நோய்த்தடுப்பு

 
குழந்தை பிறப்பை திட்டமிடுதல்
பாதுகாப்பான தாய்மை
குழந்தை வளர்ச்சி மற்றும் இளம்பருவ கற்கும் தன்மை
தாய்ப்பால் அளித்தல்
ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி
தடுப்பூசி
வயிற்றுப்போக்கு
இருமல், சளி மற்றும் இதர ஆபத்தான சுகவீனங்கள்
சுகாதாரம்
மலேரியா
எச்.ஐ.வி / எயிட்ஸ்
காயத்தடுப்பு முறை
பேரழிவு மற்றும் அவசரகால நிலை
குறிப்புகளின் சுருக்கம்

நோய்த்தடுப்பு பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதும் அதன் படி நடவடிக்கை எடுப்பது ஏன் அவசியம்?

ஒவ்வொரு ஆண்டும், 1.7 மில்லியன் குழந்தைகள், சுலபமாக கிடைக்ககூடிய தடுப்பூசிகளால் தவிர்க்ககூடிய நோய்களால் இறக்கின்றன. நோய் தடுப்பு தரப்பட்ட குழந்தைகளை, குறைபாடோ அல்லது உயிரிழப்போ ஏற்படுத்தக்கூடிய இந்த பயங்கர நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. எல்லா குழந்தைகளுக்கும் இந்த பாதுகாப்பை பெறுவதற்கான உரிமை உண்டு.

ஒவ்வொரு பெண் மற்றும் ஆண் குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு மருந்து தரவேண்டும். மேலும் கர்ப்பிணி பெண்கள் தங்களையும், தன் சிசுவையும் டெட்டனசிலிருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு மருந்து பெற்றுகொள்ள வேண்டும்.

எல்லா பெற்றோர்களும், ஏன்? ஏங்கே? எப்போது? மற்றும் எத்தனை முறை குழந்தைக்கு நோய்த்தடுப்பு மருந்து தரவேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாத போதும், அல்லது குறைபாடிருந்தாலும், அல்லது ஊட்டச்சத்து குறைபடிருந்தாலும், குழந்தைக்கு நோய்த்தடுப்பு மருந்து தருவதுதான் பாதுகாப்பானது என்று எல்லா பெற்றோரும் தெரிந்துகொள்ளவேண்டும்.

முக்கிய குறிப்புகள்:

நோய்த்தடுப்பு பற்றி ஒவ்வொரு குடும்பம் மற்றும் சமூகம் தெரிந்துகொள்வ வேண்டியவை என்ன?

  1. நோய்த்தடுப்பு அவசரமானது. ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஆண்டில் தொடர்ச்சியான நோய்தடுப்பு மருந்துகள் தேவை.
  2. நோய்த்தடுப்பு பல பயங்கரமான வியாதிகளிலிருந்து பாதுகாக்கிறது. நோய்த்தடுப்பு பெறாத குழந்தை, வியாதியால் அவதிபட்டு, நிரந்தரமான குறைபாடோ அல்லது ஊட்டச்சத்து பற்றாக்குறைபாடோ ஏற்பட்டு இறக்கும் வாய்ப்புகள் அதிகம்.
  3. குழந்தைக்கு, சாதாரண வியாதி, உடல் குறைபாடு அல்லது ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும், நோய்த்தடுப்பு தருவது பாதுகாப்பானதுதான்.
  4. எல்லா கர்ப்பினி பெண்களையும் டெட்டனஸிலிருந்து பாதுகாக்கவேண்டியது அவசியம். அந்த பெண் முன்பே நோய்த்தடுப்பு எடுத்திருந்தாலும், கூடுதலாக டெட்டனஸ் டாக்சைய்ட் தடுப்பூசி தேவைப்படலாம். சுகாதார ஊழியரிடம் அறிவுரை மற்றும் டெட்டனஸ் டாக்சைய்ட் தடுப்பூசி பற்றி தெரிந்துகொள்ளலாம்.
  5. நோய்த்தடுப்பு மருந்து எடுத்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக புதிய அல்லது ஸ்டெரலைஸ் செய்யப்பட்ட ஊசி மற்றும் சிரிஞ்சை பயன்படுத்தவேண்டும். மக்களும் இதை வலியுறுத்த வேண்டும்.
  6. மக்கள் கூட்டமாக சேர்ந்திருந்தால் நோய் சீக்கிரமாக பரவலாம். நெருக்கமான சூழ்நிலைகளில் வாழும், குழந்தைகள் குறிப்பாக அகதிகள் அல்லது பேரழிவு சூழ்நிலைகளில் வாழும் எல்லா குழந்தைகளுக்கும் உடனடியாக குறிப்பாக தட்டம்மைக்கு எதிராகவும் நோய்த்தடுப்பு தரவேண்டும்.


பாதுகாப்பான தாய்மை குறித்த உபதகவல்கள் :1   2   3   4   5   6

  << முந்தைய தலைப்பு   அடுத்த தலைப்பு>>

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: