளூரிலும், கந்ரா, கமாரியா போன்ற அருகிலுள்ள நகரங்களிலும் விற்பனை செய்கின்றனர்.  வெளிச்சமில்லை என்ற பிரச்சனை இனி அவர்களது வியாபாரத்திற்கு தடையாக இருக்காது.

மலைவாழ் சிறுவன், கணேஷ் டுடு ஒரு பிறவிக் கலைஞன்.  உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவன்.  படிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களிலும், இரவிலும், வண்ணம் தீட்டுதல், சிலைகளை உருவாக்குதல், தெர்மோகோல் உபயோகித்து அழகுப்பொருட்கள் செய்தல் ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வான். இவை அனைத்தும், சூரிய ஒளி லாந்தர்கள் கிடைத்தபின் சாத்தியமாயிற்று.  உள்ளூரில் விற்பனைக்கான வேலைபாடுகளையும் கணேஷ் டுடுவிற்கு தற்போது செய்து வருகிறார். பக்கத்து ஊர்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இவனது கலைப் பொருட்களுக்கு தேவை அதிகமாயிற்று. கணேஷ், தான் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டே இப்போது கல்லூரியில் படித்து மகிழ்கிறான். சூரியஒளி லாந்தர் அவனது வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு பாதுகாவலானக உள்ளது என்றால் அது மிகையில்லை.



மூலம் : http://labl.teriin.org


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: