மலேரியா

 
குழந்தை பிறப்பை திட்டமிடுதல்
பாதுகாப்பான தாய்மை
குழந்தை வளர்ச்சி மற்றும் இளம்பருவ கற்கும் தன்மை
தாய்ப்பால் அளித்தல்
ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி
தடுப்பூசி
வயிற்றுப்போக்கு
இருமல், சளி மற்றும் இதர ஆபத்தான சுகவீனங்கள்
சுகாதாரம்
மலேரியா
எச்.ஐ.வி / எயிட்ஸ்
காயத்தடுப்பு முறை
பேரழிவு மற்றும் அவசரகால நிலை
குறிப்புகளின் சுருக்கம்

மலேரியா பற்றின தகவல்களை பகிர்ந்து நடைமுறைப் படுத்துவதின் முக்கியத்துவம் என்ன?

மலேரியா என்பது கொசுக்கடியினால் பரவும் ஒரு மோசமான நோயாகும். ஒவ்வொரு ஆண்டும் 30 கோடிமுதல் 50 கோடி வரை மக்கள் மலேரியாவினால் பாதிக்கப்படுகின்றனர். 10 லட்சம் குழந்தைகள் மலேரியாவினால் இறக்கின்றனர். மலேரியா அதிகமாக காணப்படும் பகுதிகளில், இறப்பு மற்றும் இளம்குழந்தைகள் வளர்ச்சி குறைவுக்கு, இந்நோயே முக்கிய காரணமாக அமைகிறது.

மலேரியா, முக்கியமாக, கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தானதாக அமைகிறது. இதனால், இரத்தசோகை, கருக்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், குழந்தை எடைகுறைந்து பிறத்தல் மற்றும் கர்ப்பிணிப்பெண் இறப்பு போன்றவை ஏற்படுகிறது

நோய்தடுப்பு மற்றும் இந்நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம், பல உயிர்களைக் காப்பாற்றலாம்.

முக்கிய குறிப்புகள் :

ஒவ்வொரு குடும்பமும் மற்றும் சமுதாயமும் மலேரியா பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை என்ன?

  1. மலேரியா கொசுக்கடியால் பரப்பப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லியிடப்பட்ட கொசுவலைகளுக்குள் தூங்குவது, கொசுக்கடியை தடுக்க சிறந்த வழியாகும்.
  2. எங்கெல்லாம் மலேரியா அதிகமாக காணப்படுகிறதோ, அங்கெல்லாம் சிறுபிள்ளைகள் அதிக ஆபத்தில் உள்ளனர். ஒரு குழந்தை காய்ச்சலுடன் காணப்பட்டால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரால் அக்குழந்தை சோதிக்கப்பட வேண்டும். மலேரியாவினை தடுக்க ஆன்டி மலேரியல் ட்ரீட்மெண்ட் எனப்படும் சிகிச்சையினை பெற்றுக் கொள்ள வேண்டும்
  3. கர்ப்பிணிப் பெண்களுக்கு மலேரியா மிகவும் ஆபத்தானது. எங்கெல்லாம் மலேரியா அதிகமாக உள்ளதோ, அப்பகுதியில் கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரப் பணியாளரால் பரிந்துரைக்கப்பட்ட மலேரியாவிற்கு எதிரான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  4. மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ள அல்லது மலேரியவிலிருந்து சுகம் பெற்றுக் கொண்டிருக்கிற ஒரு குழந்தைக்கு, அதிகளவு திரவ மற்றும் திட உணவு தேவைப்படுகிறது.
  5. குடும்பங்கள் மற்றும் சமுதாயங்கள் கொசுக்கள் இனப்பெருக்கம் அடைவதை நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், மலேரியாவை தடுத்து நிறுத்த முடியும்


பாதுகாப்பான தாய்மை குறித்த உபதகவல்கள் : 1   2   3   4   5

  << முந்தைய தலைப்பு   அடுத்த தலைப்பு>>

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: