அரசாங்க உதவி

பெண்கள் அடையக்கூடிய சிறப்பான லாபங்கள்:

இந்திய புதுப்பிக்ககூடிய எரிசக்தி வளர்ச்சி நிறுவனம் (ஐ.ஆர்.இ.டி.ஏ.), புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வள ஆதாரங்களை (என்.ஆர்.எஸ்.இ.) உபயோகப்படுத்தும் பெண்களை ஊக்கமளிக்கும் விதத்தில் பல உதவிகளைச் செய்ய முன்வருகிறது.

மேலும் விவரங்களுக்கு :    http://www.ireda.gov.in

பெண் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக

பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று கல்வி   கற்பதை ஊக்குவிப்பதற்காக , மத்திய எரிசக்தி அமைச்சகம், அவர்களுக்கு சூரியஒளி விளக்கை இலவசமாக கொடுக்கவிருக்கிறது.

தேவைப்ப டும் தகுதிகள்

  • வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் ஒரு பெண் குழந்தை
  • தேர்வு செய்யப்பட்ட சில முக்கிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் வசதியில்லாத கிராமங்களில் , குடிசைகளில் வசிக்கும் குடும்பங்கள்
  • ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பெண் குழந்தைகள்

  இத்திட்டத்தின் கீழ் வரும் மாநிலங்கள்

  அருணாச்சல பிரதேசம் , அஸ்ஸாம் , ஹிமாச்சல் பிரதேசம் , ஜம்மு மற்றும் காஷ்மீர் , மேகாலயா , மிசோரம் , நாகாலாந்து , சிக்கிம் , திரிபுரா , அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் மற்றும் லட்சத் தீவுகள்.

 

 


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: