சேவை செய்வோர் திறன்பட செயலாற்ற வாய்ப்பு

நான் செக்கிபட்டி என்னும் கிராம .......................

நான் செக்கிபட்டி என்னும் கிராம தகவலகத்தில் (கிராம தகவல் மையம்) கடந்த நான்கு ஆண்டுகளாக பணிபுரிகின்றேன். நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன்.
என் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு உதவி செய்ய ஆர்வம் இருப்பதால், நான் இந்த பணி செய்கிறேன். பல்வேறு விஷயங்களில் என் கிராமத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் எனக்கு மிக ஆர்வம். ஆனால் விழிப்புணர்வு தேவைப்படும் விஷயங்கள் பற்றிய தகவல் தமிழில் இல்லாதது பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது.

இந்த நிலையில், தானம் அறக்கட்டளை மற்றும் இண்.டி.ஜி.  குழுவினர் இணைந்து, www.indg.in வலைதளம் பற்றி எங்களுக்கு ஒரு பயிற்சி அளித்தனர். அத்தளத்தில் தமிழில் தகவல்களைப் பார்த்த போது, நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். அந்த பயிற்சி முடிந்த பின், கிராம மக்களை மையத்திற்கு வரும்படி அழைத்து, குறிப்பாக பெண்கள், விவசாயிகளுக்குத் தேவையான தகவல்களை விளக்கிக் கூற ஆரம்பித்தேன்.

தகவல்களை அளிப்பதுடன், www.indg.in வலைதளத்திற்கு நாமும் தகவல்களை அளிக்கலாம் என அறிந்தேன். என் கிராம அளவில், தகவல்களை திரட்டி, www.indg.in வலைதளத்திற்கு அனுப்பினேன். நாங்கள் அனுப்பிய தகவலை www.indg.in வலைதளத்தில் பார்த்தவுடன், எனக்கு இன்னும் ஆர்வம் அதிகமாயிற்று.

இந்த ஆண்டு பெண்கள் தினம் கொண்டாட்டத்தின் போது, எனது இந்த சேவைக்கு பாராட்டு கிடைத்தது. இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது.

செல்வி திலகவதி, செக்கிபட்டி கிராமம், மேலூர்மாவட்டம், தமிழ்நாடு.


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: