இருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்கள் தகவல் குறிப்பு - 3

 
குழந்தை பிறப்பை திட்டமிடுதல்
பாதுகாப்பான தாய்மை
குழந்தை வளர்ச்சி மற்றும் இளம்பருவ கற்கும் தன்மை
தாய்ப்பால் அளித்தல்
ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி
தடுப்பூசி
வயிற்றுப்போக்கு
இருமல், சளி மற்றும் இதர ஆபத்தான சுகவீனங்கள்
சுகாதாரம்
மலேரியா
எச்.ஐ.வி / எயிட்ஸ்
காயத்தடுப்பு முறை
பேரழிவு மற்றும் அவசரகால நிலை
குறிப்புகளின் சுருக்கம்

பிறந்த முதல் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு முழுக்க தாய்ப்பால் கொடுப்பது, போஷாக்கான உணவுகளை அளிப்பது, தடுப்பூசிகளை முழுமையாக போடுவதின் மூலமும் குழந்தைகளுக்கு நிமோனியா வருவதை தடுத்து நிறுத்த உதவ முடியும்

தாய்ப்பால் கொடுப்பது நிமோனியா மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கிறது. குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் முக்கியம்.

எந்த வயதிலும், நன்கு போஷிக்கப்பட்ட குழந்தை நோய்வாய்ப்படலாம் அல்லது இறக்கலாம்.

வைட்டமின்-ஏ மோசமான சுவாச சம்மந்தமான நோய்கள் மற்றும் பிற உடல்நலக்கேடுகளை எதிர்த்து, தடுத்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், வெகுவிரைவாக குணமடையச் செய்கிறது. தாய்ப்பால், ஈரல், சிவப்பு பாமாயில், மீன், பால் பொருட்கள், முட்டை, சில ஆரஞ்சு, மஞ்சள் நிற பழங்கள், காய்கறிகள் மற்றும் பச்சிலை காய்கறிகளில் வைட்டமின்-ஏ உள்ளது. கூடுதல் வைட்டமின்-ஏ பெற தேவையான மருந்துகள், சுகாதாரப் பணியாளர்களால் வழங்கப்படுகிறது

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் தடுப்பூசி அவசியம் போடப்பட வேண்டும். அப்படி தடுப்புசி போடுவதால், குழந்தைக்கு தட்டம்மை வராமல் பாதுகாக்கப்படுகிறது. தட்டம்மையானது நிமோனியா மற்றும் பிற சுவாச உறுப்பு சம்பந்தமான நோய்களான, கக்குவான் இருமல் மற்றும் டியூபர்குளோஸிஸ் போன்றவை தோன்ற வழிவகுக்கிறது.

பாதுகாப்பான தாய்மை குறித்த உபதகவல்கள் : 1   2   3   4   5



  << முந்தைய தலைப்பு   அடுத்த தலைப்பு>>

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: