|
இருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்கள் பற்றின தகவல்களை
பகிர்ந்து கொண்டு செயல்படுவதின் அவசியம் ஏன்?
இருமல், சளி, தொண்டைப்புண் (தொண்டை கட்டுதல்) மற்றும் மூக்கு ஒழுகுதல்
போன்றவை சிறுபிள்ளைகளின் வாழ்க்கையில் பொதுவாக நிகழக்கூடியவை. இவை
குறித்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ஆயினும், சில வேலைகளில், இருமல் மற்றும் சளி என்பது நிமோனியா
(சளிக்காய்ச்சல்) அல்லது டியூபர்குளோஸிஸ் (டி.பி. /எலும்புருக்கி நோய்)
போன்ற மிகவும் மோசமான சுகவீனங்களுக்கான அபாயகரமான அடையாளங்களாகும்
-
|
ஒவ்வொரு குடும்பமும் மற்றும் சமுதாயமும்
இருமல், சளி மற்றும் மிகவும் மோசமான சுகவீனங்களைப் பற்றி அறிந்து கொள்ள
வேண்டியவை பின்வருபவை
- ஒரு குழந்தைக்கு இருமல் அல்லது சளி இருந்தால், அக்குழந்தையினை
கதகதப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அக்குழந்தையை முடிந்த
அளவுக்கு, சாப்பிடவும், குடிக்கவும் உற்சாகப்படுத்த வேண்டும்.
- சில நேரங்களில் இருமல் மற்றும் சளி போன்றவை மோசமான உடல்நலப்
பிரச்சினைகளுக்கு அடையாளங்களாகும். ஒரு குழந்தை வேகமாக சுவாசித்தாலோ
அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டாலோ அக்குழந்தைக்கு நிமோனியா
(சளிக்காய்ச்சல்) இருக்கும். இது ஒரு நுரையீரல் நோய்தொற்று. இது ஒரு
ஆபத்தான நோய் என்பதால், அக்குழந்தைக்கு உடனடி மருத்துவ சிகிச்சை
தேவை.
- பிறந்த முதல் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு முழுக்க தாய்ப்பால்
கொடுப்பது, போஷாக்கான உணவுகளை அளிப்பது, தடுப்பூசிகளை முழுமையாக போடுவதின்
மூலமும் குழந்தைகளுக்கு நிமோனியா வருவதை தடுத்து நிறுத்த உதவ
முடியும்.
- ஒரு குழந்தைக்கு கடுமையான இருமல் இருந்தால், அக்குழந்தைக்கு உடனடி
மருத்துவ சிகிச்சை தேவை. அக்குழந்தைக்கு டியூபர்குளோஸிஸ்
(எலும்புருக்கிநோய்) இருக்கலாம். இது ஒரு நுரையீரலில் ஏற்படும்
நோய்தொற்று
- குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பாக சமையல் அடுப்பு
புகை மற்றும் புகையிலையிலிருந்து வரும் புகை போன்றவற்றிற்கு
உட்படுத்தப்படும்போது, அவை நோய் ஏற்பட இடர்காரணியாக உள்ளன
|
|
பாதுகாப்பான தாய்மை குறித்த உபதகவல்கள் : 1 2
3
4 5
|