இருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்கள் தகவல் குறிப்பு - 4

 
குழந்தை பிறப்பை திட்டமிடுதல்
பாதுகாப்பான தாய்மை
குழந்தை வளர்ச்சி மற்றும் இளம்பருவ கற்கும் தன்மை
தாய்ப்பால் அளித்தல்
ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி
தடுப்பூசி
வயிற்றுப்போக்கு
இருமல், சளி மற்றும் இதர ஆபத்தான சுகவீனங்கள்
சுகாதாரம்
மலேரியா
எச்.ஐ.வி / எயிட்ஸ்
காயத்தடுப்பு முறை
பேரழிவு மற்றும் அவசரகால நிலை
குறிப்புகளின் சுருக்கம்

ஒரு குழந்தைக்கு கடுமையான இருமல் இருந்தால், அக்குழந்தைக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை. அக்குழந்தைக்கு டியூபர்குளோஸிஸ் (எலும்புருக்கிநோய்) இருக்கலாம். இது ஒரு நுரையீரலில் ஏற்படும் நோய்தொற்று.

டியூபர்குளோஸிஸ் என்பது ஒரு மோசமான நோய். இது குழந்தையை கொன்றுவிடும், அல்லது, நுரையீரலில் நிரந்தர சிதைவினை ஏற்படுத்தும். குடும்பங்கள் கீழ்க்காண்பவைகளை உறுதி செய்தால், குழந்தைகளுக்கு டியூபர்குளோஸிஸ் ஏற்படுவதை தடுக்கலாம்.

• முழுமையான தடுப்பூசி போடுதல் - சிலவகை டியூபர்குளோஸிஸிலிருந்து, பிசிஜி தடுப்பூசி ஓரளவு பாதுகாப்பு தருகிறது.

• குழந்தைகளை டியூபர்குளோஸிஸினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள இடத்திலிருந்து தள்ளி வைத்தல். மேலும், இரத்தத்துடன் வெளியேறும் சளியுடன் இருமல் உள்ள நபர்களிலிருந்தும் தள்ளி வைத்தல்.

சுகாதாரப் பணியாளர் டியூபர்குளோஸிஸ் நோய்க்கான சிறப்பு மருந்துகளைக் கொடுத்தால், அச்சுகாதாரப் பணியாளரின் சொற்படி, குழந்தை நன்றாக காணப்பட்டாலும், அவர் எத்தனை நாட்கள் வரை மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறாரோ அத்தனை நாட்களுக்கும், குழந்தைக்கு தவறாமல் மருந்தினை முழுவதும் கொடுக்க வேண்டும்.

பாதுகாப்பான தாய்மை குறித்த உபதகவல்கள் :  2   3   4   5



  << முந்தைய தலைப்பு   அடுத்த தலைப்பு>>

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: