குறிப்புகளின் சுருக்கம்
| |
வாழ்க்கைக்குத் தேவையான குறிப்புகள் - முக்கிய தகவல்கள் • குழந்தைப் பிறப்புகளுக்கிடையே
குறைந்தது இருவருடம் இடைவெளி விடுதல்
• 18 வயதுக்கு முன்போ அல்லது 35 வயதுக்கு பின்போ, கருத்தரித்தலை தவிர்த்தல் • மொத்தத்தில், நான்கு முறைக்குமேல் கருத்தருப்பதை தவிர்த்தல். 2. அனைத்து கர்ப்பிணி பெண்களும் பிரசவத்திற்கு முன்பு உள்ள காலங்களில் சுகாதாரப் பணியாளரைச் சந்தித்து பராமரிப்பைப் பெறுவேதாடு, திறமையான சுகாதாரப் பணியாளரின் உதவிகொண்டு பிரசவத்தை மேற்கொள்ளல் வேண்டும். அனைத்து கர்ப்பிணிப் பெண்களும், அவர்களது குடும்பத்தாரும் கர்ப்பக்காலங்களில் ஏற்படக்கூடிய ஆபத்தான அறிகுறிகள் குறித்து அறிந்துகொள்ளுதல் மிக அவசியம். மேலும் பிரச்சினைகள் எழும்போது, அதற்கேற்ற சரியான தீர்வைக்காண வேண்டும். 3. பிறந்தது முதல் குழந்தைகள் கற்கவும் கவனிக்கவும் துவங்குகிறார்கள். சத்தான உணவு, உடல்நலப் பராமரிப்பு, அரவணைப்பு போன்றவற்றை பெறுகின்ற குழந்தைகள், நன்றாக வளர்வேதாடு, விரைவாக கற்க்கவும் செய்கின்றனர். உன்னிப்பாக கவனிக்கச் செய்தல், திறமைகளை வெளிப்படுத்துதல், விளையாடுதல் மற்றும் ஆராய ஊக்கப்படுத்துதல் ஆகியவை, குழந்தைகள் விரைவாக கற்றுக் கொள்ள உதவும். மேலும், உடல், அறிவு மற்றும் சமூகரீதியாக குழந்தைகள் வளரவும் ஏதுவாகும். 4. பிறந்த குழந்தைகளுக்கு, முதல் ஆறுமாதங்களுக்கு தேவையான உணவு மற்றும் பானம், தாய்ப்பால் மட்டுமே. ஆறுமாதங்களுக்குப் பிறகு, தாய்ப்பாலுடன் பிற சத்துள்ள உணவுகளும் குழந்தைகளுக்குத் தேவைப்படுகின்றது. 5. கர்ப்ப காலங்களிலும், குழந்தையின் முதல் இரண்டு வருடங்களிலும் சத்துக்குறைந்த ஊட்டத்தினால், குழந்தைகளின் மனம் மற்றும் உடல் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படுகின்றது. பிறந்த நாள்முதல் இரண்டு வயது வரையிலும், ஒவ்வொரு மாதமும், குழந்தைகளின் எடையை கணக்கிட வேண்டும். ஒவ்வொரு இரண்டு மாதகாலத்தில் குழந்தைகளின் எடை அதிகரிக்கவில்லையெனில், ஏதோ ஒரு வகையில் குழந்தைகள் பாதிப்படைந்துள்ளனர். 6. வளர்ச்சி பற்றாக்குறை, ஊனம் மற்றும் இறப்புக்குக் காரணமான நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க, முதல் வருடத்தில் தடுப்பூசிகள் போடுவது மிகமிக அவசியம். குழந்தை பெறக்கூடிய வயதில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் டெட்டனஸ் என்ற நோயிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். ஏற்கெனவே தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தால் கூட, சுகாதாரப் பணியாளரைச் சந்தித்து பரிசோதிப்பது நல்லது. 7. வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தாய்ப்பால், பழச்சாறு, சர்க்கரை-உப்புக்கரைசல் (ஓ.ஆர்.எஸ்.) போன்றவற்றை மிக அதிக அளவில் குடிப்பது அவசியமாகும். அடிக்கடி அதிக நீர் மற்றும் இரத்தத்தோடு கூடிய வயிற்றுப்போக்கால் பாதிக்கப்ட்ட குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால், உடனடியாக சுகாதாரமையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும். 8. சாதாரணமாக அனைத்து குழந்தைகளுக்கும் இருமல் மற்றும் ஜலேதாஷம் தானாகவே குணமாகிவிடும். ஆனால், இருமலால், வேகமாகவோ அல்லது சுவாசிக்க கஷ்டப்படுகிற குழந்தைகள் உடனடியாக சுகாதார மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். 9. மலம் மற்றும் சிறுநீர் கழிப்பிடத்தை சுத்தமாக வைத்தல், மலம் கழித்த பின்பும் உணவு அருந்தும் முன்பும் சோப்பு அல்லது தண்ணீரால் கரங்களை கழுவுதல், பாதுகாக்கப்பட்ட குடிநீரை உபேயாகித்தல், உணவு மற்றும் நீரை சுத்தமாக வைத்தல் போன்ற சுகாதார பழக்கங்களை கடைப்பிடிப்பதால், பல விதமான சுகவீனங்கள் தடுக்கப்படுகிறது. 10. கொசுக்கடி மூலம் பரவுகின்ற மலேரியா ஒரு உயிர்க்கொல்லி நோயாகும். தரமான பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட கொசுவலையை உபேயாகித்தல், மலேரியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக சுகாதாரப் பணியாளர் உதவியோடு பரிசோதித்தல், கர்ப்பிணிப் பெண்களை மலேரியா தடுப்பு மாத்திரைகளை உட்கொள்ளச் செய்தல் போன்ற பணிகளை, மலேரியா பரவலாகக் காணப்படும் இடங்களில் மேற்கொள்ள வேண்டும். 11. எயிட்ஸ் உயிர்க்கொல்லி நோயானாலும், தடுக்கப்படக்கூடிய ஒன்றாகும்.
எயிட்ஸ் நோய்க்குக் காரணமான எச்.ஐ.வி என்னும் வைரஸ் பின்வரும் காரணங்களால்
பரப்பப்படுகிறது.
12. பெற்றோர்களும், பாதுகாப்பாளர்களும் குழந்தைகளை நன்றாக கவனிப்பதினாலும், சுற்றுப்புறத்தை பாதுகாப்பாக பராமரிப்பதாலும் மிக ஆபத்தான விபத்துக்களை தடுக்க முடியும். 13. பேரழிவு மற்றும் அவசரநிலை காலங்களில், குழந்தைகளுக்கு, தட்டம்மை
தடுப்பூசி மற்றும் கூடுதல் நுண்ணூட்டம் போன்ற உடல் நிலை பராமரிப்பு
செய்முறைகள் அளித்தல் வேண்டும். இக்கட்டான சூழ்நிலைகளில் குழந்தைகள்
தங்கள் பெற்றோர் மற்றும் நன்கு அறிமுகமான நபர்கள் மூலம் கவனிக்கப்பட
முன்னுரிமை கொடுப்பது மிகச்சிறந்ததாகும். குறிப்பாக, இவ்வேளைகளில்,
தாய்ப்பால் ஊட்டல் அவசியம் ஆகும். |
| << முந்தைய தலைப்பு |


