|
பாதுகாப்பான தாய்மை குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதிலும்
நடைமுறைப்படுத்துவதிலும் உள்ள முக்கியத்துவங்கள் பின்வருமாறு ஒவ்வொரு
நாளும் சுமார் 1400 பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தைப்பிறப்பு
சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் இறக்கின்றனர். மேலும் பத்தாயிரத்திதிற்கும்
மேற்பட்டோர் கர்ப்பகாலங்களில் தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கு
அச்சுருத்தலைத் தருகின்ற அல்லது அவர்களை ஊனமாக்கும் பிரச்சினைகளை
சந்திக்கின்றனர். கர்ப்ப காலங்களில் ஏற்படுகிற ஆபத்துக்களை பெரிதளவு
குறைக்குக் கூடிய வழிமுறைகள் பின்வருமாறு
• கருத்தரிக்கும் முன்பு ஒரு பெண் நல்ல ஆரோக்கியத்துடனும் சத்தான உணவு
அருந்துபவளாகவும் இருத்தல் வேண்டும்.
• கர்ப்ப காலங்களில் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரால் குறைந்த
பட்சம் நான்குமுறை தனது ஆரோக்கியத்தை பரிசோதனை செய்தல் வேண்டும்.
• பிரசவத்தை நல்ல திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள்,
மருத்துவச்சிகள் உதவியோடு மேற்கொள்ள வேண்டும்.
• பிரசவத்திற்குப் பிறகு 12 மணிநேரம் வரையிலும், குழந்தைப்பிறப்பிற்கு
பின்பு 6 வாரங்கள் கழித்தும் தாயானவள் பரிசோதிக்கப்பட வேண்டும்.
பிரசவத்திற்கு முன்பும் பின்பும், குழந்தைப் பிறப்பின் போதும்
தேவைப்படுகிற பராமரிப்பை அளிக்கவும், பிரசவம் மற்றும் குழந்தைப்
பிறப்பின்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்ற பெண்களுக்கு விசேஷித்த
முறையில் பராமரிப்பு அளிக்கவும் சுகாதாரப்பணியாளர்களுக்கு நன்கு பயிற்சி
அளிக்கவேண்டிய பெரும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.
-
|
பாதுகாப்பான தாய்மை குறித்து ஒவ்வொரு
குடும்பமும், சமூகமும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் பின்
வருமாறு
- அனைத்து குடும்பங்களும் கர்ப்பம், குழந்தைப்பிறப்புக் காலங்களில்
ஏற்படுகின்ற ஆபத்தான பிரச்சினைகளின் அபாயகரமான அடையாளங்களை இனம்
கண்டுகொள்பவர்களாக இருத்தல் வேண்டும். மேலும் பிரச்சினைகள் எழும்போது,
தேவையான உதவிகள் பெறுவதற்கான திட்டங்களையும் முன் ஏற்பாடாக கொண்டிருத்தல்
வேண்டும்.
- கர்ப்பம் மற்றும் குழந்தைப் பிறப்புக் காலங்களில் திறமையான
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவச்சிகள் போன்றோர், ஒவ்வொரு கருவுற்ற
பெண்களையும் குறைந்தது நான்கு முறையாகிலும் கண்டிப்பபாக பரிசோதிக்க
வேண்டும்.
- சாதாரண நாட்களைவிட கர்ப்பகாலம் முழுவதும் அனைத்து கருத்தரித்த
பெண்களுக்கும் போதிய ஓய்வும் குறிப்பாக சத்து நிறைந்த உணவும் மிக
அவசியம்.
- புகைப்பிடித்தல், மதுபானம், போதை மருந்து, விஷம் மற்றும் மாசு
ஏற்படுத்தும் பொருட்கள் முதலியன கருத்தரித்த பெண்களுக்கும், இளம்
குழந்தைகளுக்கும் பெரும் தீங்குவிளைவிக்கிறது.
- உடல் ரீதியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் தகாதமுறையில்
உபயோகிக்கப்படுவது பல சமூகங்களில் காணப்படுகிற சமுதாயப் பிரச்சினையாகும்.
குறிப்பாக கர்ப்ப காலங்களில் தவறாக உபயோகித்தால், அது தாய் மற்றும்
கருவிலுள்ள குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
- ஆரோக்கியமான, கல்வி அறிவு பெற்ற, குழந்தைப்பருவம் மற்றும் இளம்வயதில்
சத்து நிறைந்த உணவு உட்கொண்ட பெண்கள் கர்ப்பம் மற்றும் குழந்தைப்
பிறப்பின்போது மிகக்குறைந்த பிரச்சினைகளையே சந்திப்பார்கள்.
- ஒவ்வொரு பெண்ணும் குறிப்பாக கர்ப்பம் மற்றும் குழந்தைப்பிறப்புக்
காலங்களில் மருத்துவ பராமரிப்பைப் பெறும் உரிமையைப் பெற்றிருக்கிறாள்.
மருத்துவ பராமரிப்பை அளிப்பவர்கள் தொழிற்நுட்ப ரீதியாக
திறமையானவர்களாயும், கருவுற்ற பெண்களை மரியாதையுடன் நடத்துபவர்களாகவும்
இருத்தல் வேண்டும்.
|
|
பாதுகாப்பான தாய்மை குறித்த உபதகவல்கள் : 1 2
3
4 5
6 7
|