இருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்கள் தகவல் குறிப்பு - 1
| |
ஒரு குழந்தைக்கு இருமல் அல்லது சளி இருந்தால், அக்குழந்தையினை கதகதப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அக்குழந்தையை முடிந்த அளவுக்கு, சாப்பிடவும், குடிக்கவும் உற்சாகப்படுத்த வேண்டும். குழந்தைகள் மற்றும் மிகவும் சிறுபிள்ளைகள் தங்கள் உடல் வெப்பத்தினை சுலபமாக இழக்கின்றனர். அவர்களுக்கு இருமல் மற்றும் சளி இருக்கும்போது, அவர்களை அவசியம் துணிகளால் மூடி, கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இருமல், சளி, மூக்குவடிதல அல்லது தொண்டைப்புண் ஆகியவை இருந்தாலும், சாதாரணமாக சுவாசிக்கின்ற குழந்தைகளை, வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்கலாம். அவர்கள் மருந்துகள் இன்றியே குணமடைவர். அவர்களை மிதமான வெப்ப சூழலில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிக வெப்பமான சூழலை தடுக்க வேண்டும். மேலும், அதிக அளவு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட வேண்டும். சுகாதார பணியாளர் பரிந்துரைத்தால் மாத்திரமே, மருந்துகளைக் கொடுக்க வேண்டும். காய்ச்சலுடன் இருக்கும் ஒரு குழந்தைக்கு, அவசியம் ஓரளவு குளிர்ந்த நீரை பஞ்சுவினால் தொட்டு, உடலைத் துடைக்க வேண்டும். மிகவும் குளிர்ந்த நீரை பயன்படுத்தக்கூடாது. மலேரியா காய்ச்சல் பொதுவாக உள்ள பகுதிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுதல் ஆபத்தானதாக இருக்கலாம். குழந்தையினை உடனடியாக சுகாதார பணியாளரைக் கொண்டு பரிசோதித்தல் வேண்டும். இருமல் மற்றும் சளி உள்ள குழந்தையின் மூக்கை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக குழந்தை சாப்பிடுவதற்கு முன் அல்லது உறங்கச் செல்வதற்கு இவ்வாரு செய்தல் வேண்டும். சுத்தம் செய்யும் போது மூக்கை சுற்றி காணப்படும் ஈரமான தட்ப சூழல், குழந்தை சுவாசிப்பதை சுலபமாக்குகிறது, அகண்ட கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள சுடுதண்ணீரிலிருந்து வெளிவரும் நீராவியினை சுவாசிக்கும் போது, குழந்தை சுவாசத்தினை எளிதாக்க உதவுகிறது. ஆனால், கொதிக்கும் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது தாய்ப்பால் உட்கொள்ளும் குழந்தைக்கு இருமல் அல்லது சளி இருந்தால் உணவு உட்கொள்வது கடினமாக இருக்கலாம். ஆனால் தாய்ப்பாலானது சுகவீனங்களை எதிர்த்து போராட உதவுகிறது. இது குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியம். எனவே தாயானவள் குழந்தைக்கு தொடர்ந்து அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தையானது தாய்ப்பாலை தாயின் மார்பிலிருந்து குடிக்க இயலாத பட்சத்தில், தாய்ப்பாலை ஒரு சுத்தமான கிண்ணத்தில் கறந்து, பின்னர் அந்த கிண்ணத்தில் உள்ள தாய்ப்பாலை குழந்தைக்கு அருந்த கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளை அவசியம் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் குடிக்க உற்சாகப்படுத்த வேண்டும். சுகவீனம் நீங்கின பின், குழந்தைக்கு அவசியம் குறைந்தது ஒரு வாரகாலம், ஒவ்வொரு நாளும் அதிக உணவு கொடுக்கப்பட வேண்டும். குழந்தை நோய்வாய் படுவதற்கு முன் உள்ள உடல் எடை வரும் வரை, குழந்தை முழுமையாக சுகம் பெறவில்லை எனக் கருதலாம். இருமல் மற்றும் சளி சுலபமாக பரவும். இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் சிறுபிள்ளைகளுக்கு அருகில் இருமுவது, தும்முவது மற்றும் துப்புவது போன்றவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான தாய்மை குறித்த உபதகவல்கள் : 1 2
3
4 5 |
| << முந்தைய தலைப்பு அடுத்த தலைப்பு>> |


