சுகாதாரம்

 
குழந்தை பிறப்பை திட்டமிடுதல்
பாதுகாப்பான தாய்மை
குழந்தை வளர்ச்சி மற்றும் இளம்பருவ கற்கும் தன்மை
தாய்ப்பால் அளித்தல்
ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி
தடுப்பூசி
வயிற்றுப்போக்கு
இருமல், சளி மற்றும் இதர ஆபத்தான சுகவீனங்கள்
சுகாதாரம்
மலேரியா
எச்.ஐ.வி / எயிட்ஸ்
காயத்தடுப்பு முறை
பேரழிவு மற்றும் அவசரகால நிலை
குறிப்புகளின் சுருக்கம்

சுகாதாரம் பற்றின தகவல்களை பகிர்ந்து நடைமுறைப் படுத்துவதின் முக்கியத்துவம் என்ன?

குழந்தைகள் மற்றும் சிறுபிள்ளைகளில் வரும் உடல்நலக்கேடுகள் மற்றும் இறப்புகளில் பாதிக்கு மேல், உணவு, தண்ணீர் மற்றும் அழுக்கான கைகள் மூலம் வாயிற்குள் செல்லும் நோய்கிருமிகளால் ஏற்படுகிறது. பெரும்பாலான இந்நோய் கிருமிகள், மனித மலம் மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து வருகிறது.

பேதி போன்ற பெரும்பாலான உடல்நலக்குறைவுகள், நல்ல சுகாதாரப் பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது மூலம் தடுத்து நிறுத்தலாம். கழிவறையில், மலம் கழித்தல் அல்லது கொட்டுதல், மலம் கழித்த அல்லது குழந்தைகள் கழித்த மலத்தை அப்புறப்படுத்தின பின்னரோ மற்றும் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முன்னர் அல்லது உணவுகளைத் தொடும் முன் கைகளை சோப்/சாம்பல் மற்றும் தண்ணீர் கொண்டு நன்கு கழுவ வேண்டும். விலங்குகளின் கழிவுகள் வீடு, பாதை மற்றும் சிறுபிள்ளைகள் விளையாடும் பகுதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்தல் அவசியம்

சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து கழிவறைகள் கட்டி பயன்படுத்த வேண்டும். நீராதாரங்களை பாதுகாக்க வேண்டும். கழிவுப்பொருள் மற்றும் கழிவுநீரை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். குறைந்த செலவில் மேற்கொள்ளக்கூடிய கழிவறைகளை கட்ட, அரசாங்கம் உதவ வேண்டும். நகர்புறங்களில், குறைந்த விலையில் துப்புறவு மற்றும் வடிகால் வசதிகள், மேம்படுத்தப்பட்ட குடிநீர் விநியோகம் மற்றும் குப்பைகள் அகற்றும் பணிகளுக்கு அரசாங்கம் உதவவேண்டும்

முக்கிய குறிப்புகள் :

ஒவ்வொரு குடும்பமும் மற்றும் சமுதாயமும் சுகாதாரம் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை என்ன?

  1. மலம் முழுவதும், அவசியம் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட வேண்டும். கழிவறை அல்லது கக்கூஸ் பயன்படுத்துவது சிறந்த வழியாகும்.
  2. மலத்தை தொட்ட பின், உணவினை தொடுவதற்கு முன் மற்றும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் முன், சிறு பிள்ளைகளையும் சேர்த்து குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபரும் கைகளை சோப்/சாம்பல் மற்றும் தண்ணீர் கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.
  3. சோப் மற்றும் தண்ணீரைக் கொண்டு தினமும் முகத்தினை கழுவுவது கண்களில் ஏற்படும் நோய்தொற்றுவினை தடுக்கிறது. உலகின் சில பகுதிகளில், கண்களில் ஏற்படும் நோய்தொற்று ட்ராகோமா எனும் கண்ணிமையளிப்பு நோயினை ஏற்படுத்துகிறது. இது பார்வை இழப்பினை ஏற்படுத்தும்.
  4. பாதுகாப்பான நீராதாரங்களிலிருந்து அல்லது சுத்தம் செய்யப்பட்ட தண்ணீரை மாத்திரம் பயன்படுத்த வேண்டும். தண்ணீரை சுத்தமாக வைத்துக் கொள்ள, தண்ணீர் பாத்திரங்களை மூடிவைக்க வேண்டும்.
  5. சமைக்காத மற்றும் மீதம் உள்ள உணவுகள் அபாயகரமானவைகள். சமைக்கப்படாத உணவுகளை அவசியம் கழுவ வேண்டும் அல்லது சமைக்க வேண்டும். சமைத்த உணவுகளை அவசியம் தாமதமின்றி உட்கொள்ள வேண்டும் அல்லது நன்கு திரும்ப சூடுபடுத்த வேண்டும்
  6. உணவு தயாரிக்க பயன்படும் இடம் மற்றும் பாத்திரங்கள் அவசியம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உணவினை அவசியம் மூடியிட்ட பாத்திரங்களில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
  7. வீட்டுக்குப்பைகள் அனைத்தையும் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவது நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.


பாதுகாப்பான தாய்மை குறித்த உபதகவல்கள் :  2   3   4   5    6    7

  << முந்தைய தலைப்பு   அடுத்த தலைப்பு>>

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: