எச்.ஐ.வி / எயிட்ஸ்

 
குழந்தை பிறப்பை திட்டமிடுதல்
பாதுகாப்பான தாய்மை
குழந்தை வளர்ச்சி மற்றும் இளம்பருவ கற்கும் தன்மை
தாய்ப்பால் அளித்தல்
ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி
தடுப்பூசி
வயிற்றுப்போக்கு
இருமல், சளி மற்றும் இதர ஆபத்தான சுகவீனங்கள்
சுகாதாரம்
மலேரியா
எச்.ஐ.வி / எயிட்ஸ்
காயத்தடுப்பு முறை
பேரழிவு மற்றும் அவசரகால நிலை
குறிப்புகளின் சுருக்கம்

எச்.ஐ.வி/எயிட்ஸ் பற்றின தகவல்களை பகிர்ந்து நடைமுறைப் படுத்துவதின் முக்கியத்துவம் ஏன்?

• உலகின் ஒவ்வொரு நாட்டில் உள்ள மக்களும் எயிட்ஸ் (ஏ.ஐ.டி.எஸ் - அக்வெயர்ட் இம்யூன் டெஃபிஸியன்ஸி சின்ட்ரோம்) எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எச்.ஐ.வி/எயிட்ஸ் எனப்படும் நோய் ஒவ்வொரு நாளும் உலகிற்கு ஆபத்தானதாக மாறிக்கொண்டு வருகிறது.

• தற்போதைக்கு 4 கோடி இளைஞர்கள் மற்றும் சிறுபிள்ளைகள் எச்.ஐ.வி / எயிட்ஸ் நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும், 15 வயதிற்குட்பட்ட ஒரு கோடியே 40 லட்சம் சிறுபிள்ளைகள், தங்கள் தாய்களையோ அல்லது தாய் மற்றும் தந்தை இருவரையுமே இழந்துள்ளனர்.

• இந்நோய் அதிகம் இளைஞர்களை பாதிக்கிறது. 2001-ஆம் ஆண்டில் 5 லட்சம் பேர் இந்நோயினால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் 15 முதல் 24 வயதிற்குட்பட்ட இளைஞர்களாவர்.

• இளம் பெண்கள் முக்கியமாக அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

• ஒரு கோடியே 18 லட்சம் பேர் எச்.ஐ.வி / எயிட்ஸ் - உடன் வாழ்ந்து கொண்டுள்ளனர் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 73 லட்சம் பேர் இளம் பெண்கள் மற்றும் 45 லட்சம் பேர் இளம் வாலிபர்கள் ஆவர்.

• எயிட்ஸ் எனும் நோய் எச்.ஐ.வி எனப்படும் ஃஹீயுமன் இம்யுனோடெஃபிஸியன்ஸி வைரஸ் எனப்படும் நோய் கிருமியினால் தோற்றுவிக்கப்படுகிறது. எச்.ஐ.வி, உடலில் உள்ள நோய் எதிர்க்கும் தன்மையை சிதைவுறச் செய்கிறது.

• எச்.ஐ.வி / எயிட்ஸ் நோயின்போது மருந்துகளை எடுத்துக் கொள்வது, நீண்ட நாள் வாழ உதவிசெய்கிறது, ஆனால், இதுவரை இந்நோய்க்கு தடுப்பு மருந்தோ அல்லது பூரண சுகமோ கிடையாது.

• எச்.ஐ.வி / எயிட்ஸ் வருமுன் அதை தடுத்து நிறுத்துவதே மிகச்சீறிய உக்தியாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நபரும் இந்நோய் வராமல் தடுப்பது மற்றும் பரவாமல் தடுப்பது எப்படி என்பதனை அவசியம் அறிய வேண்டும்.

• ஆணுறைகள் (காண்டம்ஸ்) பாலுறவு மூலம் ஏற்படும் எச்.ஐ.வியினை தடுத்து நிறுத்தி, உயிர்களை காக்கிறது.

• நோய் தாக்குதலை பரிசோதித்து கண்டறிவதற்கும், ஆலோசனை பெறுவதற்கும் ஒவ்வொரு நாட்டிலும் முதன்மை முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் தானாக வந்து தனிப்பட்ட இரகசிய முறையில் ஆலோசனை பெற மற்றும் எச்.ஐ.வி / எயிட்ஸ் பரிசோதனை செய்து கொள்ளவும் உரிமையுண்டு. ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தனது எச்.ஐ.வி / எயிட்ஸ் நிலையினை வைத்து எந்த விதத்திலும் தொடர்புபடுத்தி வேறுபடுத்தாமல் தங்களைக் காத்துக்கொள்ள உரிமையுண்டு.

• எச்.ஐ.வி/எயிட்ஸ் -ஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவனிப்பும், அரவணைப்பும் தேவைப்படுகிறது. எச்.ஐ.வி / எயிட்ஸ் சம்பந்தப்பட்ட சேவைகள் மற்றும் திட்டங்களை அணுக தடையாக உள்ள சமுதாய, கலாசார மற்றும் அரசியல் இடையூறுகளை அறிந்து அவசியம் நீக்க வேண்டும்.

முக்கிய குறிப்புகள் :

ஒவ்வொரு குடும்பமும் மற்றும் சமுதாயமும் எச்.ஐ.வி / எயிட்ஸ்- ஐப்பற்றி அறிந்திருக்க வேண்டிவை என்ன?

  1. எயிட்ஸ் ஒரு குணப்படுத்த முடியாத ஆனால் வராமல் தடுத்து நிறுத்தக்கூடிய ஒரு நோய். எச்.ஐ.வி என்பது எய்ட்ஸ்-ஐ ஏற்படுத்தும் ஒரு வைரஸ் நோய்கிருமி. இது பாதுகாப்பற்ற பாலுறவு (ஆணுறை அணியாமல் உடலுறவு கொள்ளும் போது), பரிசோதிக்கப்படாத இரத்தத்தினை மற்றவர்களுக்கு செலுத்துதல், நோய் தொற்று ஏற்படுத்தக்கூடிய மாசு அடைந்த ஊசிகள் மற்றும் ஊசிபோட பயன்படும் பீச்சுக்குழல்கள் (சிரின்ஞ்) பயன்படுத்துதல் மற்றும் நோய்தொற்று கொண்ட பெண்ணிடமிருந்து அவள் குழந்தைக்கு கர்ப்ப காலத்தின் போதோ, குழந்தை பிறப்பின் போதோ அல்லது தாய்ப்பால் கொடுப்பதின் மூலமோ பரவுகிறது.
  2. சிறு பிள்ளைகள் உட்பட, அனைத்து மக்களும் எச்.ஐ.வி/எயிட்ஸ் தாக்கப்படக்கூடிய அபாய நிலையில் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் இந்நோய் பற்றின தகவல்கள் மற்றும் படிப்பு/பயிற்சி தேவை. எய்ட்ஸ் ஏற்படும் அபாயநிலையை குறைக்கும் ஆணுறைகளின் (காண்டம்ஸ்) பயன்பாடும் முக்கியம்.
  3. எந்த ஒரு ஆண் அல்லது பெண் தனக்கு எச்.ஐ.வி நோய் தொற்று இருக்குமோ என சந்தேகிக்கும் போது, அவசியம் ஒரு சுகாதாரப் பணியாளரோ அல்லது எச்.ஐ.வி/எயிட்ஸ் மையத்தையோ அணுகி இரகசியமாக ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
  4. பாலுறவு வைத்துக் கொள்ளாமல் இருத்தல், பாலுறவு வைத்துக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை குறைத்தல், நோய்தொற்று இல்லாதவர்கள் மாத்திரம், ஒருவருடன் ஒருவர் பாலுறவு வைத்துக் கொள்வது, மற்றும் பாதுகாப்பான பாலுறவு (ஆணுறுப்பை பெண்ணுறுப்புக்குள் செலுத்தாமல் பாலுறவு அல்லது ஆணுறையைப் பயன்படுத்தி பாலுறவு) கொள்வதின் மூலம் பாலுறவின் மூலம் எச்.ஐ.வி நோய் ஏற்படும் ஆபத்தினை குறைக்கலாம். சரியான மற்றும தொடர்ச்சியான ஆணுறையின் (காண்டம்ஸ்) பயன்பாடு எச்.ஐ.வி பரவுவதை தடுத்து, உயிர்களை காக்கக்கூடும்.
  5. பெண் பிள்ளைகள் எச்.ஐ.வி நோய்தொற்றுவினால் மிகவும் அதிகளவு பாதிக்குள்ளாகிறார்கள். அவர்களுக்கு தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள உதவி தேவைப்படுகிறது. தேவையற்ற மற்றும் பாதுகாப்பற்ற பாலுறவுக்கு எதிராக அவர்கள் காக்கப்பட வேண்டும்.
  6. எச்.ஐ.வி/எயிட்ஸ் வருவதற்கான மற்றும் பரவுவதற்கான காரணங்கள், அவற்றை தவிர்க்கும் முறைகள் போன்றவற்றை பற்றியும், சரியான மற்றும் தொடர்ச்சியான ஆணுறை மற்றும் பெண்ணுறை பயன்பாடு பற்றியும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், இளம் மக்களிடம் பேசுவதின் மூலம், அவர்களை இந்நோயினின்று தற்காத்துக்கொள்ள உதவலாம்
  7. எச்.ஐ.வி நோய்தொற்று ஒரு தாயிலிருந்து குழந்தைக்கு கர்ப்ப காலத்திலோ அல்லது குழந்தை பிறப்பின் போதோ அல்லது தாய்ப்பாலின் மூலமாகவே கடத்தப்படலாம். எச்.ஐ.வி நோய் தொற்று கொண்ட அல்லது எச்.ஐ.வி நோய் தொற்று இருக்குமோ என சந்தேகிக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணோ அல்லது புதிதாய் குழந்தை பெற்றெடுத்தவர்கலோ அவசியம் சுகாதார பணியாளரை அணுகி பரிசோதனை மற்றும் ஆலோசனை நாட வேண்டும்.
  8. சரியாய் தூய்மை செய்யப்படாத ஊசிகள் மற்றும் பீச்சுக்குழல்களை மருந்துகள் உட்செலுத்த பயன்படுத்துவதின் வாயிலாக, எச்.ஐ.வி பரவலாம். பயன்படுத்தப்பட்ட ப்ளேட்கள், கத்திகள் அலலது தோலை வெட்டும் அல்லது குத்திக்கிழிக்கும் சாதனங்கள் போன்றவை எச்.ஐ.வியினை பரப்பும் ஆபாயம் கொண்டவை.
  9. பால்வினை நோய்தொற்று உள்ளவர்களுக்கு எச்.ஐ.வி ஏற்படும் மற்றும் அதனை பிறருக்கு பரப்பும் ஆபத்துகள் மிகவும் அதிகம். பால்வினை நோய் தொற்றுள்ள மக்கள் அவசியம் சரியான சிகிச்சையினை நாட வேண்டும். மேலும், பாலுறவு வைத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் அல்லது பாதுகாப்பான பாலுறவு கொள்ள வேண்டும் (ஆண் உறுப்பை பெண் உறுப்புக்குள் செலுத்தக் கூடாது அல்லது பாலுறவின் போது ஆணுறைகளை பயன்படுத்த வேண்டும்).


பாதுகாப்பான தாய்மை குறித்த உபதகவல்கள் : 1  3  4  6  9

  << முந்தைய தலைப்பு   அடுத்த தலைப்பு>>

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: