சூரிய ஆற்றலைக்கொண்டு கிராம்புற இந்தியாவை ஒளியூட்டுதல்

கிராமங்களை ஒளியூட்டுதல் கிராமப்புற முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான அம்சமாகும். இது மட்டுமன்றி கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதியுமாகும். கிராமப்புறங்களிலுள்ள பெரும்பாலான குடும்பங்கள் மண்னெண்ணய், மாட்டு சாண வரட்டி மற்றும் விறகுகளை ஒளி உற்பத்திக்காக உபயோகப்படுத்துகின்றனர்.

நூறு கோடி குடும்பங்களை ஒளிமயமாக்கும் திட்டம், TERI நிறுவனம் முலம்  தொடங்கப்பட்ட இயக்கமாகும். தற்பொழுது, மண்ணெண்ணய் உபயோகப்படுத்தும் கிராமப்புற சமூகங்களை, சுத்தமான, நவீனமான, நம்பகத்தகுந்த ஒளி ஆதாரங்களை உபயோகப்படுத்த வைப்பதை முக்கியமான நோக்கமாக கொண்டு இவ் இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், கிராமப்புற குடும்பங்களுக்கும் மற்றும் இதர தொழில்நிலையங்களுக்கும், சூரிய இராந்தல்களைக் மற்றும் இதர அத்தியாவச சேவைகளான மொபைல் போன்களை சார்ஜ் செய்வது, பேட்டரிகளை சார்ஜ் செய்தல், தண்ணீர் சுத்தம் செய்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகள் ஆகியவை நியாயமான கட்டண அடிப்படையில் சேவையாக அளிக்கப்படுகிறது.  TERI, நூறு கோடி குடும்பங்களை ஒளி மயமாக்கும் திட்டத்தின் பங்குதாரர்கள் (சேவை அமைப்புகள்) மற்றும் கிராமப்புற அரசு நிறுவனம் ஆகியோருடன் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்துகிறது. விற்பனைக்குப் பின் சிறந்த சேவையை அளிப்பதற்காக, இத்திட்டம் தொழில் நுட்ப ஆதார வலை அமைப்புகளை அமைக்கின்றது.

மேலும் விவரங்களுக்கு http://labl.teriin.org இணைய தளத்தினை பார்க்கவும்


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: