|
காயம் ஏற்படுவதை தடுத்தலைப்பற்றி தகவல்களை பகிர்ந்து, நடைமுறைப்
படுத்துவதின் முக்கியத்துவம் என்ன?
ஒவ்வொரு வருடமும் 7,50,000 குழந்தைகள் காயம் ஏற்படுவதால் இறக்கின்றனர்.
மேலும், 40 கோடி குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். பல காயங்கள்
நிரந்தர இயலாமை மற்றும் மூளைச்சிதைவினை ஏற்படுத்துகின்றன. காயங்களே
சிறுபிள்ளைகளில் மரணம் மற்றும் இயலாமையை ஏற்படுத்துவதற்கான மிகப்பெரிய
காரணமாகும்
கீழே விழுதல், தீக்காயங்கள், நீரில் மூழ்குதல் மற்றும் சாலை
விபத்துக்கள் போன்றவை பொதுவான காயங்கள் ஆகும். பெரும்பாலான இவ்வகை
காயங்கள், வீட்டிலோ அல்லது வீட்டிற்கு அருகாமையிலோ நடக்கின்றன. காயம்
ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும் என்பதனை பெற்றோர்கள் அறிந்திருத்தால்,
பல காயங்களால் உண்டாகும் ஆபத்துகளை குறைக்க முடியும்.
-
|
ஒவ்வொரு குடும்பம் மற்றும் சமுதாயமும் காயம்
பற்றி அறிந்திருக்க வேண்டியவை என்ன?
- பெற்றோர் மற்றும் பிள்ளைகளை கவனிப்பவர்கள், இளம் சிறுவர்களை கவனமாக
கண்காணித்து, சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், பல
மோசமான காயங்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த முடியும்.
- பிள்ளைகளை அவசியம் நெருப்பு, சமைக்கும் அடுப்புகள், விளக்குகள்,
தீப்பெட்டிகள் மற்றும் மின்சார சாதனம் போன்றவற்றிலிருந்து தூரமாக
இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
- சிறுபிள்ளைகள் உயர ஏற விரும்புவர். மாடி படிகள், கட்டிட பால்கனி,
கூரைகள், ஜன்னல்கள் மற்றும் விளையாடும் பகுதிகளை, பிள்ளைகள் கீழே விழா
வண்ணம் அமைக்க வேண்டும்.
- கத்திகள், கத்தரிக்கோல்கள், கூர்மையான பொருட்கள் மற்றும் உடைந்த
கண்ணாடித்துண்டுகள் போன்றவை மிக மோசமான காயங்களை ஏற்படுத்தலாம். இவற்றை
அவசியம் குழந்தைகளுக்கு கிட்டா வண்ணம் வைக்க வேண்டும்.
- சிறுபிள்ளைகள் பொருட்களை தங்கள் வாயில் வைக்க விரும்புவர்.
மூச்சுத்திணறல் ஏற்படுவதை தடுக்கும் வண்ணம், சிறிய பொருட்களை
சிறுபிள்ளைகள் எடுக்க முடியாத வண்ணம் உயரத்திலோ அல்லது பாதுகாப்பான
இடத்திலோ வைக்க வேண்டும்.
- விஷம், மருந்து, அமிலம் மற்றும் மண்ணெண்ணை போன்றவைகளை குடிக்கப்
பயன்படும் பாட்டில்களில் வைத்தல் கூடாது. இதற்கு என்று குறிக்கப்பட்ட
பாட்டில்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் அவைகளை சிறுபிள்ளைகள்
எடுக்க முடியாத வண்ணம், உயரத்திலோ அல்லது பாதுகாப்பான இடத்திலோ வைக்க
வேண்டும்.
- சிறுபிள்ளைகள் மிக குறைந்த அளவு தண்ணீரிலும் இரண்டு
நிமிடங்களுக்குள்ளாக மூழ்கிவிடுவர். சிறுபிள்ளைகளை ஒருபோதும் தண்ணீரிலோ
அல்லது தண்ணீருக்கு அருகாமையிலோ தனியாக விட்டுவிடக்கூடாது.
- ஐந்து வயதிற்குட்பட்ட சிறுபிள்ளைகளுக்கு குறிப்பாக சாலைகளில்
பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சாலைகளில் செல்லும்போது, அவர்களுடன்
அவசியம் யாராவது ஒருவர் இருக்க வேண்டும். அவர்கள் நடக்க பயின்றவுடன்,
சாலைகளில் எப்படி பாதுகாப்பாக நடந்து செல்வது என்பதனைப்பற்றி அவசியம்
கற்பிக்க வேண்டும்.
|
|
பாதுகாப்பான தாய்மை குறித்த உபதகவல்கள் : 1 2 3 4 5 6 7 8
|