வாசகர் விமர்சனங்கள்

அறிவே தான் தெய்வம் என்றார் தாயுமானார். தாய் மொழி வழியாக அந்த அறிவை அறிவதற்கு உதவி செய்யும் இந்த தளத்திற்கு கோடி வாழ்த்துகள்!!!
- ஜானகிராமன், 17th January 2011

ஐ.என்.டி.ஜி பற்றி சமீபடத்தில்தான் அறிந்தேன். மிகவும் பயனுள்ள ஒரு இணையதளம் இது. இதில் தொடர்ந்து கிராம மக்களுக்கு பயந்தரக்கூடிய விஷயங்களை எழுத விருப்பப்படுகிறேன். அதற்கு அனுமதி உண்டா? இருந்தால் நான் செய்ய வேண்டியது என்ன? தங்களின் மேலான வழிகாட்டுதல்களை எதிர்பார்க்கிறேன்
- திரு. இராஜன், நவம்பர் 6, 2010

உண்மையில் இந்த வலைத்தளத்தை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதில் பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள தகவகளின் மூலம் நாட்டு வளர்ச்சியின் மீதான உண்மையான அக்கறை பிரதிபலிக்கிறது. அனைத்து தரப்பு
மக்களும் அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில் இந்த வலைத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
- திரு. ப. ஜெய்சங்கர்., ஆவடி. பிப்ரவரி 20, 2010

நான் இண்.டி.ஜி தளத்தில் உடல்நலம் பகுதியில், பொதுவகை நோய்களில் தலைமுடி உதிர்தல் பற்றி பார்த்தேன். எதனால் முடி உதிர்கிறது, முடி உதிர்தல் ஆண்களுக்கு முதலில் எவ்வாறு ஏற்ப்படுகிறது, பெண்களுக்கு முதலில் எவ்வாறு ஆரம்பிக்கிறது என்ற அனைத்து விஷயங்களையும் இதை பார்த்ததின் மூலம் தெரிந்து கொண்டேன். ஆனால் இன்னும் விவரமாக முடி உதிர்தலை தடுக்கும் வழிமுறைகளை விளக்கமாக போட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு அருமையாக ஒவ்வொரு விஷயமும் போடப்பட்டு இருந்தது. ஆனால் தலைமுடி கொட்டுவதை தடுக்க அவ்வளவாக எந்த விஷயமும் இதில் இல்லை. இதை ஒரு கருத்தாக எடுத்து கொள்ளுங்கள். நான் எனக்கு தெரிந்த சில தகவல்களை சொல்கிறேன் அது உங்கள் வலைதளத்தில் இணைக்க கூடிய விஷயமாக இருந்தால் அதை தலைமுடி கொட்டுவதை தடுக்கும் வழிமுறைகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
S.P. கலா, கருங்காலக்குடிகிராமம், தமிழ்நாடு

இந்திய வளர்ச்சிக்காக உருவாகி இருக்கும் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து தொகுப்புகளும் கிராம மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இது இணைய வெளி என்பதால், கிராமங்களில் இன்னும் இவ்வசதி சென்றடையவில்லை என்பதால், நாங்கள் இத்தொகுப்பில் சிலவற்றை பதிவிறக்கி வேறொரு ஊடகம் மூலமாக மக்களுக்கு கொண்டு சேர்க்க திட்ட மிட்டுள்ளோம். நமது இணையதளத்தில் இருந்து தகவலை எடுத்து பயன்படுத்த அனுமதி வேண்டுகிறோம்.- யுவராஜ், தமிழ்நாடு
தங்கள் இணையத்தை பார்த்தேன். மகிழ்ச்சியளித்தது. இந்தியாவின் முன்னேற்றப்பாதையில் இந்த இணையம் சற்றே துணைப்புரியும் என்பதில் ஐயமில்லை. இந்திய குடிமாகனான நான் , எனது நாட்டின் வலர்ச்சியில் முழு பங்கு உண்டு. என்னால் முடிந்த உதவிகள் நிச்சயம் தருவேன்.
வாழ்த்துகளுடன். வெ.யுவராஜ், 73,புதுத் தெரு, பாதிரி கிராமம்.

உங்கள் விமர்சனங்களை தெரிவிக்க,இங்கே கிளிக் செய்யவும்


Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: