மலட்டுத்தன்மை

கேள்வி : மலட்டுத்தன்மை என்றால் என்ன?

பதில் - மலட்டுத்தன்மை என்பது இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் ஒரு நோய். இது உடலின் அடிப்படை செயலான இனப்பெருக்கத்தைக் கெடுக்கிறது. கருவுருதல் என்பது ஒரு சிக்கலான செயல். இது அநேக காரணிகளை பொருத்தது. அவையாவன

  • ஆணில் உண்டாகும் நலமான ஆண் விந்தணு மற்றும் பெண்ணில் உண்டாகும் பெலமுள்ள பெண் கருமுட்டை இவற்றைப் பொறுத்து அமைகிறது.
  • பெண் கருவகத்திலிருந்து கருப்பைக்கு, கருமுட்டையினை எடுத்துச்செல்லும் பெல்லோபியன் டியூப் எனப்படும் குழாய் அடைப்பின்றி இருந்தல்
  • ஆணின் விந்தணு கருமுட்டையுடன் இணைந்து கருசேர்க்கை ஏற்படுதல்
  • அவ்வாறு கருவுற்ற முட்டையானது கருப்பையில் பதிந்து கருவாக உருவாகுதல்
  • கருவின் போதுமான தரம்
  • முடிவாக கர்ப்ப காலம் முழுமை பெற்று குழந்தை பிறக்க, வளரும் கரு சுகாதாரமானதும் மற்றும் பெண்ணின் உடலில் உள்ள ஹார்மோன் சுரப்பிகள் கரு நன்கு வளர்ச்சி அடைவதற்கான சூழலை அமைத்துத் தருவது மிகவும் அவசியம்.

இவற்றில் ஏதேனும் ஒரு செயல் கெடும்போது குழந்தைபெற வாய்ப்பில்லாத மலட்டுத்தன்மை என்ற நிலையை ஏற்படுத்துகிறது.



கேள்வி 2. மலட்டுத்தன்மையை ஏற்படுத்துபவைகள் யாவை?

பதில்- ஆண்களில் மலட்டுத்தன்மை ஏற்படக்காரணங்களாவன
விந்தணுக்கள் உற்பத்தி இல்லாதிருப்பது அல்லது போதுமான விந்தணுக்கள் உற்பத்தியாகாமல் இருப்பது. சில வேளைகளில் விந்தணுக்கள் குறைபாடுடையவைகளாக (அதாவது இரண்டு தலைகள் அல்லது இரண்டு வால்கள் உடையனவாக) காணப்படுவது அல்லது விந்தணுக்கள் கரு முட்டையினை சென்றடைவதற்கு முன்னரே இறத்தல் போன்றவையாகும்.
பெண்களில் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான காரணங்களாவன வளர்ச்சி பெற்ற கருமுட்டை கருவகத்திலிருந்து வெளிப்படுவதில் ஏற்படும் கோளாறுகள்.
பெல்லோபியன் டியூபில் ஏற்படும் அடைப்பு மற்றும் திரும்பபத்திரும்ப எற்படும் கருச்சிதைவினால் கர்ப்பப்பையில் ஏற்படும் பைப்ராய்டுஸ் எனப்படும் பிரச்சினைகளும் மலட்டுத்தன்மைக்கு காரணங்களாகும். .



கேள்வி 3. வெளிக்கருவுருதல் (இன் விட்ரோ பெர்டிலைசேஷன்) என்றால் என்ன?

பதில்வெளிக்கருவுருதல் என்பது கருவகத்தில் உள்ள வளர்ச்சி பெற்ற கருமுட்டையினை அறுவைசிகிச்சை முறைப்படி நீக்கம் செய்து அதனை உடலுக்கு வெளியில் பெட்ரிடிஸ் எனப்படும் கண்ணாடித் தட்டில் வைத்து ஆண் விந்தணுவுடன் கலப்பது ஆகும். அவ்வாறு கலக்கச் செய்த கருமுட்டையினை சுமார் 40 மணி நேரத்திற்கு, கருச்சேர்க்கை நடந்து கருவுற்ற முட்டையில் செல் பிரிவுகள் ஏற்படுகின்றதா என்பது கண்காணிக்கப்படும். பின்னர் அக்கருவுற்ற வளரும் முட்டையினை மீண்டும் பெண்ணின் கருப்பையில் பதியச்செய்து வளரச் செய்வதாகும். இம்முறையில் ஆண் விந்தணு பெல்லோபியன் டியூப் வழியாக வருவது தவிர்க்கப்படுகிறது.

http://www.youtube.com/watch?v=8cUQkBu7ehY






Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: