தகவல் தொழில்நுட்பக் கல்வி
தகவல் தொழில்நுட்பக் கல்வி இந்த வலைதளத்தின்
தகவல் தொழில்நுட்பக் கல்வி பற்றிய பகுதி, கீழ்க்கண்ட துறைகளில்,
இணையத்தில் உள்ள தொழில்நுட்பங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
கணிணி பற்றிய அடிப்படை விஷயங்கள், கணிணியின் பாகங்கள் பற்றிய குறிப்புகள்
மற்றும் கணிணி பயன்படுத்துவோர் அதிகம் கேட்கும் கேள்வி பதில்களின்
தொகுப்பைப் பல்வேறு வட்டார மொழிகளில் இந்த வலைதளம் வழங்குகிறது.
-
|
இந்திய மொழிகளை கணிணியில் பயன்படுத்துவது என்பது சாதாரண மக்களைப்
பொறுத்தவரை ஒரு புதுமையான விஷயம். குயில்பேட் மற்றும் லிபிக்கர் தளங்களில்
ஆன்லைனில் இந்திய மொழிகளில் தட்டச்சு செய்யலாம். முன்னமே பதிவு
செய்யப்பட்ட விதிகளின்படி மொழிமாற்றம் செய்யும் தொழில்நுட்பத்தைத் தளங்கள்
கொண்டுள்ளன. 'மொழிமாற்றி' எனும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கடினமான
கேஸ்-சென்ஸிடிவ் (case-sensitive) விதிகள் இல்லாமல் ('rAShTrbhAShA’ என
இல்லாமல் 'rashtrbhasha' என எழுதுவது) பயனாளர்கள் எப்பொழுதும் போல் எளிய
முறையில் சொற்களை டைப் செய்யலாம். இம்முறையில் வட்டார மொழியின்
ஒலிப்புமுறைக்கு ஏற்றவாறு ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு அச்சொற்களை டைப்
செய்ய வேண்டும். இதனால் பயனாளர்கள் தாங்கள் அறிந்த வட்டார மொழிகளிலேயே
தொடர்பு கொள்ள முடிகிறது. கீழ்க்கண்ட தளங்களில் நுழைந்தபின் நீங்கள்
விரும்பிய மொழியைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள். மேலும் பல இணைய
தளங்கள் மொழிமாற்றி சேவையை அளிக்கின்றன.
http://www.google.com/transliterate/indic/
http://quillpad.com/
http://www.lipikaar.com/
|
|
-
|
இந்திய மொழிக்கான தொழில்நுட்ப வளர்ச்சி திட்டம் (TDIL) இந்திய அரசின்
தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. இதன் நோக்கம் இந்திய
மொழிகளை கணிணியில் பயன்படுத்தும் வண்ணம் புதிய தகவல் தொழில்நுட்பத்தை
உருவாக்குவதே ஆகும். இதன் மூலம் பல்வேறு இந்திய மொழிகளில் தகவல்களைப் பெற
முடியும். மக்கள் பயன்பெறும் வண்ணம் எழுத்துருக்கள் சிடிக்கள் மூலமும்
இணைய வழி டவுண்லோட் மூலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. விரும்பிய
எழுத்துருக்களை டவுண்லோட் செய்ய இங்கு கிளிக் செய்க.
http://www.ildc.in/
|
|
-
-
|
பின்வரும் இணைய தொடர்பைப் பயன்படுத்தி ட்ரூ டைப் எழுத்துருவை ஓபன் டைப்
எழுத்துருவாக மாற்றிக் கொள்ளலாம். ‘.TXT’ வடிவில் உள்ள ட்ரூ டைப்
எழுத்துரு கொண்ட பைலை பதிவேற்றம் செய்க. நீங்கள் பயன்படுத்தும்
எழுத்துருவை தேர்ந்தெடுத்த பின் , நீங்கள் புதிதாக விரும்பும் எழுத்துருவை
தேர்ந்தெடுங்கள். அது தானாகவே ஓபன் டைப் எழுத்துருவாக (யூனிகோட்)
மாற்றிவிடும்.
http://uni.medhas.org/fileconverterindex.php5
|
|
-
|
பத்மா தொழில்நுட்பத்தின் மூலம் இந்திய மொழிகளுக்கான எழுத்துரு மூலம்
எழுதப்பட்ட பைல்களை இலவச பார்மட்டில் இருந்து உரிமம் பெற்ற
பார்மட்டிற்கும், உரிமம் பெற்ற பார்மட்டில் இருந்து இலவச பார்மட்டிற்கும்
மாற்றவும் வழிவகை உள்ளது. தற்போது இத்தொழில்நுட்பம் தமிழ், தெலுங்கு,
தேவநகரி(மராத்தி உட்பட), குஜராத்தி, பெங்காலி மற்றும் குர்முகி மொழிகளில்
உள்ளது.
யூனிகோட் எழுத்துரு எல்லா நிலைகளிலும் பயன்படுத்தப்படும் வரை உரிமம்
பெற்ற எழுத்துரு மற்றும் பொது எழுத்துரு பயன்பாட்டிற்கும் உள்ள
இடைவெளியைக் குறைப்பதே பத்மா தொழில்நுட்பத்தின் நோக்கம். இந்திய
மொழிகளுக்கான உரிமம் பெற்ற எழுத்துரு பார்மட் மூலம் எழுதப்பட்ட பைல்களை
யூனிகோட் வடிவில் மாற்றுகிறது. மேலும் இஸ்க்கி மற்றும் மொழிமாற்று
உத்திகளான ஐட்ரான்ஸ் & ஆர்.டி.எஸ் (தெலுங்கு மட்டும்) முதலியவற்றையும்
இது கொண்டுள்ளது. இந்த பிளக்-இன்னை டவுண்லோட் செய்ய இங்கு கிளிக்
செய்க.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/873
|
|
|
|
-
-
|
ஆங்கிலம்-ஹிந்தி அகராதி மற்றும் ஹிந்தி-ஆங்கிலஅகராதி ஆங்கிலச்
சொற்களையோ தனியான கீபோர்ட் உதவியுடன் ஹிந்தி வார்த்தைகளையோ தேடலாம்.
|
|
|
|