மாதவிடாய்

மாதவிடாய்

மாதவிடாய் என்பது, கற்பபையின் படிவமானது (எண்டோமெட்ரியம்) இரத்தகசிவுடன் வெளியேருவதுதான். ஒரு பெண்ணின் கருதரிக்க வாய்ப்புள்ள காலம் முழுவதும், ஏறக்குறைய மாதசுழற்சியாக இது நிகழ்கிறது, கருதரித்த காலம் தவிர. மாதவிடாய் ஒரு பெண் பூப்படையும்போது தொடங்குகிறது, (மெநார்க்), மற்றும் மெனோபாஸில் நிரந்திரமாக நின்றுவிடுகிறது.


மாதவிடாய் சுழற்சி

மாதவிடாய் சுழற்சி, முதல் நாள் உதிரபோக்குடன் தொடங்குகிறது. அது தான் முதல் நாளாக எடுத்துகொள்ளபடுகிறது. அடுத்த மாதவிடாய் தொடங்கும் சில காலத்திற்கு முன்பு இந்த சுழற்சி முடிவடைகிறது. மாதவிடாய் சுழற்சி சாதாரனமாக சுமார் 25 முதல் 36 நாட்கள் நீடிக்கிறது. 10 முதல் 15% பெண்களுக்கு மட்டும் தான் மாத சுழற்சி சரியாக 28 நாட்களாக இருக்கும். சாதாரனமாக சுழற்சிகள் மாறி மாறி வரும். மேலும் மாதவிடாய்களுக்கு இடயே உள்ள இடைவெளி பூப்படைந்தவுடனும் மற்றும் மெனோபாஸிற்கு முன்பும் நீண்டதாக இருக்கும்.

menstrual1.jpg menstrual2.jpg

மாதவிடாயின் உதிரபோக்கு, 3 முதல் 7 நாட்கள், சராசரியாக 5 நாட்கள் இருக்கும். ஒரு சுழற்சியின் போது உதிரத்தின் இழப்பு ½ முதல் 2 1/2 ஔன்சுகள் இருக்கும். ஒரு சுகாதார அட்டை(நாப்கீன்) அல்லது டாம்பூன், அதன் வகைக்கு ஏற்ப, ஒரு ஔன்சு உதிரத்தை உறிஞ்சும். மாதவிடாயின் உதிரம், காயத்தினால் ஏற்படும் இரத்தபோக்கு போல், உடனே உரைவதில்லை. அதிகமாக இரத்த போக்கு இருந்தால் தான் உரைந்துகொள்ளும்.

மாதவிடாய் சுழற்சி ஹார்மோன்களால் சீராக்கப்படுகிறது. பிட்யுட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் லியுடினைஸிங் மற்றும் ஃபோலிகில் தூண்டும் ஹார்மோன்கள், கருமுட்டை வெளிவருவதை ஊக்குவிப்பதுடன், சினைப்பையை, ஈஸ்ட்ரொஜன் மற்றும் பரொஜெஸ்டிரோன் ஹார்மோனை சுரக்கவைக்கவும் தூண்டுகிறது.ஈஸ்ட்ரொஜென் மற்றும் ப்ரொஜெச்டிரோன், கருவடைதல் ஏற்பட சாத்தியமாக, கருப்பையையும், மார்பகங்களையும், தூண்டுவிக்கின்றது.


மாதவிடாய் சுழற்சியின் நிலைகள்.

இந்த சுழற்சியில் மூன்று நிலைகள் உண்டு:

  1. பாலிகுலார் (கருமுட்டை வெளிவருவதற்கு முன்)
  2. ஓவுலேடரி (கருமுட்டை வெளிவருவது)
  3. லூடியல் (கருமுட்டை வெளியேறிய பின்)

                         menstrual3.jpg
பாலிகுலார் கட்டம்:

இந்த நிலை, மாதவிடாய் தொடங்கும் முதல் நாள் ஆரம்பிக்கின்றது (முதலாவது நாள்). ஆனால் இந்த நிலையில் நடக்கும் முக்கியமான நிகழ்வு, சினைப்பைகளில் ஃபோலிகில்ஸ் வளருவது தான். பாலிகுலார் கட்டத்தின் ஆரம்பத்தில், கருப்பையின் படிவமானது (என்டோமெட்ரியம்), கருவுக்கு ஊட்டம் தரக்கூடிய திரவங்கள் மற்றும் ஊட்டச்சத்துகளால் தடிமனாக இருக்கின்றது. முட்டை கருவடைதல் நடைபெறாவிட்டால், ஈஸ்ட்ரொஜன் மற்றும் ப்ரொஜெஸ்டிரோன்களின் அளவுகள் குறைவாகவே இருக்கின்றது. இதன் விளைவால், என்டொமெட்ரியத்தின் மேல்படிவங்கள் வெளியேறி, மாதவிடாய் உதிரபோக்கு நடைபெருகின்றது. இதே காலகட்டத்தில், பிட்யுட்டரி சுரப்பி, ஃபாலிகில் தூண்டும் ஹார்மோனின் உற்பத்தியை இலேசாக அதிகரிக்கின்றது. இந்த ஹார்மோன், 3 முதல் 30 ஃபாலிகில்களின் வளர்ச்சியை தூண்டுவிக்கின்றது. ஒவ்வொரு ஃபாலிகிலிலும் ஒரு முட்டை இருக்கிறது.
இக்கட்டத்தின் பிற்பகுதியில், இந்த ஹார்மோனின் அளவு குறையும் போது, இந்த பாலிக்கில்களில் ஒன்று மட்டும் (ஓங்கிய ஃபாலிக்கில் என்று அழைக்கப்படும்) வளர தொடங்குகிறது. விரைவில் அது ஈஸ்ட்ரொஜனை சுரக்க தொடங்குகிறது, மேலும் மற்ற தூண்டுவிக்கப்பட்ட ஃபாலிக்கில்கள் உடைய துவங்குகின்றன.
சராசரியாக இந்த பாலிகுலார் கட்டம் சுமார் 13 அல்லது 14 நாட்களுக்கு நீடிக்கின்றது. மூன்று நிலைகளில், இந்த கட்டமானது, அதிக கால அவகாசத்தால் இந்த கட்டம் வித்தியாசம் கொண்டது. மெனோபாஸ் நெருங்கும்போது, இதன் கால அவகாசம் குறையகூடும். லுயுடினைசிங் ஹார்மோனின் அளவு துரிதமாக அதிகரிக்கும்போது இந்த நிலை முடிவடைகின்றது. இந்த துரிதமான அதிகரிப்பு தான் கருமுட்டை வெளிவருவதற்கு காரணமாகின்றது (ஓவுலேஷன்).


ஒவுலேட்டரி நிலை

லுயுடினைசிங் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும்போது இந்த நிலை துவங்குகிறது. லுயுடினைசிங் ஹார்மோன், ஓங்கிய பாலிக்கில்லை சினைப்பையின் மேல் புறத்திலிருந்து உப்ப செய்து, கடைசியாக கருமுட்டையை, வெளியாக்குகிறது. பிறகு பாலிக்கில் தூண்டும் ஹார்மோனின் அளவு சற்று குறைவாகவே கூடுகிறது. பாலிக்கில் தூண்டும் ஹார்மோனின் அதிகரிப்புக்கான பங்கு இன்னும் புரிந்துகொள்ளப்படவில்லை.
ஒவ்யுலேட்டரி நிலை வழக்கமாக 16 முதல் 32 மணி நேரம் நீடிக்கின்றது. கருமுட்டை வெளிவந்தவுடன் இக்கட்டம் முடிவடைகிறது.
கருமுட்டை வெளியாகி சுமார் 12 முதல் 24 மனி நேரத்திற்கு பிறகு, லுயுடினைஸிங் ஹார்மோனின் அதிகரித்த அளவுகளை, சிறுநீரில் உள்ள இதன் அளவுகளை வைத்து கண்டுகொள்ள முடியும். இந்த அளவுகளை வைத்து பெண்கள் எப்போழுது கருவுற தயாராக இருகின்றார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். வெளியேறிய பிறகு கருமுட்டையுடன் விந்தனு சேர்க்கை சுமார் 12 மணி நேரத்திற்குள்ளாக தான் நடைபெறமுடியும். கருமுட்டை வெளியேரும் முன்பே கருப்பை வாயினுள் விந்தணுக்கள் இருந்தால் கருவடைதல் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது.
ஓவுலேஷன் நடைபெரும் சமயத்தில் சில பெண்களுக்கு அடிவயிற்று பகுதியின் ஒருபுறம் இலேசான வலியை உணரலாம். இந்த வலிக்கான பெயர் (எழுத்துபூர்வமாகவே, மத்திய வலியாகும்). இந்த வலி சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்கள் வரை நீடிக்கலாம். எந்த பக்கத்தின் சினைப்பயிலிருந்து கருமுட்டை வெளியேற்றபடுகிறதோ அந்த பக்கம்தான் வலி உணரப்படுகிறது, ஆனால் வலி ஏற்படுவதற்கான சரியான காரணம் அறியப்படவில்லை. ஃபாலிக்கில் உடையும் முன்போ அல்லது பிறகோ வலி ஏற்படலாம், மேலும் எல்லா மாதவிடாய் சுழற்சிகளிலும் இந்த வலி ஏற்படுவதில்லை.
கருமுட்டையின் வெளியெற்றம், இரு கரு முட்டை உற்பத்தி பைகளிலிருந்தும் மாறி மாறி ஏற்படுவதில்லை, தன்னிச்சையாக நடைபெருவதுபோல் தோன்றுகிறது. ஒரு கரு முட்டை உற்பத்தி பையை நீக்கி விட்டாலும், மீதம் இருக்கும் கரு முட்டை உற்பத்தி பை, மாதம் ஒரு கருமுட்டையை உருவாக்குகிறது.


லூடியல் நிலை:

ஓவுலேஷன் ஆன பிறகு இந்த நிலை தொடங்குகிறது. இது 14 நாட்கள் நீடிக்கின்றது (கருவுறுதல் நடைப்பெறாவிட்டால்), மற்றும் இக்கட்டம் மாதவிடாய் தொடங்குவதற்கு சற்று முன்பு முடிவடைகிறது. இந்த நிலையில், உடைந்த ஃபாலிக்கில் கருமுட்டையை வெளியேற்றியவுடன் மூடி, கார்பஸ் லூடியம் எனும் உருவமாக மாறுகின்றது. இதிலிருந்து ப்ரொஜஸ்டிரோன் அதிக அளவு சுரக்கப்படுகிறது. விந்தனுசேர்க்கை நடக்கும் பட்சத்தில், இந்த கார்பச லுடியம், கர்பபையை தயாராக வைக்கிறது. கார்பச லுடியத்தால் சுரக்கபடும் ப்ரொஜஸ்டிரோன், எண்டோமெட்ரியத்தை தடியாக்குகிறது, மேலும் அங்கே வந்தடையகூடிய கருவிற்கு சக்தியளிப்பதற்காக, அதை திரவங்கள் மற்றும் ஊட்டசத்தால் நிரப்புகிறது. விந்தணுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் கர்பப்பையினுள் வராமலிருக்க, கர்பப்பையின் வாயில் உள்ள மியூகஸை ப்ரொஜஸ்டிரோன் அதிகரிக்கின்றது.
ப்ரொஜஸ்டிரோன், உடலின் வெப்பத்தை, லுடியல் கட்டத்தில் சற்று அதிகரிக்க செய்து, அடுத்த மாதவிடாய் துவங்கும் வரை அவ்வாறே வைக்கிறது. இந்த வெட்பத்தின் அதிகரிப்பை வைத்து, ஓவுலேஷன் நடைபெற்றுள்ளதா என்பதை அறிந்துகொள்ளமுடியும். லூடியல் கட்டத்தின் அதிகபட்ச சமயத்தில் ஈஸ்ட்ரொஜென் அதிகமாக உள்ளது. ஈஸ்ட்ரொஜெனும் எண்டோமெட்ரியம் தடிமனாக்களை தூண்டுகின்றது.
ஈஸ்ட்ரொஜென் மற்றும் ப்ரொஜஸ்டிரொனின் அதிகரிப்பால், மார்பகங்களிலுள்ள பால் சுரப்பிகள் விரிவடைகின்றன. இதன் விளைவால் மார்பகங்கள் வீக்கம் மற்றும் தொட்டால் வலியும் ஏற்படலாம். முட்டைகருவடையாவிட்டால், கார்பஸ் லூடியம் 14 நாட்களுக்கு பிறகு சுருங்கிவிடுகிறது, மேலும் ஒரு புதிய மாதவிடாய் சுழற்சி துவங்குகிறது.
கருவடைதல் நடைபெற்றால், வளர்ந்து வரும் கருவை சுற்றியுள்ள அணுக்கள், ஹ்யுமன் கோரியோனிக் கொனெடொட்ரோபின் எனும் ஹார்மோனை சுரக்க துவங்குகிறது. இந்த ஹார்மோன் கார்பஸ்லூடியத்தை பராமரிப்பதால், அது வளரும் கரு தன் சொந்த ஹார்மோன்களை உருவாக்கிகொள்ளும் வரை தொடர்ந்து ப்ரொஜஸ்டிரோன் சுரக்கின்றது. ஹ்யுமன் கோரியோனிக் கொனெடொட்ரோபினின் அதிகரித்த அளவுகள் அடிப்படையில் செய்யப்டும் பரிசோதனை கர்பம் அடைந்துள்ளதா என்ற சோதனைக்கான ஆதாரமாக உள்ளது.

மாதவிடாய் பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)
http://www.youtube.com/watch?v=oL6KQAKYAkQ
http://www.youtube.com/watch?v=8qrWlf0bXpU







Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: