இணையதளத்தில் எனது கிராமம்

நான் பொன்னமாண்டா கிராமத்தின் அஸ்வினி மையத்தில் வேலை செய்கிறேன். இணையதளத்தில், எத்தனையோ வலைதளங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதை .........

என் கிராம மக்களுக்கு தெலுங்கு மொழி மட்டுமே புரியும் என்பதால்,   தெலுங்கு மொழியில் ஒரு வலைதளம் உருவாக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அம்மொழியை கணிணியில் உபயோகிப்பது எப்படி என தெரியாமல் இருந்தேன்.

இந்திய முன்னேற்ற நுழைவாயில் திட்டத்தின் ஒருபகுதியாக,      அஸ்வினி மைய பணியாளர்களுக்கு ஒரு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   அதில், கணிணியில் தெலுங்கு மொழி உபயோகம் பற்றி கற்றுத்தரப்பட்டது.

புதிதாக கற்றுக்கொண்ட இந்த அறிவின் மூலம், நான் எங்கள் கிராமத்திற்கென ஒரு தகவல் தளத்தை உருவாக்குவதற்கு முயற்சி செய்தேன். ஆரம்பத்தில் செய்ய முடியுமா என்று சந்தேகித்தாலும், நாளடைவில், எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. எங்கள் கிராமத்தை பற்றிய அனேக தகவல்களை  நான் உருவாக்கிய வலைதளத்தில் போட்டுள்ளேன். இண்.டி.ஜி வலைதளத்தை பற்றியும், அதன் தொடர்பையும் என் தளத்தில் கொடுத்துள்ளேன். மேலும் விபரங்களுக்கு, http://ponnamandagram.blogspot.com/ க்கு சென்று பார்க்கவும்.

செல்வி சத்யலதா, பொன்னமாண்டா கிராமம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரா மாநிலம்.

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: