இருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்கள் தகவல் குறிப்பு - 2
| |
சில நேரங்களில் இருமல் மற்றும் சளி போன்றவை மோசமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு அடையாளங்களாகும். ஒரு குழந்தை வேகமாக சுவாசித்தாலோ அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டாலோ அக்குழந்தைக்கு நிமோனியா (சளிக்காய்ச்சல்) இருக்கும். இது ஒரு நுரையீரல் நோய்தொற்று. இது ஒரு ஆபத்தான நோய் என்பதால், அக்குழந்தைக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை பெரும்பாலான வேலைகளில், இருமல், சளி, தொண்டைப்புண் மற்றும் மூக்கு வடிதல் போன்றவை எவ்வித மருந்துகளும் இன்றி குணமாகிவிடும். ஆனால், சில நேரங்களில் மேற்கூறிய சுகவீனங்கள் நிமோனியாவின் அடையாளங்களாகளாம். இவற்றை குணப்படுத்த, ஆன்டிபயாடிக் எனப்படும் நோய் எதிர்உயிர் மருந்துகள் தேவைப்படுகிறது. ஒரு சுகாதாரப்பணியாளர், நிமோனியா சிகிச்சைக்காக ஆன்டிபயாடிக் மருந்தினை கொடுத்தால், அவர் பின்பற்றக் கூறிய குறிப்புகளை கைக்கொள்வது அவசியம். எவ்வளவு காலம் மருந்தினை குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என சுகாதாரப்பணியாளர் கூறியுள்ளாரோ, அவ்வளவு காலம் வரை அவசியம் மருந்தினை குழந்தைக்கு கொடுக்க வேண்டும். குழந்தை குணமடைவது போல் காணப்பட்டாலும், குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து குழந்தைக்கு மருந்தினை கொடுக்க வேண்டும். குழந்தைகளை பராமரிப்பவர்கள், நிமோனியாவின் ஆபத்தான தன்மையையும் மற்றும் அக்குழந்தைகளுக்கு உடனடி மருத்துவ பராமரிப்பு தேவை என்பதனை உணராததினால் பல குழந்தைகள் வீடுகளிலேயே மரிக்கின்றன. பல லட்சம் குழந்தைகள் நிமோனியாவினால் இறப்பதை கீழ்க்காண்பவைகளை அறிந்திருந்தால் தடுத்து நிறுத்தலாம் • பெற்றோர் மற்றும் குழந்தையை பராமரிப்பவர்கள், வேகமாக மற்றும் சுவாசிப்பதில் சிரமம் காணப்படுதல் ஆபத்தான அடையாளங்கள் என உணர்ந்து, அக்குழந்தைக்கு உடனடி மருத்துவ உதவி தேவை என்பதை அறிந்திருத்தல் • பெற்றோர் மற்றும் பராமரிப்பவர்கள், எங்கிருந்து மருத்துவ உதவி பெறலாம் என்பதை அறிந்திருத்தல். • மருத்துவ உதவி மற்றும் குறைந்த செலவில் ஆன்டிபயாடிக்ஸ் மருந்து உடனே கிடைக்கிறது என அறிந்திருத்தல். கீழ்க்காணும் அறிகுறிகள் ஏதேனும் இருப்பின், குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கோ அல்லது நன்குபயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரிடமோ அழைத்துச் செல்ல வேண்டும். • குழந்தை எப்போதையும் விட மிக வேகமாக சுவாசித்தால்- உ-ம் 2 முதல் 12 மாத குழந்தைகள் ஒரு நிமிடத்திற்கு 50 அல்லது அதற்கு மேற்பட்ட முறை சுவாசித்தல். 12 மாதங்கள் முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் நிமிடத்திற்கு 40 அல்லது அதற்கு மேற்பட்ட முறை சுவாசித்தல் • குழந்தை சுவாசிக்கும் போது கஷ்டத்துடன் சுவாசித்தாலோ அல்லது மூச்சுத்திணறல் ஏற்படுதல். • குழந்தை மூச்சு உள்ளிழுக்கும் போது, மார்பின் கீழ்ப்பகுதி உள்ளிழுத்தல் அல்லது வயிறு மேலும் கீழும் நகருவது போல் காணப்படுதல் • குழந்தைக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் இருத்தல் • குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது தண்ணீர் குடிக்க இயலாதிருத்தல் • குழந்தை அடிக்கடி வாந்தி பண்ணுதல். |
| << முந்தைய தலைப்பு அடுத்த தலைப்பு>> |


