பேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்

 
குழந்தை பிறப்பை திட்டமிடுதல்
பாதுகாப்பான தாய்மை
குழந்தை வளர்ச்சி மற்றும் இளம்பருவ கற்கும் தன்மை
தாய்ப்பால் அளித்தல்
ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி
தடுப்பூசி
வயிற்றுப்போக்கு
இருமல், சளி மற்றும் இதர ஆபத்தான சுகவீனங்கள்
சுகாதாரம்
மலேரியா
எச்.ஐ.வி / எயிட்ஸ்
காயத்தடுப்பு முறை
பேரழிவு மற்றும் அவசரகால நிலை
குறிப்புகளின் சுருக்கம்

பேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள் பற்றியதான தகவல்களை பகிர்ந்து, நடைமுறைப் படுத்துவதின் அவசியம் என்ன?

பேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமை சூழ்நிலைகளில் சிறுவர்கள் மிகமோசமாக உடல்நலக்குறைவு மற்றும் கடும் மனத்தாக்கத்திற்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு தனி பராமரிப்பு மற்றும் கவனமும் தேவை.

உலகின் மதிப்பீடு செய்யப்பட்ட 27 மில்லியன் அகதிகள் மற்றும் 30 மில்லியன் இடம் பெயர்ந்தோர்களில்,80 சதத்தினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 1990 லிருந்து 1999 வரை ஏற்பட்ட பேரழிவுகளால் ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரழிவுகள் ஈடில்லாதளவு ஏழைகளையே மிகவும் பாதிக்கிறது. 90 சதத்திற்கும் மேற்பட்ட பேரழிவுகளால் ஏற்படும் மரணம் வளர்ந்து வரும் நாடுகளில் நிகழ்கிறது. உலகம் முழுவதும் (சில) 90 மில்லியன் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், காயப்பட்டுள்ளனர், அநாதைகளாக்கப்பட்டுள்ளனர் அல்லது அவர்களுடைய பெற்றோரிடமிருந்து தனிமைப்படுதப்பட்டுள்ளனர்.

முக்கிய குறிப்புகள்:

ஒவ்வொரு குடும்பமும் மற்றும் சமுதாயமும் பேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவைகள் என்ன?

  1. பேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமை சூழ்நிலைகளில் சிறுவர்கள், அவசியம், முக்கியமான உடல் நலப் பராமரிப்பான தட்டம்மை தடுப்பூசி, போதுமான உணவு மற்றும் கூடுதல் நுண் ஊட்டச்சத்து போன்றவற்றை பெற வேண்டும்.
  2. நெருக்கடி நிலைமை சூழ்நிலைகளில் தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் அவசியம்.
  3. சண்டை நடக்கும் சூழ்நிலைகளின் போது, எப்பொழுதும் சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களால் அல்லது நன்கு தெரிந்த நபர்களால் பராமரிக்கப்படுவது விரும்பப்படத்தக்கது. ஏனென்றால், இது பிள்ளைகளுக்கு தாங்கள் பத்திரமாக இருப்பதாக உணரச் செய்கிறது.
  4. ீடுகளில் நடக்கும் வன்முறைகள், போர்கள் மற்றும் பிற பேரழிவுகள் பிள்ளைகளுக்கு பயத்தை உண்டாக்குகிறது. இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது, சிறுவர்களுக்கு தனி கவனிப்பு, அதிகப்படியான அன்பு மற்றும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த மற்றும் அவர்களின் வயதிற்கு ஏற்றபடி அவர்களின் அனுபவத்தை விவரிக்க போதுமான சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும்.
  5. நிலக்கண்ணி வெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகள் மிகவும் ஆபத்தானவை. அவற்றை கண்டிப்பாக தொடவும் மற்றும் மிதிக்கவும் கூடாது. பிள்ளைகள் விளையாட பாதுகாப்பான இடங்களை அமைக்க வேண்டும். தெரியாத பொருட்களை தொடக்கூடாது என அவர்களை எச்சரிக்க வேண்டும்.


பாதுகாப்பான தாய்மை குறித்த உபதகவல்கள் : 1  2  3  4  5

  << முந்தைய தலைப்பு   அடுத்த தலைப்பு>>

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: