|
|
பயனுள்ள தொடர்புகள்
ஆரம்பப்பள்ளிகளில் சமூகத்தினரின் பங்களிப்பு
மேற்குவங்காளத்தின் வடக்கு 24
பர்கானாஸ் மாவட்டத்தில் ஸ்வநிர்வார் அமைப்பு நடத்திய
ஆய்வுகள்
இந்தப் பகுதியில் பணியாற்றிய ஸ்வநிர்வார் என்ற தன்னார்வ அமைப்பு
தயாரித்த ஆய்வறிக்கை உள்ளூர் சமுதாயத்தினரின் பங்களிப்பு குறித்து
வலியுறுத்தியுள்ளது. தங்கள் குழந்தைகளின் கல்வி, அதன் தாக்கம்
ஆகியவற்றில் பெற்றோர்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்
பட்டுள்ளது. அரசாங்கப் பள்ளிக்கூடங்களிலும் இதுபோன்றப்
பங்கேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கையில்
கூறப்பட்டுள்ளது. சமுதாயம் மற்றும் உள்ளூர் மக்களின் சுற்றுச்சூழல்
குறித்துப் பள்ளிப் பாடத்திட்டத்தில் எந்தளவுக்கு இடம் பெற்றுள்ளது என்ற
கேள்வியும் இந்த ஆய்வறிக்கையில் எழுப்பப்பட்டுள்ளது.
-
|
சர்வ சிக்ஷா அபிக்ஞான்
(SSA) : அனைவருக்கும்
ஆரம்பக்கல்வி என்பதில் வெற்றி பெறுவதற்காக இந்திய அரசு வகுத்துள்ள
முன்னோடித் திட்டம் குறித்தத் தகவலை இது வழங்குகிறது. அனைவருக்கும்
கல்வித் திட்டத்தின் இலக்குகளும் அதற்கான வியூகங்களும் இதில் இடம்
பெற்றுள்ளன. இந்தியாவில் தற்போதையக் கல்வி நிலவரம் தொடர்பான
தகவல்களையும் இது விவரிக்கிறது.
http://ssa.nic.in/index.asp
அனைவருக்கும் கல்வி பற்றிய தேசிய ஆவணங்கள்
அனைவருக்கும் கல்வி என்ற குறிக்கோளை நிறைவேற்றும் வகியில் தீட்டப்படும்
கொள்கைகள் மற்றும் இந்திய கல்வி துறையின் நிலவரம் குறித்தும் இதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.unesco.org/wef/countryreports/india/contents.html
இந்திய அரசின் கல்வித்துறை : மாநிலங்களில் காணப்படும்
கல்விநிலை குறித்தத் தகவலை இந்தத்துறை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் தேசிய கல்விக் கொள்கைக் குறித்த ஆவணங்களையும் புள்ளி விவரங்களையும்
இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
http://www.education.nic.in/
கல்வித் தொடர்பாகத் திட்டமிடுதல் மற்றும் கல்வித்துறை நிர்வாகத்திற்கான
தேசிய அமைப்பு (NUEPA) : பயிற்சிக் கையேடுகள், கட்டுரைகள், கல்வித்
தொடர்பான உரிய ஆவணங்கள் ஆகியவற்றை இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
இனி நடைபெற உள்ளக் கல்வி தொடர்பான நிகழ்வுகளையும் இது
பட்டியலிட்டுள்ளது.
http://www.nuepa.org
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
அமைப்பு (NCERT) :
பெண்கள் கல்வி கணக்கெடுப்புகள், பிரிவுகள் ஆகியவற்றுடன் உண்டான இணைப்பு
சேவை உள்ளிட்டப் பல்வேறு விஷயங்களை இது வழங்குகிறது.
http://www.ncert.nic.in
தேசிய திறந்தவெளி பள்ளித்திட்ட அமைப்பு
(NIOS) : விண்ணப்பப்
படிவங்கள் அனுப்பப்படுவதற்கான கடைசித் தேதி போன்ற முக்கியமான தேதிகளை
இணையதளம் வாயிலாக இது வழங்குகிறது. தங்களுடைய பதிவு எண்ணை
இணையதளத்தில் குறிப்பிட்டு சேர்க்கை நிலவரத்தை மாணவர்கள் அறிந்துகொள்ள
முடியும். மதிப்பீடு முறை, தொழில் கல்வித் திட்டங்கள் மற்றும்
அதற்கு உதவிகரமான சேவைகள் உள்ளிட்டப் பல்வேறு தகவல்களை இது
வழங்குகிறது.
http://www.nios.ac.in/
|
|
-
|
கல்வித் திட்டங்களுக்கான சர்வதேச
அமைப்பு (IIEP)
: கல்விக்கானத் திட்டமிடல் மற்றும் நிர்வாகம்,
IIEP வழங்கும் பயிற்சித் திட்டங்கள் மற்றும் சேவைகள்,
ஆய்வு மற்றும் இணையதள வெளியீடுகளை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
http://www.unesco.org/iiep/
ஐ.நா.வின் கல்வி, அறிவியல்
மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ - வின் கல்வி தகவல்
சேவை : இந்த அமைப்பின் கல்வித் திட்டங்கள் மற்றும் வெளியீடுகள்
குறித்த முக்கியமானத் தகவல்களை இது வழங்குகிறது. இணையதளத்தின் மற்ற
கல்வி சர்வர்களுடனும் யுனெஸ்கோவின் கல்விதிட்ட கூட்டமைப்புகளுடனும்
இணைப்பு சேவையை வழங்குகிறது. இந்த இணையதளத்தில் விரிவான தகவல்கள்
இடம் பெற்றுள்ளன. உடனுக்குடன் இது அப்டேட் செய்யப்படுகின்றன.
http://www.education.unesco.org/index.html
அனைவருக்கும் கல்வி அமைப்பு : தேசிய அளவிலான
அறிக்கைகள், தற்போதைய நிலவரம் குறித்தத் தகவல்கள், வெளியீடுகள், சிறப்புக்
கட்டுரைகள், செய்திமடல்கள், இனி நடைபெறவுள்ளக் கூட்டங்கள், மாநாடுகள்
குறித்தத் தகவல்களை அறிந்துகொள்ள இது உதவுகிறது.
http://www.unesco.org/education/efa/index.shtml
அனைவருக்கும் கல்வித் திட்டம் குறித்த
உரகளவிலான கண்காணிப்பு அறிக்கை 2009: அனைவருக்கும்
கல்வித்திட்டத்தின் பயனை முழுவதுமாக பெறமுடியாத மக்கள், அவற்றுக்கான
காரணங்கள், அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், செயல்படக்கூடிய கொள்கைகள்,
ஆகியவை பற்றிய விளக்கம் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
http://www.unesco.org/en/education/efareport/
ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் : ( யுனிசெஃ )
உலகமெங்கும் உள்ள குழந்தைகள் குறித்து மல்டி மீடியா வடிவத்தில் இது
தகவல்களை அளிக்கிறது. மாணவர்களுக்கான கல்வித் திட்டங்கள் மற்றும்
ஆதாரவளங்கள் குறித்தத் தகவல்களையும் இது தருகிறது.
www.unicef.org
யுனிசெஃ -ன் உலக குழந்தைகளின் நிலை குறித்த
அறிக்கை 2008
இவ்வறிக்கையில், தாய்மார்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் வளரும்
குழந்தைகளின் நிலை குறித்து ஆராயப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியம்
குறித்த திட்டங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்
பற்றியும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
http://www.unicef.org/publications/index_42623.html
உலக வங்கியின் கல்வி மைக்ரோசைட் : உலக வங்கி
வெளியீடுகளின் முழுவடிவம் கல்வி வாய்ப்புகள் குறித்தத் தகவல்கள்,
வழிமுறைகள் குழந்தைப் பருவத்தின் ஆரம்பநிலை, பாலினம், திறன்வாயந்த்
பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள், முதியோர் கல்வி, பள்ளிகளின் ஆரோக்கியமான
நிலை, கல்வி தொடர்பான புள்ளி விவரங்கள் பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும்
கல்வி வியூகத் திட்டங்கள், பிராந்திய அளவிலான தகவல்கள் மற்றும் இவைத்
தொடர்பான இணைப்புகள் குறித்து உலக வங்கியின் கல்வித் திட்டப் பணியில் இடம்
பெற்றுள்ளத் தகவல்கள் இதில் கிடைக்கின்றன.
http://www.worldbank.org/education/
சர்வதேச எழுத்தறிவு திரட்டு : சர்வதேச அளவிலான
எழுத்தறிவு நிலவரம், அடிப்படைக் கல்வி தொடர்பான பல்வேறு தகவல்கள் ஆகியவை
குறித்து இதன் மூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
http://www.literacyonline.org/
|
|
-
|
ஆசிரியர் கல்வி பயிற்சிக்கான தேசிய அமைப்பு (
இந்தியா ) : இந்த இணையதளம் ஆசிரியர் பயிற்சி, விண்ணப்பங்கள்
மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கான ஆதார வளங்களைக் கொண்ட கையேடுகளை
வழங்குகிறது.
http://www.ncte-in.org
கல்வி இணையதளம் : ஆசிரியர்கள், ஆய்வு செய்பவர்கள்,
கல்வியாளர்கள் மற்றும் இவை சம்பந்தப்பட்டவர்களுக்கு இணையதள அரங்கம்
அமைத்துத் தருகிறது. இதன் மூலம் கலந்துரையாடல்கள், ஆரம்பக்
கல்வியில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பரிசீலனை மற்றும் கற்பதற்கான
ஆதாரவளங்கள் மற்றும் சாதனங்கள் குறித்தத் தகவல்களை பெற்றுக் கொள்ள ஏதுவாக
இருக்கும்.
http://www.vidyaonline.net/
கற்பித்தல் மற்றும் கற்றல் குறித்த ஆலோசனைகள்
( யூனிசெஃப் ) : கற்பித்தல் மற்றும் கற்றல், விளையாட்டு, பிற
நடவடிக்கைகள் மற்றும் மற்ற கற்பித்தலின் ஆதார வளங்கள் இவற்றைப் பற்றிய
தற்போதைய நிலவரம் குறித்தக் கட்டுரைகள், கருத்துகள், ஆய்வுகள் ஆகியவற்றைப்
பற்றிய தொடர் ஆதார வளங்களை வழங்குவதற்கான இணையமாக இது.
http://www.unicef.org/teachers/ideas.htm
நடவடிக்கை எடுத்தல் ( யூனிசெஃப் ) :
மாணவர்களுக்குக் கற்பித்தலின்போது ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக
கலந்துரையாடல், க்விஸ் நடத்துதல், சாதனங்கள் மற்றும் சில இணையவழி
பிராஜெக்டுகள் இவற்றை இந்த இணையதளம் வழங்குகிறது.
http://www.unicef.org/teachers/action/index.html
ஐ.நா. அமைப்பு சைபர் ஸ்கூல்
பஸ் : உலகளாவிய போதனை மற்றும் கற்றல் திட்டம்
கல்வித்திட்டப் பயன்பாட்டிற்காகவும் ஆசிரியர் பயிற்சிக்காகவும்
உருவாக்கப்பட்டுள்ள போதனைத் தொடர்பான தரம் வாய்ந்த விஷயங்களையும்
செயல்முறைகளையும் வழங்குகிறது.
http://www.un.org/Pubs/CyberSchoolBus/index.html
திறன் வாய்ந்த பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் ( உலக வங்கி ) :
உலகம் முழுவதும் உள்ள திறன் வாய்ந்த பள்ளிகள் தொடர்பான ஆய்வறிக்கைகள்,
கட்டுரைகள் மற்றும் திட்டங்கள் குறித்தத் தகவல்களைப் பெற உதவி
செய்கிறது. பயிற்சியாளாகள், திட்ட மேலாளர்கள், திட்ட
வடிவமைப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோருக்கு திறன் வாய்ந்தப்
பள்ளிகளை உருவாக்குவதற்கான வழிவகைகள் குறித்த அனைத்துத் தகவல்களையும்,
ஆதார மையமாகவும் இது உதவுகிறது.
http://www.worldbank.org/education/est/
இந்திய மேம்பாடு
நுழைவாயில் : உலக வங்கியின்
சர்வதேச மேம்பாடு கேட்வே இணையதளத்தின் தேசிய அங்கமாக இந்த இணையதளம்
அமைந்துள்ளது. இணையதள வழி விவாதங்கள், அறிக்கைகள் மற்றும்
வெளியீடுகள் மூலமாகப் பல்வேறு மேம்பாட்டு விஷயங்கள் குறித்தத் தகவல்
ஆதாரங்களை இது வழங்குகிறது.
http://www.developmentgateway.org/countryprofile/index?country_iso=in
ஆசிரியர்கள் அரங்கம் :
இணையதளம் வாயிலாக ஆசிரியர்கள் தங்களுடைய யோசனைகளை, சிந்தனைகளைப்
பகிர்ந்துகொள்ள இது வழிவகுக்கிறது. மேலும் வளர்ச்சியடைந்து வரும்
நாடுகளில் அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்களின் நேர்காணல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
http://www.unicef.org/teachers/forum/index.html
|
|
-
|
யுனிசெஃப் பெண்கல்வி :
கல்வியைப் பொருத்தவரை ஆண்களோடு ஒப்பிடும்போது, பெண்கள்
பின்தங்கியுள்ளனர். பெண்கள் கல்விக்கென்றே பிரத்யேகமாக ஒரு பகுதியை
யுனிசெஃப் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதி பெண்கள் எதிர்கொள்ளும்
தடைகளையும் பெண்களுக்குக் கல்வி வசதி கிடைப்பதற்கான வாய்ப்புகளையும், அதன்
தரத்தை மேம்படுத்துவது குறித்தும், பெண்கல்வி இயக்கம் தொடர்பான உண்மை
நிலவரங்களையும், புள்ளி விவரங்களையும் இந்தப் பகுதி விரிவாக
விளக்குகிறது.
http://www.unicef.org/girlseducation
|
|
-
|
குழந்தைத் தொழிலாளா முறையைத் தடுப்பதற்கான உலகளாவிய முனைப்பு.
செய்திகள் திரட்டுதல், இதில் ஈடுபடுவதற்கான ஆதார வளங்களையும்
வழிமுறைகளையும் உருவாக்குதல்.
www.globalmarch.org
உலகளாவிய கல்வி சீரமைப்பு (
உலக வங்கி ) :
கல்வி சீரமைப்பு அடிப்படையில் உலகம் முழுவதும் காணப்படும் அனுபவங்களை
பகிர்ந்துகொள்ள இந்தத் திட்டம் வழிவகுக்கிறது. கல்வித்திட்டத்தில்
முறையான சீரமைப்புகளை உருவாக்கி, அவற்றை நடைமுறைப்படுத்துவதில்
ஈடுபட்டுள்ள கொள்கை வகுப்பாளர்களுக்குத் தேவையான ஆதார வளங்களையும்,
சாதனங்களையும் அடிப்படையானப் பல்வேறு முக்கியத் தகவல்களையும் இது
வழங்குகிறது. இணையதளம் வழியாகத் தங்கள் அனுபவங்களைக் கொள்கை
வகுப்பாளர்கள் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இணைப்புகளையும் இது
வழங்குகிறது.
http://www.worldbank.org/education/globaleducationreform/
குழந்தை உரிமைகள் தகவல் நெட்வொர்க்
(CRIN) : குழந்தைகளின்
உரிமைகளுக்காகப் பாடுபட்டு வரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் தகவல்
தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கை மேம்பட இது துணை
நிற்கிறது. குழந்தையின் உரிமைகள் பிரகடனத்தில் இடம் பெற்றுள்ள
விஷயஙகளை நடைமுறைப்படுத்துவதற்கு இது உறுதுணையாக உள்ளது.
http://www.crin.org/
கல்விக்கான உலகளாவிய இயக்கம்
(GCE)
: உலக வங்கியின் அனைவருக்கும்
கல்வித்திட்டத்தின் பல்வேறு தன்னார்வ அமைப்பு உறுப்பினர்கள், வல்லுநர்கள்
ஆகியோர் ஆற்றிய உரைகளின் எழுத்துவடிவங்கள் உள்ளிட்ட அனைத்து அறிக்கைகள்
இதில் இடம் பெற்றுள்ளன. கல்வி தொடர்பான மிகப்பெரிய சமுதாயக்
கூட்டமைப்பின் குறிக்கோள்களையும், கருத்துகளையும் இது
வெளிப்படுத்துகிறது.
http://www.campaignforeducation.org/
அனைவரையும் உள்ளடக்க சர்வதேச
அமைப்பு: கற்றலில் குறைபாடுகள்
உள்ளவர்களால், அவர்களுக்கென்றே உருவாக்கப்பட்ட ஒரு நெட்வொர்க் இது.
வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிப்படை விஷயங்களைத் தீர்மானிக்கும்போது
கற்றல் குறைபாடுகள் தொடர்பான விஷயங்களையும் அதில் இடம்பெறச் செய்வது
குறித்து அறிக்கைகளும் பயனுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இதில் இடம்
பெற்றுள்ளன.
www.inclusion-international.org
|
|
-
|
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு : இந்த
இணையதளத்தில், 2001 - ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, சில புள்ளி
விவரங்களின் பி.டி.எஃப் கோப்புகள், இந்திய வரைபடம், மாநிலங்களின்
வரைபடங்கள், முக்கிய புள்ளிவிவரங்கள் ஆகியவற்றுக்கான இணைப்புகள் இதில்
இடம் பெற்றுள்ளன.
http://www.censusindia.net/
யுனெஸ்கோ புள்ளி விவர மையம் :
மழலைக் கல்வி, தொடக்கநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி, அதையடுத்த
கல்வி, கல்வி நிதி ஆகியன குறித்த புள்ளிவிவரங்கள்
இடம்பெற்றுள்ளன. எழுத்தறிவு, பாலினப் பாகுபாடுகள், பள்ளிக்கு
செல்லாத குழந்தைகள் போன்றவை குறித்து சுட்டிக்காட்டும் கல்வி அளவீடுகளும்
இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
http://www.uis.unesco.org/ev.php?URL_ID=3753&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201
யுனெஸ்கோ
எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குக் கல்வி சம்பந்தப்பட்ட சர்வதேசப்
புள்ளி விவரங்களை வழங்குகிறது. இதன் அறிக்கைகள் இன்றைய
காலகட்டத்திற்கு ஓரளவுக்குப் பொருத்தமானதாக இல்லாவிட்டாலும்கூட,
பயனுள்ளவையாக அமைந்துள்ளன.
http://www.ibe.unesco.org/
உலகளாவிய கல்வி தொடர்பான தகவல் தளம்
: தேடித் தெரிந்துகொள்ள ஏதுவான பல்வேறு
நாடுகளின் தகவல் தளம். புள்ளி விவரங்களை ஆய்வு செய்வதற்கான
அட்டவணைகளையும் வரைபடங்களையும் இது வழங்குகிறது. பல்வேறு நாடுகளின்
நிலவரத்தை ஒப்பிட்டுப் பார்க்கவும் வாய்ப்பளிக்கிறது.
http://qesdb.cdie.org/ged/index.html
|
|
-
|
கற்றலுக்கான
சேனல்: உடனுக்குடனான கல்வி
செய்திகளை அறிந்துகொள்ள இது வழிவகுக்கிறது. உலகம் முழுவதும்
காணப்படும் கல்வி நிலவரத்தை ஆய்வு செய்வதற்கும், அவைத் தொடர்பான ஆய்வு
அறிக்கைகளை அறிந்து கொள்ளவும் இது துணை நிற்கிறது. தன்னார்வ
அமைப்புகளின் புதுமைத் திட்டங்களை மட்டுமல்லாமல் அரசின் கொள்கைகள் குநித்த
விரிவானத் தகவல்களை அறிக்கிறது.
www.learningchannel.org
ஒன் வர்ல்ட் சவுத் ஏசியா
மனித உரிமைகள், கல்வி, வாழ்க்கைச் சூழல், வாழ்க்கைத் தரம் முதலிய முக்கிய
பிரச்சினைகள் தொடர்பாக கல்வியாளர் குழுக்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றம்
சர்வதேச அமைப்புகளின் பல்வேறுபட்ட கருத்துகள் அடங்கிய ஆதார வளங்கள் இந்த
இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன.
http://southasia.oneworld.net/article/frontpage/158/1792
சமூகப் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகள் இவை தொடர்பான நிகழ்வுகள்
ஆகியவற்றை இதன் வழியாக அறிந்துகொள்ளலாம்.
http://www.indiatogether.org/education/policy.htm
|
|
|
|