இருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்கள் தகவல் குறிப்பு - 5
| |
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக சமையல் அடுப்பு புகை மற்றும் புகையிலையிலிருந்து வரும் புகை போன்றவற்றிற்கு உட்படுத்தப்படும்போது, அவை நோய் ஏற்பட இடர்காரணியாக உள்ளன. குழந்தைகள் புகைநிறைந்த சூழலில் வாழும்போது, அவர்களுக்கு நிமோனியா மற்றும் பிற சுவாசசம்பந்தமான பிரச்சினைகள் வருகிறது. தாயின் வயிற்றிலுள்ள குழந்தைகள் கூட புகையினால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கர்ப்பிணிப் பெண்ணானவள் அவசியம் புகைபிடிக்கக்கூடாது மற்றும் புகைக்கு உட்படுத்தப்படக்கூடாது. புகையிலை புகைக்கும் பழக்கம் பொதுவாக விடலைப் பருவத்தில் ஆரம்பிக்கிறது. தங்களைச் சுற்றியுள்ள பிற விடலைப் பருவத்தினர் புகைபிடிப்பதாலோ, புகையிலை விளம்பரம் மற்றும் வியாபாரம் அதிகமாக இருந்தாலோ அல்லது புகையிலை பொருட்கள் மலிவாகவும் சுலபமாக கிடைக்கும் சூழலில், விடலைப் பருவத்தினர் புகையிலை புகைக்கும் பழக்கத்தினை ஆரம்பிக்கின்றனர். விடலைப் பருவத்தினரிடையே அவசியம் புகைபிடிப்பதை தவிர்க்கும்படி வலியுறுத்த வேண்டும். மேலும், புகைபிடிப்பதினால் ஏற்படும் ஆபத்தினை, தங்களின் நண்பர்களுக்குச் கூறி, எச்சரிக்கவும், ஊக்கப்படுத்த வேண்டும் பாதுகாப்பான தாய்மை குறித்த உபதகவல்கள் : 1 2 3 4 5 |
| << முந்தைய தலைப்பு அடுத்த தலைப்பு>> |


