|
கேந்திரிய வித்யாலயாக்கள் 2007-08
ஆம் வருட கல்வியாண்டு விதிகளின்படி கேந்தரிய வித்யாலயாக்களில்
மாணவர்கள் சேர்வதற்கான விதிமுறைகள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன.
சேர்க்கை விதிமுறைகள்:
பிப்ரவரி முதல் வாரத்தில் அந்தந்தப் பிராந்திய அலுவலகங்கள் அங்கு
வெளிவரும் பத்திரிகைகளில் சேர்க்கை விவரங்கள், பதிவு செய்தல் குறித்தத்
தொகுப்பை விளம்பரமாக வெளியிடும். கேந்திரிய வித்யாலயாக்களில் சேர்வதற்காக
மாணவர்கள் பதிவு செய்துகொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். இந்த
விளம்பரம் கேந்திரிய வித்தியாலயாக்களில் சேர்க்கை மத்திய அரசு ஊழியர்களின்
குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் திறந்தே உள்ளது என்பது
குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஒருசில முன்னுரிமைகள் மட்டுமே அதாவது,
பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் அந்தந்த முன்னுரிமைகளின்
அடிப்படையில் இடங்கள் கிடைக்கும் என்பதும் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைஜாதி
குழந்தைகளுக்கு மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கான ஒதுக்கீடுகள்
சம்பந்தப்பட்ட விவரங்களும் அளிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்களைப் பெற, சேர்க்கை விதிமுறைகள் பற்றிய விவரங்களை
அறிந்துகொள்ள தொடர்புகொள்ள வேண்டிய இணையதளம்: http://kvsangathan.nic.in
/ quidelines1.aspx
|