செய்திமடலை பெறுங்கள்

உங்கள் இ-மெயில் முகவரி

எங்கள் முந்தைய இதழ்களைப் பார்க்கவும்
கருத்துக் கணிப்பு
அரசு மருத்துவமனைகளில் கட்டண அறிமுகம் தற்போதைய வசதிகளை மேம்படுத்துமா?






Document Actions


இந்திய முன்னேற்ற நுழைவாயில்

இண்.டி.ஜி (இந்தியா டெவலப்மெண்ட் கேட்வே / இந்தியா முன்னேற்ற நுழைவாயில்) என்பது நாடு தழுவிய அளவில் நடக்கும் ஒரு முயற்சி. இது, கிராமப்புறம் மற்றும் சமூக வளர்சிக்கான குறிப்பான தேவைகளை இலக்காக வைத்துச் செயல்படும். இந்த கேட்வே இந்தியாவின் தேசிய வலையகம். இதன்மூலம்  தகவல்கள் மற்றும் சேவைகள் பற்றி அறியலாம்.  இதுவரையில் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் இந்திய கிராமப்புற சமூகங்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் ஏழைகளைச் சென்றடைவதுதான் இதன் நோக்கம். கிராமப்புறச் சமூகங்களுக்கு, குறிப்பாக ஒதுக்கப்பட்ட மக்கள் மற்றும் ஏழைகளுக்கு அவர்களுடைய உண்மையான, முக்கியமான தேவைகளுக்கான சேவைகள் மற்றும் நம்பகமான தகவல்களை அவர்கள் மொழியிலேயே தருவதே கேட்வேயின் குறிக்கோள். அறிவுப் பகிர்வுக்காகத் தகவல் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி வளர்ச்சி காண இது வழிவகுக்கும்.

இண்.டி.ஜி, இந்தியாவின் உள்ளுர் மொழிகளின் மூலம் பெரும்பாலான இந்தியர்களைத்  தொடர்புகொள்கிறது. ஆங்கிலமும் பயன்படுத்தப்படும்.

இண்.டி.ஜி தற்போது  முக்கியமான சில துறைகளில் கவனம் செலுத்துகிறது. அவையாவன, உடல் நலம் (நீர் மற்றும் சுகாதாரம்), ஆரம்ப கல்வி, வேளாண்மை மற்றும் அதை சேர்ந்த செயல்பாடுகள், கிராமப்புற எரிசக்தியும் சுற்றுச்சூழலும் மற்றும் மின்னணு நிர்வாகம். இண்.டி.ஜி கிராமப்புற வளர்ச்சிக்குத் தேவையான முக்கியத் துறைகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்கியபடி இருக்கும்.

சேவை அமைப்புகள், அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம் கிராமப்புறச் சமூகங்களுக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கும் இடையே பாலமாகச் செயல்பட இண்.டி.ஜி விரும்புகிறது. சேவை அடிப்படையிலான, மக்களுக்கு எளிதில் உதவக்கூடிய, எளிமைப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பத்தை உருவாக்கி, நாடு தழுவிய கூட்டு முயற்சிகளின் மூலம் கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு  உதவுவதே இதன் இறுதிக்  குறிக்கோள்.


Powered by Plone CMS, the Open Source Content Management System

இத்தளம் கீழ்க்கண்ட தரங்களுடன் ரத்துப் போகிறது