ஆசிரியர்கள் பகுதி

உன்னிடம் எது சிறந்ததோ அதை வெளிக்கொண்டு வருவதே உண்மையான கல்வி. மனிதாபிமானத்தைவிட சிறந்த புத்தகம் எதுவாக இருக்க முடியும்

                                                    - மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

கல்வியின் உண்மையான மதிப்பு

உண்மையான கல்வி என்றால் என்ன  என்று மக்களுக்கு தெரியாமல் இருப்பது தான் உண்மையான கஷ்டம்.  நாம் கல்வியின் மதிப்பை, நிலத்தின் மதிப்பு, பங்குச்சந்தையில் பங்குகளின் மதிப்பை எப்படி மதிப்பிடுகிறோமோ, அதேபோல்தான் பார்க்கிறோம். மாணவர்கள் அதிகம் சம்பாதிக்கத் தேவையான, கல்வியை நாம் வழங்க வேண்டும் என்று நினைக்கிறோம். படித்தவர்களின் நடத்தையை மேம்படுத்துவது குறித்து நாம் அதிகம் சிந்திப்பதில்லை.  பெண் குழந்தைகள் சம்பாதிக்க வேண்டியதில்லை, அதனால் அவர்களுக்கு கல்வி தேவையா? இப்படிப்பட்ட எண்ணங்கள் தொடரும் வரை, கல்வியின் உண்மையான மதிப்பை நாம் அறிவது கடினம்.

உபயோகமான தொடர்புகள்
தரமான ஆசிரியர் படிப்புக்கு தேவைப்படும் பாடத்திட்டம்

ஆரம்பகால வரலாற்றிலிருந்தே கல்வியின் வளர்ச்சி முதிர்ச்சி அடைந்து, மாறுபட்டு, வித்தியாசமாக, பரவி வருகிறது.  ஒவ்வொரு நாடும் தனது தனித்தன்மை வாய்ந்த சமூக கலாச்சாரத்தையும், காலத்தின் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அவசியத்தை பொருத்தும் தனது கல்வி முறையை மாற்றி வருகிறது.  1986ல் உருவாக்கப்பட்டு, 1992ல் மாற்றியமைக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையே (NPE), இந்தியக்கல்விக்கு வழிகாட்டியாக அமைகிறது.  மத்திய அரசாங்கம், கல்வித்துறையின் மேம்பாடு மற்றும் வளர்ச்சியை ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறை கண்காணித்து, வளர்ச்சிக்கான தேவையான வழிமுறைகளை  பரிந்துரைச் செய்யும் என்பது இக்கொள்கையின் முக்கிய அம்சமாகும்.

மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் 



கல்வி சம்பந்தப்பட்ட பிரசுரங்கள்

காந்தியும் கல்வியும், நவீன பாரதத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கேற்பும் பொறுப்பும், நாளைக்கானகல்வி ஆகிய ஆங்கில பிரசுரங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.



ஆசிரியர் கல்விக்கான தேசிய குழுமம்.

 







21st Century Education






Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: