குழந்தை வளர்ச்சி மற்றும் இளம்பருவ கற்கும் தன்மை

 
குழந்தை பிறப்பை திட்டமிடுதல்
பாதுகாப்பான தாய்மை
குழந்தை வளர்ச்சி மற்றும் இளம்பருவ கற்கும் தன்மை
தாய்ப்பால் அளித்தல்
ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி
தடுப்பூசி
வயிற்றுப்போக்கு
இருமல், சளி மற்றும் இதர ஆபத்தான சுகவீனங்கள்
சுகாதாரம்
மலேரியா
எச்.ஐ.வி / எயிட்ஸ்
காயத்தடுப்பு முறை
பேரழிவு மற்றும் அவசரகால நிலை
குறிப்புகளின் சுருக்கம்

குழந்தை வளர்ச்சி மற்றும் இளம்பருவ கற்கும் தன்மை குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் உள்ள முக்கியத்துவங்கள் பின்வருமாறு

குழந்தைப் பருவத்தின் முதல் எட்டு வருடங்கள், குறிப்பாக முதல் மூன்று வருடங்கள், மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாக உள்ளன. இந்த காலங்களின் போது, குழந்தைகள் மிக விரைவாக கற்கின்றனர். அன்பு, அரவணைப்பு, கவனிப்பு, ஊக்கப்படுத்துதல், மனரீதியாக உந்தப்படுதல் கூடவே சத்து நிறைந்த உணவு மற்றும் பராமரிப்பு போன்றவற்றைப் குழந்தைகள் மற்றும் சிறுபிள்ளைகள் பெறும்பொழுது, சீராக வளர்வதோடு, விரைவாக கற்கவும் செய்கின்றனர்.

சட்டப்பூர்வமாக பிறப்பை பதிவுசெய்தல், உடல் நல பராமரிப்பு, சத்துணவு, கல்வி, பிரச்சனைகளாகிய தீமை, அத்துமீறல் மற்றும் தீண்டாமை போன்றவைகளிலிருந்து பாதுகாப்பு, ஆகியவை அனைத்துக் குழந்தைகளுக்கும் உரிய உரிமைகளாகும். இந்த உரிமைகள் அனைத்தும் மதிக்கப்படுவதும், பாதுகாக்கப்படுவதும், நிறைவேற்றப்படுவதும், பெற்றோர் மற்றும் அரசாங்கத்தின் கடமையாகும்.

முக்கிய குறிப்புகள் :
குழந்தை வளர்ச்சி மற்றும் இளம்பருவ கற்கும் தன்மை குறித்து ஒவ்வொரு குடும்பமும், சமூகமும் அறிந்து கொள்ள வேண்டியவைகள் பின் வருமாறு

1.குழந்தைப் பருவத்தின் முதல் எட்டு வருடங்கள் குறிப்பாக முதல் மூன்று வருடங்கள் ஒரு குழந்தைக்கு கிடைக்கும் பராமரிப்பு, அவன்/அவளுடைய வாழ்க்கை முழுவதிற்கும் மிகவும் முக்கியமானதாகும்

2.பிறந்தது முதல், குழந்தைகள் சீராக கற்கவும் துவங்குகிறார்கள். சத்தான உணவு மற்றும் நேர்த்தியான பராமரிப்போடு அன்பு, அரவணைப்பு, மனரீதியான ஊக்கம் போன்றவற்றை குழந்தைகள் பெறும்பொழுது, அவர்கள் வளர்வதோடு விரைவாக கற்கவும் செய்கின்றனர்.

3.குழந்தைகள் விளையாடவும் புதிய காரியங்களைக் கற்றுக் கொள்ளவும் ஊக்கப்படுத்துதல், அவர்கள் சமூகம், உடல், உணர்வு மற்றும் அறிவுப்பூர்வமாக கற்கவும், வளரவும் உதவுகிறது.

4.குழந்தைகள் தங்களுக்கு மிக நெருக்கமாக இருப்பவர்களைப் பார்த்து தாங்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என கற்றுக் கொள்கின்றனர்.

5.குழந்தைகளுடைய வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியன சீராக இல்லாது இருப்பதைக் காண்பிக்கும் எச்சரிக்கை அடையாளங்களை பெற்றோரும், குழந்தைக் கவனிப்பாளர்களும் அறிந்திருக்க வேண்டும்.

குழந்தை பிறப்பை திட்டமிடுதல் குறித்த உபதகவல்கள்        5

  << முந்தைய தலைப்பு   அடுத்த தலைப்பு >>

Powered by Plone CMS, the Open Source Content Management System

This site conforms to the following standards: