ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி

 
குழந்தை பிறப்பை திட்டமிடுதல்
பாதுகாப்பான தாய்மை
குழந்தை வளர்ச்சி மற்றும் இளம்பருவ கற்கும் தன்மை
தாய்ப்பால் அளித்தல்
ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி
தடுப்பூசி
வயிற்றுப்போக்கு
இருமல், சளி மற்றும் இதர ஆபத்தான சுகவீனங்கள்
சுகாதாரம்
மலேரியா
எச்.ஐ.வி / எயிட்ஸ்
காயத்தடுப்பு முறை
பேரழிவு மற்றும் அவசரகால நிலை
குறிப்புகளின் சுருக்கம்

ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதும் அதன் படி நடவடிக்கை எடுப்பதும் ஏன் அவசியம்?

பாதிக்கும் மேற்பட்ட குழந்தையிறப்பு ஊட்டச்சத்து பற்றாகுறையுடன் தொடர்புடையது. ஊட்டச்சத்து குறைபாட்டினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. குறைபாடான உணவு, அடிக்கடி நோய்வாய்படுதல். மற்றும் குறைவான அல்லது கவனமில்லாத சிறு குழந்தைகளின் வளர்ப்பு போன்றவைகள்தான் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணமாகும்.

கர்ப்பகாலத்தில் ஒரு பெண்ணிற்கு ஊட்டச்சத்து பற்றாகுறையோ அல்லது அவளது குழந்தைக்கு முதல் இரண்டு ஆண்டுக்குள் ஊட்டச்சத்து பற்றாகுறையோ ஏற்பட்டால் அந்த குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சி, மற்றும் மேம்பாடு தாமதம் ஆகலாம். இதை குழந்தை வளர்ந்த பின் சரி செய்ய இயலாது – இது குழந்தையின் ஆயுள் முழுதும் பாதிக்கிறது

முக்கிய குறிப்புகள்:

ஊட்டசத்து மற்றும் வளர்ச்சி பற்றி ஒவ்வொரு குடும்பம் மற்றும் சமூகம் தெரிந்துகொள்வ வேண்டியது என்ன?

  1. சிறு குழந்தை நன்றாக வளர வேண்டும் மற்றும் வேகமாக உடல் எடை அதிகரிக்க வேண்டும். பிறந்ததிலிருந்து இரண்டு வயது வரை, குழந்தைகளின் எடையை ஒவ்வொரு மாதமும் கவனிக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு குழந்தையின் எடை அதிகரிக்கவில்லை என்றால் ஏதோ தவறு என்று அர்த்தம்.
  2. ஆறு மாதம் வரை சிசுவிற்கு தேவையான உணவும் பானமும் தாய்ப்பால் மட்டுமே. ஆறு மாதத்திற்கு பின் தாய்ப்பாலுடன் குழந்தைக்கு மற்ற வித விதமான உணவுகளும் தேவை.
  3. ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரை, குழந்தைகளுக்கு ஒரு நாளில் தாய்ப்பாலுடன் 5 முறை உணவும் அளிக்க வேண்டும்.
  4. நோயை எதிர்க்க மற்றும் பார்வையின் பாதிப்பை வராமல் தவிர்க்க குழந்தைகளுக்கு வைட்டமின் – ஏ தேவை. அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகள், எண்ணெய், முட்டை, பால் சார்ந்த பண்டங்கள், மெருகேற்றிய உணவுகள், தாய்ப்பால் அல்லது வைட்டமின்–ஏ மருந்துகளில் வைட்டமின்-ஏ உள்ளது.
  5. உடல் மற்றும் புத்தி திறனை பாதுகாக்க, குழந்தைகளுக்கு இரும்பு சத்து நிரைந்த உணவுகள் தேவை. ஈரல் கொழுப்பில்லா மாமிசம், மீன், முட்டை மற்றும் இரும்பு சத்து மெருகேற்றிய உணவுகள் அல்லது இரும்பு மாத்திரைகள் போன்றவை இரும்புச்சத்தை வழங்கும்.
  6. கற்றுகொள்ளும் குறைபாட்டை மற்றும் மேம்பாட்டு தாமதத்தை தவிர்க்கவும், அயோடைட் உப்பு அவசியம்.
  7. உடல் நலம் சரியில்லாத போது, குழந்தைகள் தொடர்ந்து சரியாக சாப்பிட வேண்டும். சரியான பின்பு, குழந்தைகள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு வேளை அதிகமான உணவை ஒரு வாரத்திற்காவது சாப்பிட வேண்டும்.


பாதுகாப்பான தாய்மை குறித்த உபதகவல்கள் :1   2   3   4   5   6   7

  << முந்தைய தலைப்பு   அடுத்த தலைப்பு>>

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: